Singer : Madhu Balakrishnan
Music by : Vidyasagar
Male : {Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae
Penn poovae..vaa..} (2)
Male : Vaan mithakkum..kangalukku
Mayiliragaal..maii idava
Maarbuthaikkum kaalgalukku
Mani kolusu..naan idava
Male : Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae
Penn poovae..vaa…
Male : Selva magal
Alughaip pol
Oru sillendra
Sangeetham ketathillai
Male : Pon magalin..Punnagai pol
Yuga pookkalukku
Punnaigaikka
Theriyavillai
Male : En pillai..Ettu vaitha
Nadaiyai pola
Endha ilakkana kavithaiyum
Nadantha thillai
Male : Muthukkal therikindra
Mazhalai pola
Oru munnooru
Mozhigalil vaarthai illai
Male : Thanthaikkum thaai
Amutham suranthathamma
En thangathai maarbodu
Anaikkaiyilae
Male : Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae
Penn poovae..vaa…
Male : Pillai nila..palli sella
Aval kaiyodu en idhayam
Thudikka kanden
Male : Deiva magal..thoongayilae
Sila deivangal
Thoongugindra
Azhagai kanden
Male : Sitraadai katti aval
Siritha pothu..ennai
Petraval saayal endru
Pesi konden
Male : Mel naattu aadai katti
Nadantha pothu..ival
Meesai illatha
Magan endru sonnen
Male : Penn pillai
Thani arai pugunthathilae
Oru pirivukku othigaiyai
Paarthu konden
Male : {Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae
Penn poovae..vaa..} (2)
Male : Vaan mithakkum..kangalukku
Mayiliragaal..maii idava
Maarbuthaikkum kaalgalukku
Mani kolusu..naan idava…
பாடகா் : மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : செல்வ மகள் அழுகை
போல் ஒரு சில்லென்ற சங்கீதம்
கேட்டதில்லை
ஆண் : பொன் மகளின்
புன்னகைப்போல் யுக
பூக்களுக்கு புன்னகைக்க
தெரியவில்லை
ஆண் : என் பிள்ளை
எட்டு வைத்த நடையை
போல எந்த இலக்கண
கவிதையும் நடந்ததில்லை
ஆண் : முத்துக்கள்
தெறிக்கின்ற மழலை
போல ஒரு முந்நூறு
மொழிகளில் வார்த்தை
இல்லை
ஆண் : தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : பிள்ளை நிலா
பள்ளி செல்ல அவள்
கையோடு என் இதயம்
துடிக்கக் கண்டேன்
ஆண் : தெய்வ மகள்
தூங்கயிலே சில
தெய்வங்கள் தூங்குகின்ற
அழகை கண்டேன்
ஆண் : சிற்றாடை கட்டி
அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று
பேசிக்கொண்டேன்
ஆண் : மேல்நாட்டு ஆடை
கட்டி நடந்த போது இவள்
மீசை இல்லாத மகன்
என்று சொன்னேன்
ஆண் : பெண் பிள்ளை
தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை
பார்த்துக் கொண்டேன்
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா