Singers : T. R. Mahalingam,
Ilayaraja and P. Susheela
Music by : Ilayaraja
Chorus : Alaiyilae mithanthava
Kadalilae valanthava thaan
Maina maina
Aranmanai kuyil vanthu
Adhanudan kalanthathu
Oh manna manna
Chorus : Iru manam inaithathu lesa
Thirumanam mudinthathu raasa
{Vayasula sirusunga
Unga manam perusunga
Vaazhthunga oh raasa} (2)
Chorus : Alaiyilae mithanthava
Kadalilae valanthava thaan
Maina maina
Male : {Valathavanae
Vazhi maranthaandi
Adi aathi
Arasan magan
Aandi aanaandi} (2)
Male : Cheran maga poothirukka
Cholan maga kaathirukka
Cheran maga poothirukka
Cholan maga kaathirukka
Ponnu thara anuppi
Vittaan olaiya
Ivanukku porukka villai
Kaatti vitaan velaiyai
Male : Ei valathavanae
Vazhi maranthaandi
Adi aathi
Arasan magan
Aandi aanaandi
Male : Poruthamunna
Porutham idhungaa
Enga raasa
Varuthamenna
Varutham venaanga
Chorus : Poruthamunna
Porutham idhungaa
Enga raasa
Varuthamenna
Varutham venaanga
Male : Jaathagathil suzhi irukka
Thaavi vanthu kili azhaikka
Ilavarasan ponadhenna
Paavama indha
Sabaiyinilae saadhikkoru
Nyayamaa raasa
Male & Chorus :
Poruthamunna
Porutham idhungaa
Enga raasa
Varuthamenna
Varutham venaanga
Female : Anjaaru dhesaththu
Raasa neenga
Pala anubhavam arinjavanga
Sollaama kollaama nadanthathunga
Itha mannichu maranthudunga
Female : Paalooti thaalaatti
Paaratti valathen
Yedhyedho nadanthathunga
Ini podhum pidivatham
Onga kobam
Perum paavam thaan
Vaazhattum vazha vidunga
Female : En mannadhi mannaa
Naan manikka sonna
Ellaaga vedikiringa
Pilla paasatha kaataama
Kobatha kaati
Nallathaan nadikiringa
Chorus : Enga mannadhi mannaa
Un kobatha maranthu
Mannichu vazhi vidunga
Male : Po po po raani
Adadada po po po raani
Arasanin parambarai
Gauravam pochu
Siruthaikku piranthathu
Siru nari aachu
Mayilukkum kaakaikkum
Thirumanam aachu
Magudamum kuraindhathu
Ini enna pechu
Male : Saetrai poosuvadhu
Enadhu palakkam alla
Aatril eranguvadhu
Arasanin vazhakam alla
Po po po raani
Adadada po po po raani
Male : Vendhae yen indha kobam
Sollungammaa
Chorus : Vendhae yen indha kobam
Male : Ungal vaarisu varunthum
Vaazhthiyae aaganum
Vendhae yen indha kobam
Chorus : Vendhae yen indha kobam
Female : Raasathi raasa
Pen paavaam vendaam
Nee vaazhtha vaa mannavaa
Shree gangai aatril
Sitrodai sernthaal
Adhu kooda gangai allava
Chorus : Raasathi raasa
Pen paavaam vendaam
Nee vaazhtha vaa mannavaa
Male : Raani un kannil
Kanneerai kandaal
En nenju thaangaathamma
Kalyaana jodi
Sangeetham paadi
Nooraandu kaalam vaazhattum…
Chorus : Laalila laali laalila laali
Laalila laalila lii
Laalila laali laalila laali
Laalila laalila lii
பாடகர்கள் : இளையராஜா, டி. ஆர். மஹாலிங்கம்
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : அலையிலே மிதந்தவ
கடலிலே வளந்தவதான்
மைனா மைனா
அரண்மனக் குயில் வந்து
அதனுடன் கலந்தது
ஓ…..மன்னா……மன்னா…..
