Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : Sankar Ganesh
Male : Puyalilae oru vilakku
Poradi kondirukku
Pon vilakkai kaapadharkku
Namakkul yen vazhakku
Male : Kangal malarattumae
En kanmai sirikkattumae
Naan paartha pillai enai paarkka vendum
Naan paartha pillai enai paarkka vendum
Enai paartha kangal unai paarkka vendum
Male : Kangal malarattumae
En kanmai sirikkattumae
Female : Naadum nadhiyum penn enbaar
Nilavum malarum penn enbaar
Penmaiyin thanmai iyarkkaiyum sollum
Pengalin ullam karunaiyin vellam
Naanum penn thaanae
Oru thaayin inam thaanae
Male : Oorum ulagam iruttu araiyil
Ullathendrennum magan kannil
Oli thara vendum enakkaaga
Naan uyiraiyum tharuven adharkkaaga
Male : Kangal malarattumae
En kanmai sirikkattumae
Female : Naanum penn thaane
Oru thaaiyin inam thaanae
Male : Androru naal oliyaetram
Agal vilakkaaga nee irunthaai
Female : Yaetriya vilakkai edutherinthu
Iruttinil ennai thavikka vittaai
Male : Kovalan veruthaan kannagiyai
Female : Andha kannagi mannithaal kovalanai
Male : Pirinthavar kalanthaar uravinil thaan
Female : Naan pirinthathu endrum pirinthathu thaan
Male : Thalaiviyin kobam magan meedhaa
Female : Thandanai thandhaal thaai manadhaa
Female : Naanum penn thaane
Oru thaaiyin inam thaanae
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : புயலிலே ஒரு விளக்கு
போராடிக் கொண்டிருக்கு
பொன் விளக்கை காப்பதற்கு
நமக்குள் ஏன் வழக்கு
ஆண் : கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
எனைப் பார்த்த கண்கள் உனைப் பார்க்க வேண்டும்
ஆண் : கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
பெண் : நாடும் நதியும் பெண் என்பார்
நிலவும் மலரும் பெண் என்பார்
பெண்மையின் தன்மை இயற்கையும் சொல்லும்
பெண்களின் உள்ளம் கருணையின் உள்ளம்
நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே
ஆண் : ஊரும் உலகம் இருக்கையிலே
உள்ளதென்றெண்ணும் மகன் கண்ணில்
ஒளித் தர வேண்டும் எனக்காக
நான் உயிரையும் தருவேன் அதற்காக
ஆண் : கண்கள் மலரட்டுமே
என் கண்மணி சிரிக்கட்டுமே
பெண் : நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே
ஆண் : அன்றொரு நாள் ஒளியேற்றும்
அகல் விளக்காக நீயிருந்தாய்
பெண் : ஏற்றிய விளக்கை எடுத்தெறிந்து
இருட்டினில் என்னை தவிக்கவிட்டாய்
ஆண் : கோவலன் வெறுத்தான் கண்ணகியை
பெண் : அந்த கண்ணகி மன்னித்தாள் கோவலனை
ஆண் : பிரிந்தவர் கலந்தால் உறவினில்தான்
பெண் : நான் பிரிந்தது என்றும் பிரிந்ததுதான்
ஆண் : தலைவியின் கோபம் மகன் மீதா……
பெண் : தண்டனை தந்தால் தாய் மனதா ……….
பெண் : நானும் பெண்தானே
ஒரு தாயின் இனம்தானே