Singer : Anthony Daasan
Music by : Anthony Daasan
Male : {Merku thodarchi malai
Ilaichu pogum
Andha megaathu melmoochu
Vaangi pogum …} (2)
Male : {Maasam oruvaatti
Naan vadugapatti pogaatti
Valadhu kai neetti
Naan malaiyoda pesaatti …} (2)
Male : Merku thodarchi malai
Ilaichu pogum
Andha megaathu melmoochu
Vaangi pogum …
Male : Vaigai nadhimela en
Valadhu kai nanaikkaama
Vaigaiyila velayaadum
Vaalameenu thoongaadhu
Male : Poomarathu keezhae naan
Pudhuppaattu ezhuthaama
Poomarathil koodukattum
Puraa irai kollaadhu
Male : Kathaalangaadu
Engaalsoodu kaangaama
Kathaalam pudharoda
Kaadai muttai podaadhu
Male : Manjalaaru anaiyil naan
Malaikaathu vaangaama
Manjalaathu moolaiyilae
Manikurivi meyaadhu
Male : {Malaiyai konjam kadichukittae
Koozh kudicha boomiyadaa
Mannum malaiyum enga
Paramabaraikkae saamiyadaa} (2)
Male : Merku thodarchi malai
Ilaichu pogum
Andha megaathu melmoochu
Vaangi pogum …
Male : Kumabakarai saalaiyilae
Komiya vaasam pudikkama
Mandaikkulla mallukatti
Malliapoo pookkaadhu
Male : Kedaiyaattu mandhaiyila
Kedaa koothu kaangaama
Kaanjupona pozhappukulla
Karpanaiyae kelambaadhu
Male : Saathisanam pesum
Mozhi sangeetham kelaama
Idhigaasa ezhuthukku
Sagavaasam irukkaadhu
Male : Suttameen kavuchi
Vandhu surrunnu yeraama
Enseer viruthathil
Ezhaancheeru vaaraadhu
Male : {Malaiyai konjam kadichukittae
Koozh kudicha boomiyadaa
Mannum malaiyum enga
Paramabaraikkae saamiyadaa} (2)
Male : Merku thodarchi malai
Ilaichu pogum
Andha megaathu melmoochu
Vaangi pogum …
Male : Maasam oruvaatti
Naan vadugapatti pogaatti
Valadhu kai neetti
Naan malaiyoda pesaatti …
Male : Merku thodarchi malai
Ilaichu pogum
Andha megaathu melmoochu
Vaangi pogum …
பாடகர் : அந்தோணி தாசன்
இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன்
ஆண் : {மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும் ..} (2)
ஆண் : {மாசம் ஒருவாட்டி
நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி
நான் மலையோட பேசாட்டி…} (2)
ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்
ஆண் : வைகை நதிமேல என்
வலதுகை நனைக்காம
வைகையில வெளையாடும்
வாளமீனு தூங்காது
ஆண் : பூமரத்துக் கீழே நான்
புதுப்பாட்டு எழுதாம
பூமரத்தில் கூடுகட்டும்
புறா இரை கொள்ளாது
ஆண் : கத்தாழங் காடு
எங்கால்சூடு காங்காமக்
கத்தாழம் புதரோட
காடைமுட்டை போடாது
ஆண் : மஞ்சளாறு அணையில் நான்
மலைக்காத்து வாங்காம
மஞ்சளாத்து மூலையில
மணிக்குருவி மேயாது
ஆண் : {மலையைக் கொஞ்சம்
கடிச்சுக் கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும் எங்க
பரம்பரைக்கே சாமியடா} (2)
ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்
ஆண் : கும்பக்கரைச் சாலையில
கோமிய வாசம் புடிக்காம
மண்டக்குள்ள மல்லுக்கட்டி
மல்லியப்பூ பூக்காது
ஆண் : கெடையாட்டு மந்தையில
கெடாக் கூத்துக் காங்காம
காஞ்சுபோன பொழப்புக்குள்ள
கற்பனையே கெளம்பாது
ஆண் : சாதிசனம் பேசும்
மொழி சங்கீதம் கேளாம
இதிகாச எழுத்துக்கு
சகவாசம் இருக்காது
ஆண் : சுட்ட மீன் கவுச்சி
வந்து சுர்ருன்னு ஏறாம
எண்சீர் விருத்தத்தில்
ஏழாஞ்சீரு வாராது
ஆண் : {மலையைக் கொஞ்சம்
கடிச்சுக்கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும்
எங்க பரம்பரைக்கே சாமியடா} (2)
ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்
ஆண் : மாசம் ஒருவாட்டி
நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி
நான் மலையோட பேசாட்டி
ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்