Singers : S. P. Balasubrahmanyam and Geetha

Music by : Ilayaraja

Female : Ada maamaa yaenyaa
Samsaaram unakku
Un samsaaram aanenae
Sugam yaedhu enakku
Color TV undaa
Cable connection undaa
Oru mixie undaa
Washing machine thaan undaa
Ungala kattinaa ennaachu em paadu

Male : Ada yaen maa kovam
Em maela unakku
Un aasa pollaadhu
Alavodu nirutthu
Un sangadam perusu
En sambalam sirusu
Idhu purinjirundhaalum
Adam pudikkudhu manasu
Annaadam kathinaa ennaagum em paadu

Female : Ada maamaa yaenyaa
Samsaaram unakku

Male : Ada yaemmaa kovam
Em maela unakku

Female : Nee vaangum sambalam thaanae
Maalini purushan vaanguraan
Saturday park thaan sundaynaa beach thaan

Male : Adi yaendi enna pottu
Dhinam thorum thaakkura
Veliyae thaan paakkura kondaannu kekkura

Female : Puli paal thaannu kettaa kooda
Tharanum avan thaan aambala

Male : Puli adichaalae neeyaa varuvae
Yena yaen maattura vambula

Female : Ada ellaathukkum
Readymade badhil onnu vechirukake
Ada en vaaya thaan
Adha cholli idhacholli thinichirukkae

Male : Ada yaenmaa… en kannu…
Male : Ada yaen maa kovam
Em maela unakku
Un aasa pollaadhu
Alavodu nirutthu

Female : Color TV undaa
Cable connection undaa
Oru mixie undaa
Washing machine thaan undaa
Ungala kattinaa ennaachu em paadu

Male : Ada yaen maa kovam
Em maela unakku

Female : Un samsaaram aanenae
Sugam yaedhu enakku

Male : Oru ooril unna pola
Paalkaara pombala
Paal vitthu pozhachava thaan
Parisodu vaazhndhava thaan
Vaeroruthi kaadhu jimikki
Paarthaalaa roattula
Adha paatha vaela thaan
Jimikki mela aasa thaan
Athana paalum vithadhum kadaiyil
Jimikki vaanga enninaa
Kaadhula pottaa eppadi aadum
Appadi karpana panninaa

Male : Ava verum kaadha thaan
Thalukkunu kilukkunu
Kulukki puttaa
Ada thala maela thaan
Irukkura paanaiya odachu puttaa

Male : Ada yaenmaa… en kannu…
Ippa thaanaa puriyum
Kadhaiyoda karuthu
Un aasa pollaadhu
Alavodu niruthu
Un sangadam perusu
En sambalam sirusu
Idhu purinjirundhaalum
Adam pudikkudhu manasu
Annaadam kathinaa ennaagum em paadu

Female : Ada maamaa yaenyaa
Samsaaram unakku

Male : Ada yaenmaa kovam
Em maela unakku
Adadaa adadada dadadaa

பாடகர்கள் : கீதா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அட மாமா ஏன்யா
சம்சாரம் உனக்கு
உன் சம்சாரம் ஆனேனே
சுகம் ஏது எனக்கு
கலர் டிவி உண்டா
கேபிள் கனெக்‌ஷன் உண்டா
ஒரு மிக்ஸி உண்டா
வாஷிங் மிஷின்தான் உண்டா
உங்களக் கட்டினா என்னாச்சு எம் பாடு

ஆண் : அட ஏன்மா கோவம்
எம் மேல உனக்கு
உன் ஆச பொல்லாது
அளவோடு நிறுத்து
ஒன் சங்கடம் பெருசு
என் சம்பளம் சிறுசு
இது புரிஞ்சிருந்தாலும்
அடம் புடிக்குது மனசு
அன்னாடம் கத்தினா என்னாகும் எம் பாடு

பெண் : அட மாமா ஏன்யா
சம்சாரம் உனக்கு

ஆண் : அட ஏன்மா கோவம்
எம் மேல உனக்கு

பெண் : நீ வாங்கும் சம்பளம் தானே
மாலினி புருஷன் வாங்குறான்
சேட்டர்டே பார்க்குத்தான் சன்டேயின்னா பீச்சுதான்

ஆண் : அடி ஏண்டி என்னப் போட்டு
தினம் தோறும் தாக்குற
வெளியேதான் பாக்குற கொண்டான்னு கேக்குற

பெண் : புலி பால் தான்னு கேட்டா கூட
தரணும் அவன்தான் ஆம்பள

ஆண் : புலி அடிச்சாலே நீயா வருவே
என ஏன் மாட்டுற வம்புல

பெண் : அட எல்லாத்துக்கும்
ரெடிமேட் பதில் ஒண்னு வெச்சிருக்கே
அட என் வாயத் தான்
அதச் சொல்லி இதச் சொல்லி திணிச்சிருக்கே

ஆண் : அட ஏன்மா… என் கண்ணு…
ஆண் : அட ஏன்மா கோவம்
எம் மேல உனக்கு
உன் ஆச பொல்லாது
அளவோடு நிறுத்து

பெண் : கலர் டிவி உண்டா
கேபிள் கனெக்‌ஷன் உண்டா
ஒரு மிக்ஸி உண்டா
வாஷிங் மிஷின்தான் உண்டா
உங்களக் கட்டினா என்னாச்சு எம் பாடு

ஆண் : அட ஏன்மா கோவம்
எம் மேல உனக்கு

பெண் : உன் சம்சாரம் ஆனேனே
சுகம் ஏது எனக்கு

ஆண் : ஒரு ஊரில் உன்னப் போல
பால்காரப் பொம்பள
பால் வித்துப் பொழச்சவதான்
பரிசோடு வாழ்ந்தவதான்
வேறொருத்தி காதுல
ஜிமிக்கி பார்த்தாளா ரோட்டுல
அத பாத்த வேளைதான்
ஜிமிக்கி மேல் ஆசைதான்
அத்தன பாலும் வித்ததும் கடையில்
ஜிமிக்கி வாங்க எண்ணினா
காதுல போட்டா எப்படி ஆடும்
அப்படி கற்பன பண்ணினா

ஆண் : அவ வெறும் காதத்தான்
தளுக்குனு கிளுக்குனு
குலுக்கிப் புட்டா
அட தல மேலதான்
இருக்குற பானைய ஒடச்சுப் புட்டா

ஆண் : அட ஏன்மா… என் கண்ணு…
இப்பத் தானா புரியும்
கதையோட கருத்து
உன் ஆச பொல்லாது
அளவோடு நிறுத்து
உன் சங்கடம் பெருசு
என் சம்பளம் சிறுசு
இது புரிஞ்சிருந்தாலும்
அடம் புடிக்குது மனசு
அன்னாடம் கத்தினா என்னாகும் எம் பாடு

பெண் : அட மாமா ஏன்யா
சம்சாரம் உனக்கு

ஆண் : அட ஏன்மா கோவம்
எம் மேல உனக்கு
அடடா அடடட டடடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here