Singer : Reema

Music by : C. Sathya

Female : Sengaandhalae unai allava
Chella thendralae unai yendhava
Alaithen unnai ennodu
Iruppen endrum unnodu
Anbae un kaigal ennai theenduma

Female : Midhandhen kaatril kaatraaga
Nadandhen iravil nizhalaaga
Kannae un kangal ennai kaanuma

Female : Aaararo aarariro…
Aaararo aarariro…

Female : Chinna chinna malar kuviyalai pol
Enakkul malarndhai
Ennai enna uyir silirkka vaithu
Karuvil asaindhai
Unnai perum annai vali
Vali alla oor varamae
En marbilae koodu katti
Nee urangidum naal varumae

Female : Paal kasiyum idhazhodu
Unnai kaanavae
Deivam kooda osai indri
Vandhu pogumae

Female : Sengaandhalae unai allava
Chella thendralae unai yendhava

Female : Annai nenjil anal erigaiyilae
Mazhai pol vandhaai
Endha dhisaiyilum iruttukul naan
Velicham thandhaai

Female : Jenmam ondru podhathendru
Ezhu jenmam naan sumappen
En vazhvilae orae inbam
Kannil vaithu paarthu kolven

Female : Unmel dhoosum theendaamal
Kaapen anbae
Kaalam muzhudhum unakkaaga
Vazhven anbae

Female : Sengaandhalae …aarariro…
Chinna thendralae… aarariro…

பாடகி : ரீனா

இசை அமைப்பாளர் : சி. சத்யா

பெண் : செங்காந்தலே உனை அள்ளவா
செல்ல தென்றலே உனை ஏந்தவா
அழைத்தேன் உன்னை என்னோடு
இருப்பேன் என்றும் உன்னோடு
அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா

பெண் : மிதந்தேன் காற்றில் காற்றாக
நடந்தேன் இரவில் நிழலாக
கண்ணே உன் கண்கள் என்னை காணுமா

பெண் : ஆராரோ … ஆராரிரோ …
ஆராரோ … ஆராரிரோ …

பெண் : சின்ன சின்ன மலர் குவியலை போல்
எனக்குள் மலர்ந்தாய்
என்ன என்ன உயிர் சிலிர்க்க வைத்து
கருவில் அசைந்தாய்
உன்னைப் பெறும் அன்னை வலி
வலியல்ல ஓர் வரமே
என் மார்பிலே கூடு கட்டி
நீ உறங்கிடும் நாள் வருமே

பெண் : பால் கசியும் இதழோடு
உன்னைக் காணவே
தெய்வம் கூட ஓசை இன்றி
வந்து போகுமே

பெண் : செங்காந்தலே உனை அள்ளவா
செல்ல தென்றலே உனை ஏந்தவா

பெண் : அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே
மழை போல் வந்தாய்
எந்த திசையிலும் இருட்டுக்குள் தான்
வெளிச்சம் தந்தாய்

பெண் : ஜென்மம் ஒன்று போதாதென்று
ஏழு ஜென்மம் நான் சுமப்பேன்
என் வாழ்விலே ஒரே இன்பம்
கண்ணில் வைத்து போர்த்து கொள்வேன்

பெண் : உன் மேல் தூசும் தீண்டாமல்
காப்பேன் அன்பே
காலம் முழுதும் உனக்காக
வாழ்வேன் அன்பே

பெண் : செங்காந்தலே… ஆராரிரோ
சின்ன தென்றலே…. ஆராரிரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here