Singer : Susha

Music by : Tenma

Female : …………………………..

Female : Irul vaanam
Vazhi kaattidum
Naam kaadhal
Thunai aagidum

Female : Indha karukkinil
Malaruthu yugamae
Inba karuppugal
Thanimayin mayamae
Emmaanae…

Female : Malayurum nadhiyinai pol
Adainthaen kadalai naan
Thalaivanin nizhalinilae
Malarum kuvalai naan

Female : Kaadhal pothuvaagum
Naamai kaakum oh…
Yaarum manam maara
Idhu podhum
Vilaivaai varuvaai kuzhaivaai

Female : Hmm mm hmm mmm mmm
Hmm mm mm hmm mmm mm mm

Female : Pozhinthidum nilavinilae
Nanainthaen arugil naan
Vazhindhidum ozhiyinilae
Karaivom urugi naam

Female : Kaadhal naamai thaettrum
Madai maatrum
Indha vaazhkai puyal kaattum
Adhai maattrum thunaiyaai inaiyaai varuvaai

Female : Irul vaanam
Vazhi kaattidum
Naam kaadhal
Thunai aagidum

Female : …………………………….

Female : Iravugal milirgirathae
Azhagaai uravil dhaan
Kathavugal thirakkirathae
Inainthaal idhayam dhaan

Female : Thaedal niraiverum
Karaiyerum
Pen thozhil malai sainthu
Ilaipaarum
Adalaerae nee varuvaai

Female : Irul vaanam
Vazhi kaattidum
Naam kaadhal
Thunai aagidum

Female : Indha karukkinil
Malaruthu yugamae
Inba karuppugal
Thanimayin mayamae
Emmaanae…

பாடகி : சுஷா

இசையமைப்பாளர் : தென்மா

பெண் : ……………………………

பெண் : இருள் வானம்
வழி காட்டிடும்
நம் காதல்
துணை ஆகிடும்

பெண் : இந்த கருக்கினில்
மலருது யுகமே
இன்பக் கருப்புகள்
தனிமையின் மயமே
எம்மானே……

பெண் : மலையுறும் நதியினை போல்
அடைந்தேன் கடலை நான்
தலைவனின் நிழலினிலே
மலரும் குவளை நான்

பெண் : காதல் பொதுவாகும்
நமை காக்கும் ஓ….
யாரும் மனம் மாற
இது போதும்
விளைவாய் வருவாய் குழைவாய்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : பொழிந்திடும் நிலவினிலே
நனைந்தேன் அருகில் நான்
வழிந்திடும் ஒளியினிலே
கரைவோம் உருகி நாம்

பெண் : காதல் நமை தேற்றும்
மடை மாற்றும்
இந்த வாழ்க்கை புயல் காட்டும்
அதை மாற்றும்
துணையாய் இணையாய் வருவாய்

பெண் : இருள் வானம்
வழி காட்டிடும்
நம் காதல்
துணை ஆகிடும்

பெண் : …………………………

பெண் : இரவுகள் மிளிர்கிறதே
அழகாய் உறவில்தான்
கதவுகள் திறக்கிறதே
இணைந்தால் இதயம்தான்

பெண் : தேடல் நிறைவேறும்
கரையேறும்…..
பெண் தோளில் மலை சாய்ந்து
இளைப்பாறும்
அடலேறே நீ வருவாய்

பெண் : இருள் வானம்
வழி காட்டிடும்
நம் காதல்
துணை ஆகிடும்

பெண் : இந்த கருக்கினில்
மலருது யுகமே
இன்ப கருப்புகள்
தனிமையின் மயமே
எம்மானே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here