Singers : S. P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by : Ilayaraja

Male : Poonghaatru un per solla ketenae indru
Female : Neeroottru yen thol konja paarthenae indru

Male : Theerththa karai orathilae
Female : Thaen sittughal ullathilae

Male : Kalyaana vaibhoghamdhaan
Female : Neeroottru yen thol konja paarthenae indru

Chorus : Lala laala laa laalaa laa lala
Laa laalaalaalaa laa laaa…

Male : Moonghil kaattoram mynaakal rendu
Mogha pan paadudhae….
Maelai kaattrodu kai serthu naanal
Kaadhal kondaadudhae..aaeee…

Female : Aalam vizhudhodu kili kootam aadum
Kaalam idhuvallavaa..aaa…
Eera siraghodu isai paadi thiriyum
Neram idhuvallavaa….

Male : Yedhaedho yennam thondra yeghaandham inghae

Female : Naan kaanum vannam yaavum needhanae anbae

Male : Vannam maaraamal meendum meendum

Female : Aasaigal eedaera koodum….

Male : Poonghaatru un per solla ketenae indru

Female : Jenma jenmangal aanaalum yenna
Jeevan unnodudhan
Devi sreedevi poovaaram sooda
Devan yennodudhaan..aaannn…

Male : Neela vaan kooda niram maari poghum
Nesam niram maarumaa
Kaala kaalangal ponaalum yenna
Kaadhal thadam maarumaa…

Female : Oyaamal unnai konjum
Oodhappoo vannam

Male : Raajaavin ah mutham kollum
Rojaappoo kannam

Female : Vaadai theendaadha vaazhaith thottam

Male : Aanandha ellaigal kaattum

Male : Poonghaatru un per solla ketenae indru
Female : Neeroottru yen thol konja paarthenae indru

Male : Theerththa karai orathilae
Female : Thaen sittughal ullathilae

Male : Kalyaana vaibhoghamdhaan

Male : Poonghaatru un per solla ketenae indru

Whistling : ……………………………………

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
பெண் : நீரூற்று என்
தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று

ஆண் : தீர்த்தக்கரை
ஓரத்திலே
பெண் : தேன் சிட்டுகள்
உள்ளத்திலே

ஆண் : கல்யாண
வைபோகம் தான்
பெண் : நீரூற்று என்
தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று

குழு : ………………………..

ஆண் : மூங்கில் காட்டோரம்
மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கை
சேர்த்து நாணல் காதல்
கொண்டாடுதே

பெண் : ஆலம் விழுதோடு
கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித்
திரியும் நேரம் இது வல்லவா

ஆண் : ஏதேதோ
எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே

பெண் : நான் காணும்
வண்ணம் யாவும்
நீதானே அன்பே

ஆண் : வண்ணம்
மாறாமல் மீண்டும்
மீண்டும்

பெண் : ஆசைகள்
ஈடேறக் கூடும்

ஆண் : பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று

பெண் : ஜென்ம ஜென்மங்கள்
ஆனாலும் என்ன ஜீவன்
உன்னோடு தான் தேவி
ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

ஆண் : நீல வான் கூட
நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும்
என்ன காதல் தடம் மாறுமா

பெண் : ஓயாமல்
உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்

ஆண் : ராஜாவின் ஆ
முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்

பெண் : வாடை தீண்டாத
வாழைத் தோட்டம்

ஆண் : ஆனந்த
எல்லைகள் காட்டும்

ஆண் : பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
பெண் : நீரூற்று என்
தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று

ஆண் : தீர்த்தக்கரை
ஓரத்திலே
பெண் : தேன் சிட்டுகள்
உள்ளத்திலே

ஆண் : கல்யாண
வைபோகம் தான்
ஆண் : பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று

விஷ்லிங் : ………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here