குழு : இரு மனம் இணைந்தது லேசா
திருமணம் முடிந்தது ராசா
{வயசுல சிறுசுங்க
உங்க மனம் பெருசுங்க
வாழ்த்துங்க ஓ….ராசா…..} (2)
குழு : அலையிலே மிதந்தவ
கடலிலே வளந்தவதான்
மைனா மைனா
ஆண் : {வளத்தவனே
வழி மறந்தாண்டி அடி ஆத்தி
அரசன் மகன்
ஆண்டி ஆனான்டி} (2)
ஆண் : சேரன் மக பூத்திருக்கா
சோழன் மக காத்திருக்கா
சேரன் மக பூத்திருக்கா
சோழன் மக காத்திருக்கா
பொண்ணு தர
அனுப்பிட்டான் ஓலையை
இவனுக்கு பொறுக்கவில்லை
காட்டிவிட்டான் வேலையை……..
ஆண் : ஏய் வளத்தவனே
வழி மறந்தாண்டி அடி ஆத்தி
அரசன் மகன்
ஆண்டி ஆனான்டி
ஆண் : பொருத்தமின்னா
பொருத்தமிதுங்க எங்கராசா
வருத்தமென்ன
வருத்தம் வேணாங்க
குழு : பொருத்தமின்னா
பொருத்தமிதுங்க எங்கராசா
வருத்தமென்ன
வருத்தம் வேணாங்க
ஆண் : ஜாதகத்தில் சுழியிருக்க
தாவி வந்து கிளி அழைக்க
இளவரசன் போனதென்ன பாவமா
இந்த சபையினிலே
சாதிக்கொரு நியாயமா…..
ஆண் மற்றும் குழு :
பொருத்தமின்னா
பொருத்தமிதுங்க எங்கராசா
வருத்தமென்ன
வருத்தம் வேணாங்க
பெண் : அஞ்சாறு தேசத்து ராசா நீங்க
பல அனுபவம் அறிஞ்சவங்க
சொல்லாம கொள்ளாம நடந்ததுங்க
இத மன்னிச்சு மறந்துடுங்க
பெண் : பாலூட்டி தாலாட்டி
பாராட்டி வளத்தேன்
ஏதேதோ நடந்ததுங்க
இனி போதும் பிடிவாதம்
ஒங்க கோபம்
பெரும் பாவந்தான்
வாழட்டும் வாழ விடுங்க
பெண் : என் மன்னாதி மன்னா
நான் மன்னிக்கச் சொன்னா
எள்ளாக வெடிக்கிறீங்க
பிள்ளைப் பாசத்த காட்டாம
கோபத்த காட்டி
நல்லாத்தான் நடிக்கிறீங்க
குழு : எங்க மன்னாதி மன்னா
உன் கோபத்த மறந்து
மன்னிச்சு வழி விடுங்க
ஆண் : போ போ போ ராணி
அடடா போ போ போ ராணி
அரசனின் பரம்பரை
கௌரவம் போச்சு
சிறுத்தைக்கு பிறந்தது சிறு நரியாச்சு
மயிலுக்கும் காக்கைக்கும் திருமணமாச்சு
மகுடமும் குறைந்தது இனி என்ன பேச்சு
ஆண் : சேற்றைப் பூசுவது
எனது பழக்கமல்ல
ஆற்றில் இறங்குவது
அரசனின் வழக்கமல்ல
போ போ போ ராணி………
அடடா போ போ போ ராணி
ஆண் : வேந்தே ஏனிந்த கோபம்
சொல்லுங்கம்மா
குழு : வேந்தே ஏனிந்த கோபம்
ஆண் : உங்கள் வாரிசு வருந்தும்
வாழ்த்தியே ஆகணும்
ஆண் : வேந்தே ஏனிந்த கோபம்
குழு : வேந்தே ஏனிந்த கோபம்
பெண் : ராசாதி ராசா
பெண் பாவம் வேண்டாம்
நீ வாழ்த்த வா மன்னவா
ஸ்ரீ கங்கை ஆற்றில்
சிற்றோடை சேர்ந்தால்
அது கூட கங்கை அல்லவா
குழு : ராசாதி ராசா
பெண் பாவம் வேண்டாம்
நீ வாழ்த்த வா மன்னவா
ஆண் : ராணி உன் கண்ணில்
கண்ணீரைக் கண்டால்
என் நெஞ்சு தாங்காதம்மா
கல்யாண ஜோடி சங்கீதம் பாடி
நூறாண்டு காலம் வாழட்டும்……….
குழு : : லா லால லாலி லா லால லாலி
லா லால லாலாலா லி
லா லால லாலி லா லால லாலி
லா லால லாலாலா லி