Singer : T. Gajalakshmi
Music by : G. Ramanathan
Female : Avasiyam avasiyam avasiyam
Idhu avasiyam idhu avasiyam
Kannillamal padikka mudiyumaa
Kaatchigalai kaana mudiyuma
Kaadhillamal ketka mudiyuma
Kaliyugathai rasikka mudiyumaa
Female : Kannum pennum onnnaagum
Ena kavigal sonnadhu ennaagum
Kaathu thaan thiravukolaagaum
Kalai karpanai yendhidum noolaagum
Female : Appadi paarthaalum ippadi paarhalum
Avasiyam avasiyam avasiyam
Idhu avasiyam idhu avasiyam
Female : Kannum kannumae kalandhu vittaal
Kaariyam sithiyaagatha kaariyam sithiyaagathaa
Kaadhal ragasiyam pesidavae kaadhugal udhavi seiyaadha
Kaadhugal udhavi seiyaadha
Female : Ooo munnae pogum aatkalai kavanikka
Kannuthanadi avasiyam kannuthandi avasiyam
Pinnae pesum pechukalai kavanikka kaadhuthaanadi
Avasiyam kaadhuthaanadi avasiyam appadiyaa
Female : Kannudaiyavar enbavar kattrror mugathirandu
Punnudaiyoor kallaadhaar endrae
Valluvan sonnadhu poiaagumaa
Thiruvalluvan sonnadhu poi aagumaa poi aagumaa
Female : Selvathutselvam sevi selvam
Achchelvam selvathul ellaam thalai
Adhae valluvan sonnadhu poi aagumaa
Thiruvalluvan sonnadhu poi aagumaa poi aagumaa
Female : Mugathilae ulla thirandum avasiyam
Aana moonaavadhum kooda avasiyam
Mugathilae ulla thirandum avasiyam
Moonaavadha pinnae adhu veenaavadha puriyavillaiyae
Female : Kaalam ellam nee arivudan vaazhndhida
Moolai thaanadi avasiyam
Moolao irundhum kozhaigal aanaal
Aalirunthu enna avasiyam …appadiyaa…
பாடகி : டி. கஜலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : அவசியம் அவசியம் அவசியம்
இது அவசியம் இது அவசியம்
கண்ணில்லாமல் படிக்க முடியுமா
காட்சிகளை என்றும் காண முடியுமா
காதில்லாமல் கேட்க முடியுமா
கலையுலகத்தை ரசிக்க முடியுமா
பெண் : கண்ணும் பெண்ணும் ஒண்ணாகும்
என கவிகள் சொன்னது என்னாகும்
காத்துதான் திறவுக்கோலாகும்
கலை கற்பனை ஏந்திடும் நூலாகும்
பெண் : அப்படி பார்த்தாலும் இப்படி பார்த்தாலும்
அவசியம் அவசியம் அவசியம்
இது அவசியம் இது அவசியம்
பெண் : கண்ணும் கண்ணுமே கலந்துவிட்டால்
காரியம் சித்தியாகாதா காரியம் சித்தியாகாதா
காதல் ரகசியம் பேசிடவே காதுகள் உதவி செய்யாதா
காதுகள் உதவி செய்யாதா
பெண் : ஓஓஓ முன்னே போகும் ஆட்களை கவனிக்க
கண்ணுதானடி அவசியம் கண்ணுதானடி அவசியம்
பின்னே பேசும் பேச்சுகளை கவனிக்க காதுதானடி
அவசியம் காதுதானடி அவசியம்…அப்படியா….
பெண் : கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதார் என்றே
வள்ளுவன் சொன்னது பொய்யாகுமா
திருவள்ளுவன் சொன்னது பொய்யாகுமா பொய்யாகுமா
பெண் : செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை
அதே வள்ளுவன் சொன்னது பொய்யாகுமா
திருவள்ளுவன் சொன்னது பொய்யாகுமா பொய்யாகுமா
பெண் : முகத்திலேயுள்ள திரண்டும் அவசியம்
ஆனா மூணாவதும் கூட அவசியம்
முகத்திலேயுள்ள திரண்டும் அவசியம்
மூனாவதா பின்னே அது வீணாவதா புரியல்லையே
பெண் : காலமெல்லாம் நீ அறிவுடன் வாழ்ந்திட
மூளை தானடி அவசியம்
மூளையிருந்தும் மோழைகளானால்
ஆளிருந்து என்ன அவசியம்..அப்படியா…..