Singers : P. Susheela, L. R. Eswari and Chorus

Music by : T. G. Lingappa

Female : Kann kavarum bommaiyadi
Kanniyarin thiramaiyadi
Kalai ezhilum kai thozhilum
Kalandhaadum pudhumaiyadi

Chorus : Kann kavarum bommaiyadi
Kanniyarin thiramaiyadi
Kalai ezhilum kai thozhilum
Kalandhaadum pudhumaiyadi
Kann kavarum bommaiyadi

Female : Ahimsaiyaalae vidudhalai kanda
Annal gandhiyai paaradi
Chorus : Namm annal gandhiyai paaradi
Female : Arasai veruthu anbai valartha
Amarar buththar thaanadi
Azhivu seiyum paaviyarkkum
Arul kaattum yesuvadi

Chorus : Kann kavarum bommaiyadi
Kanniyarin thiramaiyadi
Kalai ezhilum kai thozhilum
Kalandhaadum pudhumaiyadi
Kann kavarum bommaiyadi

Female : Palarum pugalum abhinayam kattum
Bharathanattiyam paaradi
Chorus : …………………….

Female : Palarum pugalum abhinayam kattum
Bharathanattiyam paaradi
Malar kodi polae nelindhu aadum
Manipuri nadanam thaanadi

Female : Malar kodi polae nelindhu aadum
Manipuri nadanam thaanadi
Kalai mozhiyaal kadhakaliyaal
Kadhai sollum kaatchiyadi

Chorus : Kann kavarum bommaiyadi

Female : Than nizhal saayadha thanjai gopuram
Tajmahal idhu thaanadi
Mannum kallum manidhargalaalae
Magimai adainthathai paaradi
Magimai adainthathai paaradi

Female : Manidhargal mattum maaradha
Varumaiyil vaaduvadhenadi

Female : Thannalamum pottigalum
Sitharaadum vindhaiyadi

Chorus : Kann kavarum bommaiyadi
Kanniyarin thiramaiyadi
Kalai ezhilum kai thozhilum
Kalandhaadum pudhumaiyadi
Kann kavarum bommaiyadi

பாடகிகள் : பி. சுஷீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா

பெண் : கண் கவரும் பொம்மையடி
கன்னியரின் திறமையடி
கலை எழிலும் கைத்தொழிலும்
கலந்தாடும் புதுமையடி..

குழு : கண் கவரும் பொம்மையடி
கன்னியரின் திறமையடி
கலை எழிலும் கைத்தொழிலும்
கலந்தாடும் புதுமையடி..
கண் கவரும் பொம்மையடி

பெண் : அஹிம்சையாலே விடுதலை கண்ட
அண்ணல் காந்தியை பாரடி
குழு : நம் அண்ணல் காந்தியை பாரடி
பெண் : அரசை வெறுத்து அன்பை வளர்த்த
அமரர் புத்தர் தானடி
அழிவு செய்யும் பாவியர்க்கும்
அருள் காட்டும் யேசுவடி…..

குழு : கண் கவரும் பொம்மையடி
கன்னியரின் திறமையடி
கலை எழிலும் கைத்தொழிலும்
கலந்தாடும் புதுமையடி..
கண் கவரும் பொம்மையடி

பெண் : பலரும் புகழும் அபிநயம் காட்டும்
பரதநாட்டியம் பாரடி
குழு : ……………

பெண் : பலரும் புகழும் அபிநயம் காட்டும்
பரதநாட்டியம் பாரடி
மலர்க்கொடி போலே நெளிந்து ஆடும்
மணிப்புரி நடனம் தானடி
கலை மொழியால் கதக்களியால்
கதை சொல்லும் காட்சியடி..

பெண் : மலர்க்கொடி போலே நெளிந்து ஆடும்
மணிப்புரி நடனம் தானடி
கலை மொழியால் கதக்களியால்
கதை சொல்லும் காட்சியடி…

குழு : கண் கவரும் பொம்மையடி

பெண் : தன் நிழல் சாயாத தஞ்சை கோபுரம்
தாஜ்மகால் இது தானடி
மண்ணும் கல்லும் மனிதர்களாலே
மகிமை அடைந்ததை பாரடி
மகிமை அடைந்ததை பாரடி

பெண் : மனிதர்கள் மட்டும் மாறாத
வறுமையில் வாடுவதேனடி

பெண் : தன்னலமும் போட்டிகளும்
சதிராடும் விந்தையடி

குழு : கண் கவரும் பொம்மையடி
கன்னியரின் திறமையடி
கலை எழிலும் கைத்தொழிலும்
கலந்தாடும் புதுமையடி..
கண் கவரும் பொம்மையடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here