Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Kadalila ezhumbura alaigala
Keladi o maanae
Meenavar padugindra avadhigal
Kooridum o maanae
Male : Kadal thanni karikkithu
Kaaranam irukkuthu o maanae
Udal vitta vervaigal
Kadal vanthu kalakkuthu o maanae…
Chorus : Thaiyyarae
Thaiyyara thaiyyara
Thaiyya thaiyya
Thaiyyarae
Thaiyyara thaiyyara
Thaiyya thaiyya
Male : Poomarangal ethanaiyo
Boomiyila kaaikkuthu
Paaimaranthaan naanga konda
Pattiniya theerkkuthu
Male : Pillaikutti engalukku
Paasa valai veesuthu
Enga sanam meen pidikka
Eera valai veesuthu
Male : Oorai nambi vaazhnthidaamae
Neerai nambi vaazhurom
Kaal pidichu vaazhndhidaamae
Meen pidichu vaazhurom
Maanae… o… maanae… o…
Male : Kadalila ezhumbura alaigala
Keladi o maanae…oooohooo….
Chorus : Thaiyyarae
Thaiyyara thaiyyara
Thaiyya thaiyya
Thaiyyarae
Thaiyyara thaiyyara
Thaiyya thaiyya
Female : Kudisaikku kulavilakku
Venumunnu maamaa kettirukku
Chorus : Aamaaamaa aamaaamaa
Aamaaamaa
Female : Kulavilakku athukkunnu
Machaan poyi nilava koottivara
Chorus : Aamaaamaa aamaaamaa
Aamaaamaa
Kudisaigalum jolikkuthu thaanaa…
Ippo athisayanthaan
Nadakkuthu thaanaa..aaaa…
Male : Hooo…oo…oo…ooo..ooo…
Thoorakkadal ponavanai
Thaaram ninnu theduvaa
Thoni vanthu serum varai
Aadiyae allaaduvaa
Male : Pethedutha pillaiyudan
Thathalichu vaaduvaa
Neththi pottai kaakka solli
Saamigalai venduvaa
Male : Meenavargal vaazhkkai endrum
Mullu mela vaazhaithaan
Soorakkaathu aatti vaikkum
Chinna thennambaalaithaan
Maanae… ooo…. maanae….oooo….
Male : Kadalila ezhumbura alaigala
Keladi o maanae
Meenavar padugindra avadhigal
Kooridum o maanae
Male : Kadal thanni karikkithu
Kaaranam irukkuthu o maanae
Udal vitta vervaigal
Kadal vanthu kalakkuthu o maanae…
Chorus : {Thaiyyarae
Thaiyyara thaiyyara
Thaiyya thaiyya
Thaiyyarae
Thaiyyara thaiyyara
Thaiyya thaiyya} (2)
Male : Kadalila ezhumbura alaigala
Keladi o maanae…hooo..oo..ooo
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள்
கூறிடும் ஓ மானே
ஆண் : கடல் தண்ணி கரிக்கிது
காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள்
கடல் வந்து கலக்குது ஓ மானே…
குழு : தையாரே
தையர தையர
தையா தையா
தையாரே
தையர தையர
தையா தையா
ஆண் : பூமரங்கள் எத்தனையோ
பூமியில காய்க்குது
பாய்மரந்தான் நாங்க கொண்ட
பட்டினிய தீர்க்குது
ஆண் : பிள்ளைகுட்டி எங்களுக்கு
பாச வலை வீசுது
எங்க சனம் மீன் பிடிக்க
ஈர வலை வீசுது
ஆண் : ஊரை நம்பி வாழ்ந்திடாமே
நீரை நம்பி வாழுறோம்
கால் பிடிச்சு வாழ்ந்திடாமே
மீன் பிடிச்சு வாழுறோம்
மானே…ஓ….மானே….ஓ.
ஆண் : கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ…மானே…ஓ…
குழு : தையாரே
தையர தையர
தையா தையா
தையாரே
தையர தையர
தையா தையா
பெண் : குடிசைக்கு குலவிளக்கு
வேணுமுன்னு மாமா கேட்டிருக்கு
குழு : ஆமாம்மா ஆமாம்மா
ஆமாம்மா
பெண் : குலவிளக்கு அதுக்குன்னு
மச்சான் போயி நிலவ கூட்டிவர
குழு : ஆமாம்மா ஆமாம்மா
ஆமாம்மா
குடிசைகளும் ஜொலிக்குது தானா….
இப்போ அதிசயம்தான்
நடக்குது தானா…
ஆண் : தூரக்கடல் போனவனை
தாரம் நின்னு தேடுவா
தோணி வந்து சேரும் வரை
ஆடியே அல்லாடுவா
ஆண் : பெத்தெடுத்த பிள்ளையுடன்
தத்தளிச்சு வாடுவா
நெத்திப் பொட்டை காக்க சொல்லி
சாமிகளை வேண்டுவா
ஆண் : மீனவர்கள் வாழ்க்கை என்றும்
முள்ளு மேல வாழைதான்
சூரக்காத்து ஆட்டி வைக்கும்
சின்ன தென்னம்பாலைதான்
மானே…ஓ….மானே….ஓ….
ஆண் : கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள்
கூறிடும் ஓ மானே
ஆண் : கடல் தண்ணி கரிக்கிது
காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள்
கடல் வந்து கலக்குது ஓ மானே…
குழு : {தையாரே
தையர தையர
தையா தையா
தையாரே
தையர தையர
தையா தையா} (2)
ஆண் : கடலிலே
எழும்புற அலைகளை
கேளடி ஓ…மானே…ஓ…