Singers : T. M. Soundararajan and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Male : Paavakkadai theruvil
Paduthirundha paavi enai
Gnyanakkadal thannil
Nadakka vitta vel muruga
Aarupadai nayaganae
Avamadhikkum maanidarkku
Maarudhalai kaatti
Manam thiruthum vel Muruga
Muruga
Male : Sathiya thirukkolam
Muthaiyan vadivendra
Thaththuvam arindhen kandha
Sathiya thirukkolam
Muthaiyan vadivendra
Thaththuvam arindhen kandha
Male : Piththanin vilayaattu
Pizhai poruthae undhan
Perarul thandhaai kandha
Male : Kai sumandhaal enna
Thalai sumandhaal enna
Kandhanai sumakkindradhu
Avan kadan thandha en meni
Kaalathilae vandhu
Kadanaiyum theerkkindrathu
Kadanaiyum theerkkindrathu
Male : Muruga
Sathiya thirukkolam
Muthaiyan vadivendra
Thaththuvam arindhen kandha
Thaththuvam arindhen kandha
Female : Maadhumayaal maindhan
Maasi magam kaana
Maanudam thiralgindradhu
Maadhumayaal maindhan
Maasi magam kaana
Maanudam thiralgindradhu
Female : Indha makkalin vinaiyenum
Sikkalai theerkkum karam
Sikkalil irukkindradhu
Karam sikkalil irukkindradhu
Male : Azhagappan menikku
Azhagu seithaal adhil
Arul neri jolikkindradhu
Thiru aandiappan kaalil
Aasigal pera vendi
Arasangam varugindradhu
Female : Venthanal pol ezhundha
Vidhiyinil thudippaarkku
Sandhanam tharugindradhu
Nalla veettu kulamagalai
Vilakketri vaikka cholli
Kungumam idugindradhu
Mangala kungumam idugindradhu
Male : Avanidam ponavarkku
Avanai adaindhavarkku
Yamanidam bayamillaiyae
Andha sivanidam om endraal
Ivanidam porul ketppaan
Ivanukku mel illaiyae
Both : Undaana aayudhangal
Onbathu ethirthaalum
Dhandayudham kaakkumae
Avanai kondaadum pergalukku
Kurai yaavum odividum
Kodaanu kodi varumae
Kodaanu kodi varumae
பாடகர்கள் : டி. சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : பாவக்கடைத் தெருவில்
படுத்திருந்த பாவியென்னை
ஞானக் கடல் தன்னில்
நடக்கவிட்ட வேல்முருகன்
ஆறுபடை நாயகனே
அவமதிக்கும் மானிடர்க்கு
மாறுதலைக் காட்டி மனம்
திருந்தும் வேல் முருகா
ஆண் : சத்தியத் திருக்கோலம்
முத்தையன் வடிவென்ற
தத்துவம் அறிந்தேன் கந்தா
சத்தியத் திருக்கோலம்
முத்தையன் வடிவென்ற
தத்துவம் அறிந்தேன் கந்தா
ஆண் : பித்தனின் விளையாட்டுப்
பிழை பொறுத்தே உந்தன்
பேரருள் தந்தாய் கந்தா
ஆண் : கை சுமந்தாலென்ன
தலை சுமந்தாலென்ன
கந்தனைச் சுமக்கின்றது
அவன் கடன் தந்த என் மேனி
காலத்திலே வந்து
கடனையும் தீர்க்கின்றது
கடனையும் தீர்க்கின்றது
ஆண் : முருகா
சத்தியத் திருக்கோலம்
முத்தையன் வடிவென்ற
தத்துவம் அறிந்தேன் கந்தா
தத்துவம் அறிந்தேன் கந்தா
பெண் : மாதுமையாள் மைந்தன்
மாசிமகம் காண
மானிடம் திரள்கின்றது
மாதுமையாள் மைந்தன்
மாசிமகம் காண
மானிடம் திரள்கின்றது
பெண் : இந்த மக்களின் வினை என்னும்
சிக்கலைத் தீர்க்கும் கரம்
சிக்கலில் இருக்கின்றது
கரம் சிக்கலில் இருக்கின்றது
ஆண் : அழகப்பன் மேனிக்கு
அழகு செய்தால் அதில்
அருள் நெறி ஜொலிக்கின்றது
திரு ஆண்டியப்பன் காலில்
ஆசிகள் பெறவேண்டி
அரசாங்கம் வருகின்றது
பெண் : வெந்தணல் போல் எழுந்த
விதியினில் துடிப்போர்க்குச்
சந்தனம் தருகின்றது
நல்ல வீட்டுக் குலமகளை
விளக்கேற்றி வைக்கச் சொல்லி
குங்குமம் இடுகின்றது
மங்கல குங்குமம் இடுகின்றது
ஆண் : அவனிடம் போனவர்க்கு
அவனை அடைதவர்க்கு
எமனிடம் பயமில்லையே
அந்த சிவனிடம் ஓம் என்றால்
இவனிடம் பொருள் கேட்டான்
இவனுக்கு மேலில்லையே
இருவர் : உண்டான ஆயுதங்கள்
ஒன்பது எதிர்த்தாலும்
தண்டாயுதம் காக்குமே
அவனைக் கொண்டாடும் பேருகளுக்கு
குறையாவும் ஓடிவிடும்
கோடானு கோடி வருமே….
கோடானு கோடி வருமே….