Singers : P. Unnikrishnan and Sujatha Mohan

Music by : Deva

Female : …………………………….

Male : { Pen kiliyae pen kiliyae
Paadugiren oru paatu
En paatu vari pidithirundhaal
Un siragal pachai kodi kaatu } (2)

Female : Vaai mozhi ellamae vaaimai sollaadhu
Uzh manam pesamal unmai thondradhu

Male : Vaai mozhi ellamae vaaimai sollaadhu
Pen kili poi sonnal aan kili thoongadhu

Female : Aan kiliyae aan kiliyae
Paadugiren oru paatu
Paatu vari purindhu kondaal
Un pallaviyai nee maatru

Chorous : Nanana … nananana …. nana
Nanana … nananana …. nana
Nanana … nananana …. nana
Nanna …. nanna ….. naa

Male : Pen kangalae naadagam aadumaa
Pen nenjamae oodagam aagumaa

Female : Yaar solliyum pen manam ketkumaa
Kai thattinaal mottukal pookumaa

Male : Vidai ketten kelvi thandhaai
Idhu pudhiraana pudhir allavaa

Female : Kelvikullae badhil thedu
Adhu suvaiyaana suvai allavaa

Male : Ullathin vannam enna theriyavillai
Udaithu chollum varai purivadhillai

Female : Moodaadha poovukul endrum thaen illai

Male : Pen kiliyae pen kiliyae
Paadugiren oru paatu
En paatu vari pidithirundhaal
Un siragal pachai kodi kaatu

Chorous : ……………………….

Male : En nenjilae aayiram osaigal
Un kaadhilae ketkavae illaiyaa

Female : Nee aazhi pol alaigalai yevinaai
Naan karaiyai pol mounamaai mevinen

Male : Nenjil paasam kannil vesam
Idhu pen poosum aridhaaramaa

Female : Unmai kaana vanmai illai
Ungal vizhi en mel pazhi podumaa

Male : Nilavai pirivadharku valimai undu
Un nenjai purivadharku valimai illai

Female : Kaanal neer thedaadhae angae neer illai
Aan kiliyae aan kiliyae
Paadugiren oru paatu
Paatu vari purindhu kondaal
Un pallaviyai nee maatru

Male : Pen kiliyae pen kiliyae
Paadugiren oru paatu
En paatu vari pidithirundhaal
Un siragal pachai kodi kaatu

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ……………………..

ஆண் : { பெண் கிளியே
பெண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு என் பாட்டு வரி
பிடித்திருந்தால் உன் சிறகால்
பச்சைக் கொடி காட்டு } (2)

பெண் : வாய் மொழி
எல்லாமே வாய்மை
சொல்லாது உள்மனம்
பேசாமல் உண்மைத்
தோன்றாது

ஆண் : வாய்மொழி
எல்லாமே வாய்மை
சொல்லாது பெண் கிளி
பொய் சொன்னால் ஆண்
கிளி தூங்காது

பெண் : ஆண் கிளியே
ஆண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு பாட்டு வரி
புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

குழு : ……………………..

ஆண் : பெண் கண்களே
நாடகம் ஆடுமா பெண்
நெஞ்சமே ஊடகம் ஆகுமா

பெண் : யார் சொல்லியும்
பெண் மனம் கேட்குமா
கைத் தட்டினால்
மொட்டுக்கள் பூக்குமா

ஆண் : விடை கேட்டேன்
கேள்வி தந்தாய் இது
புதிரான புதிர் அல்லவா

பெண் : கேள்விக்குள்ளே
பதில் தேடு அது சுவையான
சுவை அல்லவா

ஆண் : உள்ளத்தின்
வண்ணம் என்னத்
தெரியவில்லை
உடைத்துச் சொல்லும்
வரைப் புரிவதில்லை

பெண் : மூடாத பூவுக்குள்
என்றும் தேன் இல்லை

ஆண் : பெண் கிளியே
பெண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு என் பாட்டு வரி
பிடித்திருந்தால் உன் சிறகால்
பச்சைக் கொடி காட்டு

குழு : ……………………..

ஆண் : என் நெஞ்சிலே
ஆயிரம் ஓசைகள் உன்
காதிலே கேட்கவே
இல்லையா

பெண் : நீ ஆழிப் போல்
அலைகளை ஏவினாய்
நான் கரையைப் போல்
மௌனமாய் மேவினேன்

ஆண் : நெஞ்சில் பாசம்
கண்ணில் வேஷம் இது
பெண் பூசும் அறிதாரமா

பெண் : உண்மைக் காண
வன்மை இல்லை உங்கள்
விழி என்மேல் பழி போடுமா

ஆண் : நிலவைப் பிரிவதற்கு
வலிமை உண்டு உன் நெஞ்சைப்
புரிவதற்கு வலிமை இல்லை

பெண் : கானல் நீர்
தேடாதே அங்கே நீர்
இல்லை ஆண் கிளியே
ஆண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு பாட்டு வரி
புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

ஆண் : பெண் கிளியே
பெண் கிளியே பாடுகிறேன்
ஒரு பாட்டு என் பாட்டு வரி
பிடித்திருந்தால் உன் சிறகால்
பச்சைக் கொடி காட்டு


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here