Singer : P. Leela
Music by : N. S. Balakrishnan and T. R. Pappa
Female : Kannum karutha kudumbam nadatha theriyanum
Kannum karutha kudumbam nadatha theriyanum
Pengal kadamaiyai perusa ninaikanum
Pengal kadamaiyai perusa ninaikanum
Kannum karutha kudumbam nadatha theriyanum
Female : Kaala nilamaiyae therinju vazhanum aa aa aa
Indha kaala nilamaiyae
Therinju vaazhanum purinji vaazhanum
Kaasu panam vandhaalum veenae
Kandapadi thullaamalthaanae
Kachidamaai kudumbam nadatha theriyanum
Female : Pengal kadamaiyai perusa ninaikanum
Kannum karutha kudumbam nadatha theriyanum
Female : Thottu thaali kattiyavan muttaala irundhaalum
Kattupattu aaganumae kanniyamaai vaazhanumae
Mattu mariyaadhaiyudan thondu seiya venum
Thondu seiya venum
Kastathilum kanavanodu kalandhu vaazha vendum
Manam magizhndhu vaazhanum
Female : Thottu thaali kattiyavan muttaala irundhaalum
Kattupattu aaganumae kanniyamaai vaazhanumae
Female : Aangilam kattraalum adhanaal aayiram vandhaalum
Padhavigal aayiram vandhaalum
Aadambarathaalae veen aadambarathaalae
Ezhaigalai avamadhikaadhae
Female : Ennara kattraalumpengalukku
Pin buthi endraalum
Ennara kattraalumpengalukku
Pin buthi endraalum
Aadavargal yelanam seidhaalum
Andha yettu suvadiki idam kodukkamalae
Naatukku nanmaiyai seidhidavenum
Female : Aangilam kattraalum adhanaal aayiram vandhaalum
Padhavigal aayiram vandhaalum
Aadambarathaalae veen aadambarathaalae
Ezhaigalai avamadhikaadhae
Female : Bhakthiyaalae dheiva sakthiyaalae
Seidha paabam ellaam pogumae
Padhi bhakthiyaalae deiva sakthiyaalae
Seidha paabam ellaam pogumae
Padhi thirupadha malaradi anudhinam vanangida
Padhi bhakthiyaalae deiva sakthiyaalae
Seidha paabam ellaam pogumae
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா
பெண் : கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும்
பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும்
கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
பெண் : கால நிலைமையே தெரிஞ்சு வாழணும்..ஆஆஆ..
இந்த கால நிலைமையே
தெரிஞ்சு வாழணும் புரிஞ்சு வாழணும்
காசு பணம் வந்தாலும் வீணே
கண்டபடி துள்ளாமல் தானே
கச்சிதமாய் குடும்பம் நடத்த தெரியணும்
பெண் : பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும்
கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
பெண் : தொட்டுத் தாலிக் கட்டியவன் முட்டாளாயிருந்தாலும்
கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமாய் வாழணுமே
மட்டு மரியாதையுடன் தொண்டு செய்ய வேணும்
கஷ்டத்திலும் கணவனோடு கலந்து வாழ வேணும்
மனம் மகிழ்ந்து வாழணும்
பெண் : தொட்டுத் தாலிக் கட்டியவன் முட்டாளாயிருந்தாலும்
கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமாய் வாழணுமே
பெண் : ஆங்கிலம் கற்றாலும் அதனால் ஆயிரம் வந்தாலும்
பதவிகள் ஆயிரம் வந்தாலும்
வீண் ஆடம்பரத்தாலே ஏழைகளை அவமதிக்காதே
பெண் : எண்ணறக் கற்றாலும் பெண்களுக்குப்
பின் புத்தி என்றாலும்
எண்ணறக் கற்றாலும் பெண்களுக்குப்
பின் புத்தி என்றாலும்
ஆடவர்கள் ஏளனம் செய்தாலும்
அந்த ஏட்டுச் சுவடிக்கிடம் கொடுக்காமலே
நாட்டுக்கு நன்மையை செய்திட வேணும்
பெண் : ஆங்கிலம் கற்றாலும் அதனால் ஆயிரம் வந்தாலும்
பதவிகள் ஆயிரம் வந்தாலும்
வீண் ஆடம்பரத்தாலே ஏழைகளை அவமதிக்காதே
பெண் : பக்தியாலே தெய்வ சக்தியாலே
செய்த பாபமெல்லாம் போகுமே
பதி பக்தியாலே தெய்வ சக்தியாலே
செய்த பாபமெல்லாம் போகுமே
பதி திருபத மலரடி அனுதினம் வணங்கிட
பதி பக்தியாலே தெய்வ சக்தியாலே
செய்த பாபமெல்லாம் போகுமே…..