Singer : Stephen Zechariah

Music by : DEYO

Male : Adi sooli pennae thoor azhagae
Alli povathenna tholavinil megam
Neeli thimir konda azhagiyalae
Thalli sella sella kooduthu mogam

Male : Adi sooli pennae thoor azhagae
Alli povathenna tholai thooram
Neeli thimir konda azhagiyalae
Solli sollavathenna vizhiyoram

Male : Enai eerkkum paarvayilae
Pudhiraana siru thuliyae
Uyir saikkum azhaginilae
Aridhaana penn azhagae

Male : Adadaa vizhiyil nuzhainthu
Sillidum veyilae
Viralinidaiyae sudar vidum mazhaiyae
Vizhiyil nuzhainthu sillidum veyilae
Viralinidaiyae sudar vidum mazhaiyae

Male : Maaya thuli pola nee pesa
Kaala peru veliyae ilai paarum
Aazhathulai pola koor vizhiya
Maayamena bodhai thalaikkerum

Male : Netri mugattil mudikatrai irandu
Sarinthu vizhum thooranai azhagai
Ada eppadi solla ennavendru solla
Aiyyaiyo athu pol oor kavithai

Male : Kann uranga kaadhali madi thedum
Kaidhi yena aaveno
Chinnan chiru viralal nee modhu
Kai kuzhandhai naan dhaano

Male : Mouna tharunam nee veesum
Paarvaigalum bodhai enakkoodum
Thozhgal urasum kaadhalinum
Thoonduthenai parigasam

Male : Kattil araiyil thaabam theerkkum
Adhi kaalai thalaiyanai melae
Ottra nodiyil etti therikkum
Agriyinai kobangal varumae

Male : Niththam oru piniyil thadumarum
Yekkangalum kalaivayo
Saththamidum idhayam thunai thaedum
Yegantham theerpaayo

Male : Adi sooli pennae thoor azhagae
Alli povathenna tholavinil megam
Neeli thimir konda azhagiyalae
Thalli sella sella kooduthu mogam

Male : Adi sooli pennae thoor azhagae
Alli povathenna tholai thooram
Neeli thimir konda azhagiyalae
Solli sollavathenna vizhiyoram

பாடகர் : ஸ்டீபன் சக்ரியா

இசையமைப்பாளர் : டியோ

ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலைவினில் மேகம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
தள்ளி செல்ல செல்ல கூடுது மோகம்

ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலை தூரம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
சொல்லி சொல்வதென்ன விழியோரம்

ஆண் : எனை ஈர்க்கும் பார்வையிலே
புதிரான சிறு துளியே
உயிர் சாய்க்கும் அழகினிலே
அறிதான பெண் அழகே

ஆண் : அடடா விழியில் நுழைந்து
சில்லிடும் வெயிலே
விரலினிடையே சுடர் விடும் மழையே
விழியில் நுழைத்து சில்லிடும் வெயிலே
விரலினிடையே சுடர் விடும் மழையே

ஆண் : மாய துளி போல நீ பேச
கால பெரு வெளியே இளைப்பாரும்
ஆழதுளை போல கூர் விழியா
மாயமென போதை தலைக்கேரும்

ஆண் : நெற்றி முகட்டில் முடிகற்றை இரண்டு
சரிந்து விழும் தூரணை அழகை
அட எப்படி சொல்ல என்னவென்று சொல்ல
ஐய்யயோ அது போல் ஒரு கவிதை

ஆண் : கண் உறங்க காதலி மடி தேடும்
கைதி என ஆவேனோ
சின்னன் சிறு விரலால் நீ மோது
கை குழந்தை நான்தானோ

ஆண் : மௌன தருணம் நீ வீசும்
பார்வைகளும் போதை எனக்கூடும்
தோள்கள் உரசும் காதணியும்
தூண்டுகிற வாடை பரிகாசம்

ஆண் : கட்டில் அறையில் தாபம் தீர்க்கும்
அதிகாலை தலையணை மேலே
ஒற்றை நொடியில் எட்டி தெறிக்கும்
அஃறிணை கோபங்கள் வருமே

ஆண் : நித்தம் ஒரு பிணியில் தடுமாறும்
ஏக்கங்களும் கலைவாயோ
சத்தமிடும் இதயம் துணை தேடும்
ஏகாந்தம் தீர்ப்பையோ

ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலைவினில் மேகம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
தள்ளி செல்ல செல்ல கூடுது மோகம்

ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலை தூரம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
சொல்லி சொல்வதென்ன விழியோரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here