Singers : Kay Kay and Sadhana Sargam
Music by : Bharathwaj
Female : Oru vaarthai ketka oru varusam kaathirundhen
Indha paarvai paarka pagal iravaa poothirundhen
Female : Oru vaarthai ketka oru varusam kaathirundhen
Indha paarvai paarka pagal iravaa poothirundhen
Manamaalai onna poo poovaai korthirundhen
Andha sedhikaaga nodi nodiya verthirundhen
Female : Sooriyana sooriyana suruku paiyil
Naan alli vara alli vara aasai patten
Female : Singathaiyum singathaiyum sila naalaa
En chinna chinna kammalukul pootti kitten
Thannikula thaan natta thaamarai kodi
Theppa kulathaiyae kudichiruchaeae ….
Male : Oru vaarthai solla oru varusam thayangi ninnen
Andha paarvai paarka mudiyama naan odhungi ninnen
Female : Oorukulla odum theruvil paadha thadangal aayiram irukum
Nee nadantha suvadugal irundhaal endhan kangal kandu pidikum
Male : Idhayatha thatti thatti paarthu putta
Adhu therakala endradhumae odaichu putta
Female : Nee kedaika vendum endru thundu seetai ezhudhi potten
Pechi amman koil saami paper saami aanadhu enna
Male : Kannukulla odiya unna thoratha manasukul nee vandhu olinja
Manasukul olinjidum unna verata usurukul nee mella nozhainja
Female : Ohh nee kodutha kal kooda sengal saami aanadhaiyaa
Male : Oru vaarthai solla oru varusam thayangi ninnen
Andha paarvai paarka mudiyama naan odhungi ninnen
Female : Aaaaa aaaaa aaaa ….
Female : Adutha veetu kalyanathin pathirikai paarkum bodhu
Namadhu perai manamakalaaga maatri ezhudhi rasithu paarthen
Male : Netru varai enakulla irumbu nenju
Adhu indru mudhal aanadhu ilavam panju
Female : Katta bomman uruvam polae unna varaindhu maraidhae Vaithen
Dhesa patru oviyam endru vettu suvatril appa maata
Male : Anaikattu polaevae irukum manasu nee thottu odainjadhu enna
Puyaluku badhil sollum endhan idhayam poo pattu sarinjadhu enna
Female : Veppa maram suthi vandhen arasa maramum poothadhaiyaa
Oru vaarthai ketka oru varusam kaathirundhen
Male : Oru vaarthai solla oru varusam thayangi ninnen
Female : Indha paarvai paarka pagal iravaa poothirundhen
Male : Andha paarvai paarka mudiyama naan odhungi ninnen
Female : Sooriyana sooriyana suruku paiyil
Naan alli vara alli vara aasai patten
Female : Singathaiyum singathaiyum sila naalaa
En chinna chinna kammalukul pootti kitten
Thannikula thaan natta thaamarai kodi
Theppa kulathaiyae kudichiruchaeae ….
Female : Lala laala laala laalalala laalalala
Lala laala laala laalalala laalalala
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : கே.கே
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல்
இரவா பூத்திருந்தேன்
பெண் : ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல்
இரவா பூத்திருந்தேன் மணமாலை
ஒன்ன பூ பூவாய் கோா்த்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா
வேர்த்திருந்தேன்
பெண் : சூரியன சூரியன
சுருக்கு பையில் நான்
அள்ளி வர அள்ளி வர
ஆசைப்பட்டேன்
பெண் : சிங்கத்தையும்
சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள்
பூட்டி கிட்டேன் தண்ணிக்குள்ள
தான் நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே
குடிச்சிருச்சே
ஆண் : ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
பெண் : ஊருக்குள்ள ஓடும்
தெருவில் பாத தடங்கள்
ஆயிரம் இருக்கும் நீ நடந்த
சுவடுகள் இருந்தால் எந்தன்
கண்கள் கண்டு பிடிக்கும்
ஆண் : இதயத்தை தட்டி
தட்டி பார்த்துப்புட்ட அது
திறக்கல என்றதுமே
உடைச்சுப்புட்ட
பெண் : நீ கிடைக்க வேண்டும்
என்று துண்டு சீட்டில் எழுதி
போட்டேன் பேச்சியம்மன்
கோயில் சாமி பேப்பர் சாமி
ஆனது என்ன
ஆண் : கண்ணுக்குள்ள ஓடிய
உன்ன துரத்த மனசுக்குள் நீ
வந்து ஒளிஞ்ச மனசுக்குள்
ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட
உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச
பெண் : ஓ நீ கொடுத்த
கல் கூட செங்கல் சாமி
ஆனதய்யா
ஆண் : ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
பெண் : ஆஆஆ ஆஆஆ
பெண் : அடுத்த வீட்டு
கல்யாணத்தின் பத்திரிக்கை
பார்க்கும்போது நமது பேரை
மணமக்களாக மாற்றி எழுதி
ரசித்து பார்த்தேன்
ஆண் : நேற்று வரை எனக்குள்ள
இரும்பு நெஞ்சு அது இன்று முதல்
ஆனது இலவம் பஞ்சு
பெண் : கட்டபொம்மன் உருவம்
போல உன்ன வரைந்து மறைத்தே
வைத்தேன் தேசபற்று ஓவியம் என்று
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட
ஆண் : அணை கட்டு போலவே
இருக்கும் மனசு நீ தொட்டு
ஒடஞ்சது என்ன புயலுக்கு பதில்
சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்சது என்ன
பெண் : வேப்ப மரம் சுத்தி
வந்தேன் அரச மரமும்
பூத்ததய்யா ஒரு வார்த்தை
கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
ஆண் : ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
பெண் : இந்த பார்வை பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
ஆண் : அந்த பார்வை
பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
பெண் : சூரியன சூரியன
சுருக்கு பையில் நான்
அள்ளி வர அள்ளி வர
ஆசைப்பட்டேன்
பெண் : சிங்கத்தையும்
சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள்
பூட்டி கிட்டேன் தண்ணிக்குள்ள
தான் நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே
குடிச்சிருச்சே
பெண் : ……………………………