Singer : P. Susheela
Music by : G. Devarajan
Female : Madha vedhanaayagi
Un magalin kuraiyai kel amma
Female : Madha vedhanaayagi
Un magalin kuraiyai kel amma
Ezhai ennai aadhari
Nee indrael vaazhvum yaedhamma
Maadha ……………
Female : Siluvai konda nizhalai thaedi
Paravai ondru vandhathu
En thiruvae thaayin uruvae endru
Kavidhai paadi nindrathu
Female : Melugaai unadhu koyilil
Naan urugum indha velaiyil
Karunai kaattu annaiyae
Unai panindhen endhan annaiyae
Annaiyae…ae…. annaiyae…ae…
Female : Un paadham engal raaja sabai
Adhu paavam illaa gyaana sabai
Vaedham pottrum thaththuvam nee
En vizhigal theettum siththiram nee
Female : Vaanam boomi aanaval nee
En devan thannai eendraval nee
Noiyai theerkum marunthaanaai
Pasi naerum bodhu virunthaanaai
Annaiyae…ae…. annaiyae…ae…
Female : Madha vedhanaayagi
Un magalin kuraiyai kel amma
Ezhai ennai aadhari
Nee indrael vaazhvum yaedhamma
Maaadhaaa….
பாடகி : பி . சுஷீலா
இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன்
பெண் : மாதா….வேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
பெண் : மாதா….வேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
ஏழை என்னை ஆதரி
நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா…
மாதா ….
பெண் : சிலுவை கொண்ட நிழலைத் தேடி
பறவை ஒன்று வந்தது
என் திருவே தாயின் உருவே என்று
கவிதை பாடி நின்றது
பெண் : மெழுகாய் உனது கோயிலில் நான்
உருகும் இந்த வேளையில்
கருணை காட்டு அன்னையே
உனை பணிந்தேன் எந்தன் அன்னையே…
அன்னையே… அன்னையே…
பெண் : உன் பாதம் எங்கள் ராஜ சபை
அது பாவம் இல்லா ஞான சபை
வேதம் போற்றும் தத்துவம் நீ என்
விழிகள் தீட்டும் சித்திரம் நீ
பெண் : வானம் பூமி ஆனவள் நீ
என் தேவன் தன்னை ஈன்றவள் நீ
நோயைத் தீர்க்கும் மருந்தானாய்
பசி நேரும்போது விருந்தானாய்
அன்னையே…….. அன்னையே
பெண் : மாதா….வேதநாயகி
உன் மகளின் குறையை கேளம்மா
ஏழை என்னை ஆதரி
நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா…
மாதா ….