Singers : Sirkazhi Sivachidambaram and Vani Jairam

Music by : M. S. Vishwanathan

Male : Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Vizhighalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottugiraal
Vizhigalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottughiraal

Male : Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal

Female : Thom thomtha thaka thadheem thom
Thom thomtha thaka thanat thom
Gaapa gaapa gapa neesa neesa nisa
Gaapa gaapa gapa neesa neesa nisa

Male : Nee mayilukku naattiya kalai
Sonnaval
Andha madhanukkum kaadhalin porul
Sonnaval

Female : Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..

Male : Nee mayilukku naattiya kalai
Sonnaval
Andha madhanukkum kaadhalin porul
Sonnaval
Azhaghiya maegalai asaivadhum oru kalai
Unadhudal mirudhangamae…

Male : Pala vagai thaalangal
Sugam tharum naadhangal
Payilvadhu sugamallavo…

Male : Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal

Male : Un siru idai enbadhu idai
Sangamo
Un sadhangaiyil vandhadhu thamizh
Sandhamo

Male : Un siru idai enbadhu idai
Sangamo
Un sadhangaiyil vandhadhu thamizh
Sandhamo
Ilamaiyin seedhanam isaiyinil moganam
Enbadhum neeyallavo…

Female : Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..

Male : Kavi nayam maevidum ilakkiyam yaavilum
Karpanai neeyallavo…

Male : Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Vizhigalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottugiraal
Female : Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..

பாடகர்கள் : சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்

ஆண் : அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்

பெண் : தோம் தோம்த தக ததீம் தோம்
தோம் தோம்த தக தனத் தோம்
காப காப கப நீஸ நீஸ நிஸ
காப காப கப நீஸ நீஸ நிஸ

ஆண் : நீ மயிலுக்கு நாட்டியக் கலை
சொன்னவள்
அந்த மதனுக்கும் காதலின் பொருள்
சொன்னவள்

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ……ஆ…..ஆ….

ஆண் : நீ மயிலுக்கு நாட்டியக் கலை
சொன்னவள்
அந்த மதனுக்கும் காதலின் பொருள்
சொன்னவள்
அழகிய மேகலை அசைவதும் ஓர் கலை
உனதுடல் மிருதங்கமே…

ஆண் : பல வகை தாளங்கள்
சுகம் தரும் நாதங்கள்
பயில்வது சுகமல்லவோ…

ஆண் : அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்

ஆண் : உன் சிறு இடை என்பது இடைச்
சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்
சந்தமோ

ஆண் : உன் சிறு இடை என்பது இடைச்
சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்
சந்தமோ
இளமையின் சீதனம் இசையினில் மோகனம்
என்பதும் நீயல்லவோ…

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ……ஆ…..ஆ….

ஆண் : கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும்
கற்பனை நீயல்லவோ…

ஆண் : அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ……ஆ…..ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here