Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Nalla samsaaram vaaithadharkku
Nandri solvenae naan unakku
Unnai adaindhen thunaiyaaga
Munnam purindha thavamaaga
Vittu pogaadhammaa uravu
Idhu thaeyaadha vennilavu
Andru potten poo maalai
Indru padithaen paamaalai

Male : Nalla samsaaram vaaithadharkku
Nandri solvenae naan unakku

Male : Vaan paarthadhae nee paarthida
Sippi ondru vanna sippi ondru

Female : Neer vaarthadhum undaanadhae
Muthu ondru chinna muthu ondru

Male : Aaraezhu maadhangal ponaal
Aaraaro paattingu kaetkkum

Female : Aavaaram poo pondra kannaal
Appaavai en pillai paarkkum

Male : Nitham nitham thandha anbu mutham

Female : Pillaikku thaan ini aaga motham

Male : Ondrirandu vendum endru
Unnai naan kettpen

Female : Samsaaram aanadharkku
Nandri solvenae dheivathirkku
Unnai adaindhen thunaiyaaga
Munnam purindha thavamaaga
Vittu pogaadhaiyaa uravu
Idhu thaeyaadha vennilavu
Mm.mm..mm…mm…mm…mm..

Male : Pon maanaiyum semmeenaiyum
Kannil kanden undhan kannil kanden

Female : Paalaatraiyum thaenaatraiyum
Unnil kanden kannae unnil kanden

Male : Unnodu naan vaazhum veedu
Aanandha poo pookkum kaadu

Female : Andrilgal ondraana koodu
Aagaadhu vaeraedhum eedu

Male : Thaaram vandhaal
Konjum thendral endru

Female : Pillai vandhaan
Vanna mullai endru

Male : Pennarasi ponnarasi
Unnai pol yaedhu

Female : Samsaaram aanadharkku
Nandri solvenae dheivathirkku

Male : Unnai adaindhen thunaiyaaga
Munnam purindha thavamaaga

Female : Vittu pogaadhaiyaa uravu
Idhu thaeyaadha vennilavu

Male : Andru potten poo maalai
Indru padithaen paamaalai

Female : Undhan samsaaram aanadharkku
Nandri solvenae dheivathirkku

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதம்மா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை

ஆண் : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு

ஆண் : வான் பார்த்ததே நீ பார்த்திட
சிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று

பெண் : நீர் வார்த்ததும் உண்டானதே
முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று

ஆண் : ஆறேழு மாதங்கள் போனால்
ஆராரோ பாட்டிங்கு கேட்கும்

பெண் : ஆவாரம் பூப் போன்ற கண்ணால்
அப்பாவை என் பிள்ளை பார்க்கும்

ஆண் : நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்

பெண் : பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்

ஆண் : ஒன்றிரண்டு வேண்டும் என்று
உன்னை நான் கேட்டேன்

பெண் : சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….

ஆண் : பொன் மானையும் செம்மீனையும்
கண்ணில் கண்டேன்
உந்தன் கண்ணில் கண்டேன்

பெண் : பாலாற்றையும் தேனாற்றையும்
உன்னில் கண்டேன்
கண்ணே உன்னில் கண்டேன்

ஆண் : உன்னோடு நான் வாழும் வீடு
ஆனந்தப் பூப் பூக்கும் காடு

பெண் : அன்றில்கள் ஒன்றான கூடு
ஆகாது வேறேதும் ஈடு

ஆண் : தாரம் வந்தாள்
கொஞ்சும் தென்றல் என்று

பெண் : பிள்ளை வந்தான்
வண்ண முல்லை என்று

ஆண் : பெண்ணரசி பொன்னரசி
உன்னைப் போல் ஏது

பெண் : சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு

ஆண் : உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக

பெண் : விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு

ஆண் : அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை

பெண் : உந்தன் சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here