Singers : Damini, Palak Muchhal and Mohana Bhogaraju
Music by : M. M. Keeravaani
Claps : ……………………
Female : Kannaalam kannaalam
Melam kottattum
Nammooru naadhasvaram
Megam muttattum
Female : Kannaalam kannaalam
Vannam yerattum
Ponnoda manja kannam
Chevappaa maarattum
Female : Pippeeppee ketti melam
Chatham koodattum
Maappilla kaalu thaanaa
Aattam podattum
Chorus : Kannaalam kannaalam
Melam kottattum
Nammooru naadhasvaram
Megam muttattum
Female : Endhan kai meedhu
Marudhaani pol
Nenjil unai thaanae
Naan choodinen….
Female : Kaadhal peigindra
Vannangalil
Endhan udai maara
Naan aadinen
Female : Kaatril ketkaadha paadalgal
Ketkindren
Kangal imaikkindra osaikkul
Naan kaangidren
Kanaa… orae kanaa…
Naalelaam adhae kanaa
Chorus : Kannaalam kannaalam
Neiyi manakkum
Pandhikku mundhikkida
Naaku nenaikkum
Chorus : Kannaalam kannaalam
Vaasam koodattum
Thakkolam yelam kiraambu
Mookka thaakkattum
Female : Karpooram pola nenju
Pathikidattum
Sandhosam ooru pooraa
Thothikidattum
Chorus : Kannaalam kannaalam
Neiyi manakkum
Pandhikku mundhikkida
Naaku nenaikkum
Female : Naavai cheendaadha
Chuvai ondrilae
Undhan per cholla
Naavoorgiren
Female : Thaenil thindaadum
Vandaagavae
Unnil naan veezhndhu
Kondaadinen
Female : Naasi pesaadha vaasangal
Unnaalae
Endhan moochaaga aavaayaa
Naan ketkkiren…
Vinaa… orae vinaa…
Unnilum adhae vinaa..
Female : Maappila idhayam
Chorus : Thudidhudikkum
Female : Raathiri kettu
Chorus : Adampudikkum
Female : Ponniva pogira vegatha
Paathu kattilukippa juram adikkum
Chorus : Kattilukippa juram adikkum
Female : Thaappaa pottu poottumbodhu…
Chorus : Thaappaa pottu poottumbodhu…
Maappila manasu padabadakkum
Chorus : Avan veeran poladhaan nadichiduvaan
Iva koocham vandhadhaa nadichiduvaa
Avan thottu pesavae thudichiduvaan
Iva mutham vechae mudichiduvaa
Avan veeran poladhaan nadichiduvaan
Iva koocham vandhadhaa nadichiduvaa
Female : Theendal orr theendal
Nee theendavae
Penmai naan ingu
Kondenadaa….
Female : Menmai en menmai
Ennendru nee
Kandu chol endru
Nindrenadaa!…
Female : Mutham ennendru ketkum
En idhazhodu
Undhan idhazh cherthu nee chollum
Naal thaanadaa…
Vizhaa… endhan vizhaa…
Kaadhalil vizhum vizhaa…..
பாடகர்கள் : டாமினி, பாலக் முச்சால் மற்றும் மோகனா போகராஜு
இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி
கைதட்டல்கள் : …………………….
பெண் : கண்ணாலம் கண்ணாலம்
மேளம் கொட்டட்டும்
நம்மூரு நாதஸ்வரம்
மேகம் முட்டட்டும்
பெண் : கண்ணாலம் கண்ணாலம்
வண்ணம் ஏறட்டும்
பொண்ணோட மஞ்சக் கன்னம்
செவப்பா மாறட்டும்
பெண் : பிப்பீப்பீ கெட்டி மேளம்
சத்தம் கூடட்டும்
மாப்பிள்ளை காலு தானா
ஆட்டம் போடட்டும்
குழு : கண்ணாலம் கண்ணாலம்
மேளம் கொட்டட்டும்
நம்மூரு நாதஸ்வரம்
மேகம் முட்டட்டும்
பெண் : எந்தன் கை மீது
மருதாணி போல்
நெஞ்சில் உனை தானே
நான் சூடினேன்…..
பெண் : காதல் பெய்கின்ற
வண்ணங்களில்
எந்தன் உடை மாற
நான் ஆடினேன்
பெண் : காற்றில் கேட்காத பாடல்கள்
கேட்கின்றேன்
கண்கள் இமைக்கின்ற ஓசைக்குள்
நான் காண்கிறேன்
கனா… ஒரே கனா…
நாளெல்லாம் அதே கனா
குழு : கண்ணாலம் கண்ணாலம்
நெய்யி மணக்கும்
பந்திக்கு முந்திக்கிட
நாக்கு நெனைக்கும்
குழு : கண்ணாலம் கண்ணாலம்
வாசம் கூடட்டும்
தக்கோலம் ஏலம் கிராம்பு
மூக்கத் தாக்கட்டும்
பெண் : கற்பூரம் போல நெஞ்சு
பத்திகிடட்டும்
சந்தோசம் ஊரு பூரா
தொத்திகிடட்டும்
குழு : கண்ணாலம் கண்ணாலம்
நெய்யி மணக்கும்
பந்திக்கு முந்திக்கிட
நாக்கு நெனைக்கும்
பெண் : நாவை சீண்டாத
சுவை ஒன்றிலே
உந்தன் பேர் சொல்ல
நாவூற்கிறேன்
பெண் : தேனில் திண்டாடும்
வண்டாகவே
உன்னில் நான் வீழ்ந்து
கொண்டாடினேன்
பெண் : நாசி பேசாத வாசங்கள்
உன்னாலே
எந்தன் மூச்சாக ஆவாயா
நான் கேட்கிறேன்…
வினா… ஒரே வினா…
உன்னிலும் அதே வினா….
பெண் : மாப்பிள்ளை இதயம்
குழு : துடிதுடிக்கும்
பெண் : ராத்திரி கேட்டு
குழு : அடம்புடிக்கும்
பெண் : பொண்ணிவ போகிற வேகத்த
பாத்து கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்
குழு : கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்
பெண் : தாப்பா போட்டு பூட்டும்போது…
குழு : தாப்பா போட்டு பூட்டும்போது…
மாப்பிள்ளை மனசு படபடக்கும்
குழு : அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான்
இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா
அவன் தொட்டு பேசவே துடிச்சிடுவான்
இவ முத்தம் வெச்சே முடிச்சிடுவா
அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான்
இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா
பெண் : தீண்டல் ஓர் தீண்டல்
நீ தீண்டவே
பெண்மை நான் இங்கு
கொண்டேனடா
பெண் : மென்மை என் மென்மை
என்னென்று நீ
கண்டு சொல் என்று
நின்றேனடா
பெண் : முத்தம் என்னென்று கேட்கும்
என் இதழோடு
உந்தன் இதழ் சேர்த்து நீ சொல்லும்
நாள் தானடா…
விழா… எந்தன் விழா…
காதலில் விழும் விழா