Singer : P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female : Kalyaana pudaivai katti
Kaaleduththu manaiyil vaiththu
Kalyaana pudaivai katti
Kaaleduththu manaiyil vaiththu
Pallaakku polae nindren nerilae
Antha paruva magan paranthu vittaan thaerilae
Antha paruva magan paranthu vittaan thaerilae

Female : Uruvamendra mullaiyilae
Ullamendra thaenaiyalli
Uruvamendra mullaiyilae
Ullamendra thaenaiyalli
Oruvanukku vaiththirunthaen uravilae
Avan odameri sendru vittan iravilae

Female : Kalyaana pudaivai katti
Kaaleduththu manaiyil vaiththu
Pallaakku polae nindren nerilae
Antha paruva magan paranthu vittaan thaerilae

Female : Seppu silai maeni endru
Seppi vantha deva magan
Seppu silai maeni endru
Seppi vantha deva magan
Seppiyathu yaavumindru poimaiyae
Naan seppu silai aanathuthaan unmaiyae
Naan seppu silai aanathuthaan unmaiyae

Female : Maanda udal marainthaalum
Mannil sendru olinthaalum
Maanda udal marainthaalum
Mannil sendru olinthaalum
Meendum vanthu piranthaalum uravilae
Enthan maeni kaanum thalaivanavan oruvanae
Enthan maeni kaanum thalaivanavan oruvanae

Female : Kalyaana pudaivai katti
Kaaleduththu manaiyil vaiththu
Pallaakku polae nindren nerilae
Antha paruva magan paranthu vittaan thaerilae
Antha paruva magan paranthu vittaan thaerilae…ae….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

பெண் : உருவமென்ற முல்லையிலே
உள்ளமென்ற தேனையள்ளி
உருவமென்ற முல்லையிலே
உள்ளமென்ற தேனையள்ளி
ஒருவனுக்கு வைத்திருந்தேன் உறவிலே
அவன் ஒடமேறிச் சென்று விட்டான் இரவிலே

பெண் : கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

பெண் : செப்புச் சிலை மேனி என்று
செப்பி வந்த தேவ மகன்
செப்புச் சிலை மேனி என்று
செப்பி வந்த தேவ மகன்
செப்பியது யாவுமின்று பொய்மையே
நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே
நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே

பெண் : மாண்ட உடல் மறைந்தாலும்
மண்ணில் சென்று ஒளிந்தாலும்
மாண்ட உடல் மறைந்தாலும்
மண்ணில் சென்று ஒளிந்தாலும்
மீண்டும் வந்து பிறந்தாலும் உறவிலே
எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே
எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே

பெண் : கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே
அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே….ஏ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here