Singer : Soolamangalam Rajalakshmi
Music by : S. M. Subbaiah Naidu
Female : Kaana kan kodi vendum
Aiyan kaal thookki nindraadum
Kaatchi ponnampalaththil
Kaana kan kodi vendum
Aiyan kaal thookki nindraadum
Kaatchi ponnampalaththil
Female : Kaana kan kodi vendum
Female : Maanada mazhuvaada madhiyaada punalaada
Maanada mazhuvaada madhiyaada punalaada
Vaanada ayanaada mangai sivagaamiyaada
Female : Kaana kan kodi vendum
Female : Neer pooththa mega niram konda vannaa
Neer pooththa mega niram konda vannaa
Kaar pooththa unthi paranthaamane kanna
Paar meavum srirangam kaaviri karaimaelae
Vannaththu thuyil kondulagai kaakkum perumaalae
Female : Yean palli kondeer aiyaa srirangaanaathaa
Aa…..aaa…..aa….aa….aa….
Yean palli kondeer aiyaa srirangaanaathaa
Yean palli kondeer aiyaa srirangaanaathaa
Aa…..aaa…..aa….aa….aa….
Female : Manamigum kadhampavana vaasini
Aa…..aaa…..aa….aa….aa….
Manamigum kadhampavana vaasini
Maamadhuraa puriyalum devi magaraani
Manamigum kadhambavana vaasini
Maamadhuraa puriyaalum devi magaraani
Female : Dhikvijayam seiya seanaiyudanae sendru
Sokkanukku maalaiyitta meenaatchi
Dhikvijayam seiya seanaiyudanae sendru
Sokkanukku maalaiyitta meenaatchi
Female : Manamigum kadhampavana vaasini
Maamadhuraa puriyalum devi magaraani
Female : Kuravalli kunjari maruvidum kuganae
Aaa……aaa….aa….aa….aa…aaa….
Kuravalli kunjari maruvidum kuganae
Thiruchendhoor valar aaru muganae
Kuravalli kunjari maruvidum kuganae
Thiruchendhoor valar aaru muganae
Female : Oru maangani vendi sirupillaithanamaaga
Ulagai valam vantha sivapaala
Oru maangani vendi sirupillaithanamaaga
Ulagai valam vantha sivapaala
Female : Un thirukoyil valam vara
Naanenna punniyam seithen vadivelaa
Naanenna punniyam seithen vadivelaa
Female : Pachchai maamalai pol maeni
Pavalavaai kamalasengan achchuthaa amarare
Aayar tham kozhunthae
Female : Adiyodu vinnodum pirivindri
Ayiram pallaandu
Panivaai nin malar maarbil vaazhkindra
Mangaiyum pallandu
Female : Pallaandu pallaandu
Pallaayiraraththaandu
Pallaandu pallaandu
Pallaayiraraththaandu
Palakodi nooraayiram….
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : காண கண் கோடி வேண்டும்
ஐயன் கால் தூக்கி நின்றாடும்
காட்சி பொன்னம்பலத்தில்
காண கண் கோடி வேண்டும்
ஐயன் கால் தூக்கி நின்றாடும்
காட்சி பொன்னம்பலத்தில்
பெண் : காண கண் கோடி வேண்டும்
பெண் : மானாட மழுவாட மதியாட புனலாட
மானாட மழுவாட மதியாட புனலாட
வானாட அயனாட மங்கை சிவகாமியாட
பெண் : காண கண் கோடி வேண்டும்
பெண் : நீர்ப்பூத்த மேக நிறம் கொண்ட வண்ணா
நீர்ப்பூத்த மேக நிறம் கொண்ட வண்ணா
கார்ப் பூத்த உந்தி பரந்தாமனே கண்ணா
பார் மேவும் ஸ்ரீரங்கம் காவிரி கரைமேலே
வண்ணத்துயில் கொண்டுலகை காக்கும் பெருமாளே
பெண் : ஏன் பள்ளிக் கொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதா……
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆ……..ஆ….
ஏன் பள்ளிக் கொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதா…….
ஏன் பள்ளிக் கொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதா…….
ஆஆ……ஆஅ……ஆஅ……ஆ
பெண் : மணமிகும் கதம்பவன வாசினி
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆ……..ஆ….
மணமிகும் கதம்பவன வாசினி
மாமதுரா புரியாளும் தேவி மகராணி
மணமிகும் கதம்பவன வாசினி
மாமதுரா புரியாளும் தேவி மகராணி
பெண் : திக்விஜயம் செய்ய சேனையுடனே சென்று
சொக்கனுக்கு மாலையிட்ட மீனாட்சி
திக்விஜயம் செய்ய சேனையுடனே சென்று
சொக்கனுக்கு மாலையிட்ட மீனாட்சி
பெண் : மணமிகும் கதம்பவன வாசினி
மாமதுரா புரியாளும் தேவி மகராணி
பெண் : குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆ……..ஆ….
குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே
திருச்செந்தூர் வளர் ஆறுமுகனே
குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே
திருச்செந்தூர் வளர் ஆறுமுகனே
பெண் : ஒரு மாங்கனி வேண்டி சிறுப்பிள்ளைத்தனமாக
உலகை வலம் வந்த சிவபாலா…….
ஒரு மாங்கனி வேண்டி சிறுப்பிள்ளைத்தனமாக
உலகை வலம் வந்த சிவபாலா…….
பெண் : உன் திருக்கோயில் வலம் வர
நானென்ன புண்ணியம் செய்தேன் வடிவேலா………
நானென்ன புண்ணியம் செய்தேன் வடிவேலா………
பெண் : பச்சை மாமலை போல் மேனி
பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரரே
ஆயர் தம் கொழுந்தே…..
பெண் : அடியோடும் விண்ணோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
பணிவாய் நின் மலர் மார்பில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
பெண் : பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்……..