Singers : S. P. Balasubrahmanyam and B. Sasirekha

Music by : Shankar Ganesh

Female : Pengalukkendru oru perumai undu
Theriyaadhoo kanna
Iru kangalil ondru pen kulam endru
Puriyaadhoo kanna
Kangalil ondru penn kulam endru
Puriyaadhoo kanna…puriyaadhoo kanna

Male : Engalukkendru oru kaaviyam undu
Theriyaadhoo kannae
Naangal maalaiyittaal thaan madhippu undu
Puriyaadhoo kannae

Female : Engal menagai pinnaal
Vishwamithrar ponadhu
Ethanai kevalamoo

Male : Ungal samyukthai mattum
Kudhirai yeri parandhu
Ponadhu naanayamoo

Female : Unga kovalan engal maadhavi
Kaalil vizhundhadhu enna nadagamoo

Male : Oru pavalan pinnae amaravathi
Paadi thirinthathu kaaviyamoo..hoi
Paadi thirinthathu kaaviyamoo…ahei

Female : Enga mangamma
Annaalil madhurai nagaril
Singam pol aandathai ketkalaiyoo

Male : Andha madhuraiyai aanda alliyai
Adakka arjunan vandhadhai paarkalaiyoo
Aaa…aa

Female : Harichandran enbavan sondha manaiviyai
Sandhaiyil vilai pesalaiyoo

Male : Unga nallathangaalum
Pettra kuzhandhaiyai
Kinattril thooki veesalaiyoo
Kinattril thooki veesalaiyoo

Male : Haei haei
Engalukkendru oru kaaviyam undu
Theriyaadhoo kannae

Female : Aan kuzhandhai endru
Pirandha podhum
Amma enbadhu engalai thaan

Male : Andha kuzhandhai kooda
Initial poda
Nambhi iruppadhu engalai thaan

Female : Indru indhiya naattai
Aala piranthathu
Valaiyal potta kaigal aiyaa

Male : Andha mangaiyin kaigalil valaiyal
Maatti vittadhum aadavan kaigal amma
Haan aadavan kaigal amma

Male : Bruhh bruhh

Female : Pengalukkendru oru perumai undu
Theriyaadhoo kanna

Male : Naangal maalaiyittaal thaan madhippu undu
Puriyaadhoo kannae…puriyaadhoo kannae…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு
தெரியாதோ கண்ணா
இரு கண்களில் ஒன்று பெண் குலம் என்று
புரியாதோ கண்ணா
கண்களில் ஒன்று பெண் குலம் என்று
புரியாதோ கண்ணா

ஆண் : எங்களுக்கென்றொரு காவியம் உண்டு
தெரியாதோ கண்ணே
நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு
புரியாதோ கண்ணே
புரியாதோ கண்ணே…………

பெண் : எங்கள் மேனகை பின்னால்
விசுவாமித்திரர் போனது எத்தனை கேவலமோ

ஆண் : உங்கள் சம்யுக்தை மட்டும்
குதிரை ஏறி பறந்து போனது நாணயமோ

பெண் : உங்க கோவலன் எங்கள் மாதவி
காலில் விழுந்தது என்ன நாடகமோ

ஆண் : ஒரு பாவலன் பின்னே அமராவதி
பாடி திரிந்தது காவியமோ …ஹோய்
பாடி திரிந்தது காவியமோ…ஹேய்

பெண் : எங்க மங்கம்மா அந்நாளில் மதுரை நகரில்
சிங்கம்போல் ஆண்டதை கேட்கலையோ

ஆண் : அந்த மதுரையை ஆண்ட அல்லியை
அடக்க அர்ஜுனன் வந்ததை பார்க்கலையோ ஆ …

பெண் : ஹரிச்சந்திரன் என்பவன் சொந்த மனைவியை
சந்தையில் விலை பேசல்லையோ

ஆண் : உங்க நல்லதங்காளும் பெற்ற குழந்தையை
கிணற்றில் தூக்கி வீசல்லையோ
கிணற்றில் தூக்கி வீசல்லையோ

ஆண் : ஹேய் ஹேய்
எங்களுக்கென்றொரு காவியம் உண்டு
தெரியாதோ கண்ணே

பெண் : ஆண் குழந்தை என்று பிறந்தபோதும்
அம்மா என்பது எங்களைத்தான்

ஆண் : அந்த குழந்தைக்கூட இனிஷியல் போட
நம்பி இருப்பது எங்களைத்தான்

பெண் : இன்று இந்திய நாட்டை ஆளப்பிறந்தது
வளையல் போட்ட கைகளைய்யா

ஆண் : அந்த மங்கையின் கைகளில் வளையல்
மாட்டி விட்டதும் ஆடவன் கைகளம்மா
ஆடவன் கைகளம்மா………….

பெண் : பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு
தெரியாதோ கண்ணா

ஆண் : நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு
புரியாதோ கண்ணே
புரியாதோ கண்ணே…………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here