Singers : P. Susheela and T. M. Soundararajan

  Music by : Viswanathan-Ramamoorthy

Female : Mahaaraajan ulagai aalalaam
Indha mahaaraani avanai aaluvaa…aa…aal…
Mahaaraajan ulagai aalalaam

Female : Pulavar paada arasar kooda
Arinjar naada vaazhalaam
Pudhumai koorum manaivi kannil
Ulaga inbam kaanalaam

Male : Mahaaraani avanai aaluvaal
Adhil mahaaraajan mayangiyaaduva..aa…aan…
Mahaaraani avanai aaluvaal

Male : Pulavar paada arasar kooda
Arinjar naada vaazhuvaan
Pudhumai koorum manaivi kannil
Ulaga inbam kaanuvaan
Ulaga inbam kaanuvaan
Mahaaraani avanai aaluvaal

Female : Naangu pakkam thiraigalaadum
Paamalar manjam
Adhan naduvinilae kudai pidikkum
Kaadhalar nenjam

Male : Maan kodutha saayalangae
Mayangidum konjam
Andha mayakkathilae
Thalaviyidam thalaivanae thanjam

Female : Paadhathil mugamirukkum
Male : Paarvai irangi varum
Female : Vegathil layithirukkum
Male : Veeramum kalaithirukkum

Both : Aa… aa… aa… aa…aa…aa…aa…aa….aa….

Female : Magaaraajan ulagai aalalaam

Male : Kannanaiyum andha idam
Kalakkavillaiyaa
Indha karnanukku mattum enna
Idhamillaiyaa

Female : Vallalukku vallal indha
Penmai illaiyaa
Endha mannavarkkum vazhanguvadhu
Manaiviyillaiyaa

Male : Alli alli koduthirukkum
Female : Andhi pagal thunaiyirukkum
Male : Unna unna valarndhirukkum
Female : Ulagamae marandhirukkum

Both : Aa… aa… aa… aa…aa…aa…aa…aa….aa….

Female : Magaaraajan ulagai aalalaam

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்…ஆ…ஆ…
மகாராஜன் உலகை ஆளலாம்

பெண் : புலவர் பாட அரசர் கூட
அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணலாம்

ஆண் : மகாராணி அவனை ஆளுவாள்
அதில் மகாராஜன் மயங்கியாடுவான்…ஆ…ஆ…
மகாராணி அவனை ஆளுவாள்

ஆண் : புலவர் பாட அரசர் கூட
அறிஞர் நாட வாழுவார்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணுவார்
உலக இன்பம் காணுவார்
மகாராணி அவனை ஆளுவாள்

பெண் : நான்கு பக்கம் திரைகளாடும்
பாமலர் மஞ்சம்
அதன் நடுவினிலே குடை பிடிக்கும்
காதலர் நெஞ்சம்

ஆண் : மான் கொடுத்த சாயலங்கே
மயங்கிடும் கொஞ்சம்
அந்த மயக்கத்திலே
தலைவியிடம் தலைவனே தஞ்சம்

பெண் : பாதத்தில் முகமிருக்கும்
ஆண் : பார்வை இறங்கி வரும்
பெண் : மேகத்தில் லயித்திருக்கும்
ஆண் : வீரமும் களைத்திருக்கும்

இருவர் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..

பெண் : மகாராஜன் உலகை ஆளலாம்

ஆண் : கண்ணனையும் அந்த
இடம் கலக்கவில்லையா
இந்த கர்ணனுக்கு மட்டும்
என்ன இதயமில்லையா

பெண் : வள்ளலுக்கு வள்ளல் இந்த
பெண்மை இல்லையா
எந்த மன்னவர்க்கும் வழங்குவது
மனைவியில்லையா

ஆண் : அள்ளி அள்ளி கொடுத்திருக்கும்
பெண் : அந்தி பகல் துணையிருக்கும்
ஆண் : உண்ண உண்ண வளர்ந்திருக்கும்
பெண் : உலகமே மறந்திருக்கும்

இருவர் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..

பெண் : மகாராஜன் உலகை ஆளலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here