Singers : S. Janaki and P. Jayachandran
Music by : M. S. Vishwanathan
Female : Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
Kasthuri thilagham karunaa kadaksham
Aravindha kala nethiramae
Kousalyaa puthram sriramachandhram
Vaidhegi sowbagiyamae
Female : Jenmangal dhorum jananangal kaanum
Poorveegha bandham aanmeegha sondham
Malar vendhan manjam maan konda nenjam
Kothandapaani kaiyodu thanjam
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
Male : Sowndharya naari janagan kumari
Thirumaeni devaalayam
Sriraaman konjum angangal engum
Sandhosa romanjanam
Male : Vilaalan maarbil vilaiyaadum maanae
Pallaandu paadum paamaalai naanae
Vilaalan maarbil vilaiyaadum maanae
Pallaandu paadum paamaalai naanae
Murkaalam yavum unnodu paadum deiveegha raagam
Male : Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
Female : Rajaathiraajan dhevaadhi devan
Raghuvamsa sugumaaranae
Aadhaaram neeyae avadhaaram neeyae
Shaastaanga namaskaaramae
Female : Kaviyazhum yaarum kondaadum naadhan
Puviyaazha vandhaan poomaalai thandhaan
Male : Seethavin dhegam milirgindra vannam
Arul maari peidhaan abhisaegam seidhaan
Male : Jenmangal dhorum jananangal kaanum
Poorveegha bandham aanmeegha sondham
Female : Malar vendhan manjam maan konda nenjam
Kothandapaani kaiyodu thanjam
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே….
கஸ்தூரி திலகம் கருணா கடாக்ஷம்
அரவிந்த கள நேத்திரமே
கௌசல்யா புத்திரம் ஸ்ரீராமச்சந்திரம்
வைதேகி சௌபாக்யமே….
பெண் : ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்
பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்
மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்
கோதண்டபாணி கையோடு தஞ்சம்
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே….
ஆண் : சௌந்தர்ய நாரி ஜனகன் குமாரி
திருமேனி தேவாலயம்
ஸ்ரீராமன் கொஞ்சும் அங்கங்கள் எங்கும்
சந்தோஷ ரோமாஞ்சனம்
ஆண் : வில்லாலன் மார்பில் விளையாடும் மானே
பல்லாண்டு பாடும் பாமாலை நானே
வில்லாலன் மார்பில் விளையாடும் மானே
பல்லாண்டு பாடும் பாமாலை நானே
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே….
பெண் : ராஜாதிராஜன் தேவாதி தேவன்
ரகுவம்ச சுகுமாரனே
ஆதாரம் நீயே அவதாரம் நீயே
சாஷ்டாங்க நமஸ்காரமே
பெண் : கவியாளும் யாரும் கொண்டாடும் நாதன்
புவியாள வந்தான் பூமாலை தந்தான்
ஆண் : சீதாவின் தேகம் மிளிர்கின்ற வண்ணம்
அருள்மாரி பெய்தான் அபிஷேகம் செய்தான்
ஆண் : ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்
பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்
பெண் : மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்
கோதண்டபாணி கையோடு தஞ்சம்
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே..