Singer : Seerkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Thillai vaazh andhanartham adiyaarkum adiyaen
Thillai vaazh andhanartham adiyaarkum adiyaen
Thiruneela kandathu kuyavanaar kadiyaen
Illaiyae ennadha iyarppagaikkum adiyaen
Illaiyae ennadha iyarppagaikkum adiyaen
Ilaiyaandren kudimaaran adiyaarkkum adiyaen
Ilaiyaandren kudimaaran adiyaarkkum adiyaen

Male : Vellumaa migavalla meiporulkkadiyaen
Viripozhilsoozh kundraiyaar viranmindarkkadiyaen
Allimenn mullaiyandhaar amarneedhikkadiyaen
Aaruran aaruril ammaanukkaalae

Male : Bhaktharaai panivargal ellarkkum adiyaen
Bhaktharaai panivargal ellarkkum adiyaen
Paramanaiyae paaduvaar adiyaarkkum adiyaen
Sithathai sivan paalae vaithaarkkum adiyaen
Thiruvaaroor pirandhaargal ellarkkum adiyaen

Male : Muppothum thirumaeni theenduvaarkkadiyaen
Muzhuneeru poosiya munivarkkum adiyaen
Appaalum adisaarndhaar adiyaarkkum adiyaen
Appaalum adisaarndhaar adiyaarkkum adiyaen
Aaruran aaruril ammaanukkaalae

Male : Manniyaseer marainaavan nindravoor poosal
Varivazhaiyaal maanikkum nesanukkum adiyaen
Thennavanaai ulagaanda senganaarkadiyaen
Thennavanaai ulagaanda senganaarkadiyaen
Thiruneela kandaththu paananaarkkadiyaen

Male : Ennavanaam aranadiyae adaindhitta sadaiyan
Isai gnyaani kaadhalan thirunaavaloorkoon
Annavanaam aaruran adimaikettuveppaar
Aaruril ammaanukku anbaraavaarae
Aaruril ammaanukku anbaraavaarae

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா

ஆண் : தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

ஆண் : வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே…

ஆண் : பக்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பக்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

ஆண் : முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே…

ஆண் : மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

ஆண் : என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பராவாரே…….
ஆரூரில் அம்மானுக்கு அன்பராவாரே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here