Singers : T. M. Soundararajan and Sirkazhi Govindarajan
Music by : M. S. Viswanathan
Male : Kaasikku pogum sanyaasi
Un kudumbam ennaagum nee yosi
Male : Kaasikku pogum sanyaasi
Un kudumbam ennaagum nee yosi
Gangaikku pogum paradhaesi…
Eee… ee… ee… ee…ee….ee….
Male : Gangaikku pogum paradhaesi
Nee naethu varaiyilum sugavaasi
Male : Kaasikku pogum sanyaasi
Un kudumbam ennaagum nee yosi
Male : Pattadhu podhum pennaalae…
Male : Pattadhu podhum pennaalae
Idhai pattinathaarum sonnaarae…
Male : Pattadhu podhum pennaalae
Idhai pattinathaarum sonnaarae…
Ava suttadhu podhum… mm…
Siva siva sivanae… siva siva sivanae…
Aa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa..aaa…
Sivanae aa….aaa….aa…aa…
Male : Suttadhu podhum sollaalae
Naan sugappadavillai avalaalae
Suttadhu podhum sollaalae
Naan sugappadavillai avalaalae
Male : Kaasikku kaasiku
Kaasikku poren aala vidu
Ennai inimaelaavadhu vaazha vidu
Male : Aadharavaana vaarthaiyai paesi
Arumai migundha manaiviyai naesi
Male : Aadharavaana vaarthaiyai paesi
Arumai migundha manaiviyai naesi
Anbenum paadathai avalidam vaasi
Avalai vidavaa uyarndhadhu kaasi
Male : Avadhi padubavan padu samsaari
Appaa neeyo brahmachaari
Male : Avadhi padubavan padu samsaari
Appaa neeyo brahmachaari
Thalaiyanai mandhiram moolaiyai kedukkum
Thaaraga mandhiram motchathai kodukkum
Thaaraga mandhiram motchathai kodukkum
Male : Kaasikku kaasiku
Kaasikku poren aala vidu
Ennai inimaelaavadhu vaazha vidu
Male : Illaram enbadhu nallaramaagum
Idhuvae valluvan sonna sollaagum
Male : Illaram enbadhu nallaramaagum
Idhuvae valluvan sonna sollaagum
Kudumbathin vilakku manaivi endraagum
Kobathai marandhaal sorgam undaagum
Male : Bhakthiyin vadivam sanyaasam
Punniyavaangal sagavaasam
Adhuvae sandhosham
Male : Sakthiyin vadivam samsaaram
Avalae anbin avadhaaram
Vaendaam veli vaesham
Male : Kaasi naadhanae en dheivam
Male : Kattiya manaivi kula dheivam
Male : Kaasi naadhanae en dheivam
Male : Kattiya manaivi kula dheivam
Male : Manaiviyum dheivamum ondrillai
Male : Manaivi illaamal dheivam illai
Male : Manaiviyum dheivamum ondrillai
Male : Manaivi illaamal dheivam illai
Male : Sariyo ini avaludan iruppadhu sariyo
Male : Aval thunaiyinai pirivadhu muraiyo
Male : Pagai thaan valarum
Male : Pagaiyae anbaai malarum
Male : Pirindhavar inaindhida padumo
Male : Manandhavar pirindhida thaghumo
Illaram nallaramae
Male : Kaasikku pogum sanyaasi
Un kudumbam ennaagum nee yosi
Male : Kaasikku pogum sanyaasi
Un kudumbam ennaagum nee yosi
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
ஆண் : காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்குப் போகும் பரதேசி…….
ஈ……ஈ…..ஈ…..ஈ…..எஈ……ஈ…….
ஆண் : கங்கைக்குப் போகும் பரதேசி
நீ நேத்து வரையிலும் சுகவாசி
ஆண் : காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
ஆண் : பட்டது போதும் பெண்ணாலே…
ஆண் : பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே…
ஆண் : பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும்… ம்…
சிவ சிவ சிவனே… சிவ சிவ சிவனே…
ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஆ……ஆஅ…..
சிவனே ஆ……ஆஅ…..ஆ……ஆ……
ஆண் : சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
ஆண் : காசிக்கு காசிக்கு
காசிக்குப் போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
ஆண் : ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
ஆண் : ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி
ஆண் : அவதி படுபவன் படு சம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
ஆண் : அவதி படுபவன் படு சம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
தலையணை மந்திரம் மூளையை கெடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
ஆண் : காசிக்கு காசிக்கு
காசிக்குப் போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
ஆண் : இல்லறம் என்பது நல்லறமாகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
ஆண் : இல்லறம் என்பது நல்லறமாகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்க்கம் உண்டாகும்
ஆண் : பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
ஆண் : சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
ஆண் : காசி நாதனே என் தெய்வம்
ஆண் : கட்டிய மனைவி குல தெய்வம்
ஆண் : காசி நாதனே என் தெய்வம்
ஆண் : கட்டிய மனைவி குல தெய்வம்
ஆண் : மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
ஆண் : மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
ஆண் : மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
ஆண் : மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
ஆண் : சரியோ இனி அவளுடன் இருப்பது சரியோ
ஆண் : அவள் துணையினை பிரிவது முறையோ
ஆண் : பகை தான் வளரும்
ஆண் : பகையே அன்பாய் மலரும்
ஆண் : பிரிந்தவர் இணைந்திடப் படுமோ
ஆண் : மணந்தவர் பிரிந்திடத் தகுமோ
இல்லறம் நல்லறமே
ஆண் : காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
ஆண் : காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி