Singers : Malasiya Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Male : Jaadhi ennada jaadhi adhu
Janangala pudicha vyaadhi
Jaadhi ennada jaadhi adhu
Janangala pudicha vyaadhi
Porandhaa adhan per kozhandha
Ponaa adhan per ponam thaan
Male Chorus : Porandhaa adhan per kozhandha
Female Chorus : Ponaa adhan per ponam thaan

Male : Varnamum kirnamum idaiyiilae vandhadhu
Idainjala thanthadhu edhukadhu odhukku
Chorus : Jaadhi ennada jaadhi

Male : Janathogaiyai kaattilum
Jadhi thaan irukkudhu
Jaadhikkoru sangam vachu
Sanda nadakkudhu
Moonu niram kodiyila thaan
Irundhaa irukattum
Naalu neram namakkedhukku
Onnaa serattum

Male : Imayamum kumariyum inaidhida irupadhu
Chorus : Indhiya indhaiya
Male : Idhil ulla manidharil vaguppugal piripadhu
Chorus : Needhiyaa needhiyaa

Male : Vaazhndhaalum ingae ondraaga vaazhvom
Veezhndhaalum ingae ondraaga veezhvom
Oru marathu paravaigalaai
Irukkindra manidharai inangkandu pirikkira
Chorus : Jaadhi ennada jaadhi

Chorus : Aaa….aaa….aa.a…aaa…aa….

Chorus : Aaa….aaa….aa.a…aaa…aa….

Chorus : Aaa….aaa….aa.a…aaa…aa….
Aaa….aaa….aa.a…aaa…aa….

Male : Aduthavarin kudi keduppaan
Avan thaan thaazhnthavan
Azhudhavarin kan thudaipaan
Avan thaan uyarthavan

Male : Idhai thavira manidharilae baedham illaiyae
Indhiyaraai porandhavanga oruthaai pillaiyae
Purappadu purappadu por thodu por thodu
Chorus : Pirivugal saaganum
Male : Ezhudhanum ezhudhanum iniyoru vidhi seidhu
Chorus : Arasiyal saasanam

Male : Sama needhi kaanum samudhaayam venum
Adhanaal thaan ingae pudhu vaazhvu thonum
Adhuvaraiyil urakkam illai
Unarchigal kothikuthu narambugal thudikuthu
Chorus : Jaadhi ennada jaadhi adhu

Male : Jaadhi ennada jaadhi adhu
Janangala pudicha vyaadhi
Jaadhi ennada jaadhi adhu
Janangala pudicha vyaadhi
Porandhaa adhan per kozhandha
Ponaa adhan per ponam thaan
Female Chorus : Porandhaa adhan per kozhandha
Male Chorus : Ponaa adhan per ponam thaan

Male : Varnamum kirnamum idaiyiilae vandhadhu
Idainjala thanthadhu edhukadhu odhukku
Chorus : Jaadhi ennada jaadhi …(2)

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜாதி என்னடா ஜாதி அது
ஜனங்கள புடிச்ச வியாதி
ஜாதி என்னடா ஜாதி அது
ஜனங்கள புடிச்ச வியாதி
பொறந்தா அதன் பேர் கொழந்த
போனா அதன் பேர் பொணம்தான்
ஆண் குழு : பொறந்தா அதன் பேர் கொழந்த
பெண் குழு : போனா அதன் பேர் பொணம்தான்

ஆண் : வர்ணமும் கிர்ணமும் இடையிலே வந்தது
இடைஞ்சல தந்தது எதுக்கது ஒதுக்கு
குழு : ஜாதி என்னடா ஜாதி…..

ஆண் : ஜனத்தொகையை காட்டிலும்தான்
ஜாதிதான் இருக்குது
ஜாதிக்கொரு சங்கம் வச்சு சண்ட நடக்குது
மூணு நிறம் கொடியிலதான் இருந்தா இருக்கட்டும்
நாலு நேரம் நமக்கெதுக்கு ஒண்ணா சேரட்டும்

ஆண் : இமயமும் குமரியும் இணைந்திட இருப்பது
குழு : இந்தியா இந்தியா
ஆண் : இதிலுள்ள மனிதரில் வகுப்புகள் பிரிப்பது
குழு : நீதியா நீதியா

ஆண் : வாழ்ந்தாலும் இங்கே ஒன்றாக வாழ்வோம்
வீழ்ந்தாலும் இங்கே ஒன்றாக வீழ்வோம்
ஒரு மரத்து பறவைகளாய்
இருக்கின்ற மனிதரை இனங்கண்டு பிரிக்கிற
குழு : ஜாதி என்னடா ஜாதி……

குழு : ………………………..

ஆண் : அடுத்தவரின் குடி கெடுப்பான்
அவன்தான் தாழ்ந்தவன்
அழுதவரின் கண் துடைப்பான்
அவன்தான் உயர்ந்தவன்

ஆண் : இதை தவிர மனிதரிலே பேதமில்லையே
இந்தியராய் பொறந்தவங்க ஒருதாய் பிள்ளையே
புறப்படு புறப்படு போர்த் தொடு போர்த் தொடு
குழு : பிரிவுகள் சாகணும்
ஆண் : எழுதணும் எழுதணும் இனியொரு விதி செய்து
குழு : அரசியல் சாசனம்

ஆண் : சம நீதி காணும் சமுதாயம் வேணும்
அதனால்தான் இங்கே புது வாழ்வு தோணும்
அதுவரையில் உறக்கமில்லை
உணர்ச்சிகள் கொதிக்குது நரம்புகள் துடிக்குது
குழு : ஜாதி என்னடா ஜாதி அது

ஆண் : ஜாதி என்னடா ஜாதி அது
ஜனங்கள புடிச்ச வியாதி
ஜாதி என்னடா ஜாதி அது
ஜனங்கள புடிச்ச வியாதி
பொறந்தா அதன் பேர் கொழந்த
போனா அதன் பேர் பொணம்தான்
ஆண் குழு : பொறந்தா அதன் பேர் கொழந்த
பெண் குழு : போனா அதன் பேர் பொணம்தான்

ஆண் : வர்ணமும் கிர்ணமும் இடையிலே வந்தது
இடைஞ்சல தந்தது எதுக்கது ஒதுக்கு
குழு : ஜாதி என்னடா ஜாதி…..
ஜாதி என்னடா ஜாதி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here