Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Male : Mellapo mellapo
Melidaiyaalae mellapo
Sollipo sollipo solvadhai
Kannaal sollipo malligaiyae
Male : Mellapo mellapo
Melidaiyaalae mellapo
Female : { Odaiyil neeralai
Medaiyil thendralin naadagam
Ethanai aayiram } (2)
Female : Thottil katti
Podum poonkodi
Palli kolla paarkum painkili
Female : Andhi maalaiyil
Indha solaiyae sorkamaagumo
Female : Mella thaan
Mella thaan mayangi
Nadanthaal maadhu
Female : Sollathaan sollathaan
Thayangi varainthaal
Thoodhu ippozhudhae
Male : Mellapo Female : Mella thaan
Male : Hmm sollipo
Female : Aahaan sollithaan
Female : ……………………..
Male : { Semmaankani
Punnagai naloviyam
Sevvidhazh thenmaadhulai
Ponmozhi soloviyam } (2)
Male : Sinthu nadai
Podum paarkudam
Chinna vizhi paarvai poocharam
Male : Enna meniyo
Innum paadavo
Thamizh thedavo
Male : Mellapo Female : Mella thaan
Male : Ponezhil
Thamarai poovinaal
Female : Mannavan kanvizhi
Poigaiyil mevinaal muthu
Thamizh paadum poonkuyil
Male : Mutham ondru
Vendum aan kuyil
Female : Andha paadalil
Anbu oodalil mangai naaninaal
Male : Mellapo mellapo
Melidaiyaalae mellapo
Sollipo sollipo solvadhai
Kannaal sollipo malligaiyae
Male : Mellapo Female : Mella thaan
Male : Hmm sollipo
Female : Aahaan sollithaan
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
ஆண் : மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ
பெண் : { ஓடையில் நீரலை
மேடையில் தென்றலின்
நாடகம் எத்தனை ஆயிரம் } (2)
பெண் : தொட்டில் கட்டிப்
போடும் பூங்கொடி பள்ளி
கொள்ள பார்க்கும் பைங்கிளி
பெண் : அந்தி மாலையில்
இந்த சோலையே
சொர்க்கமாகுமோ
பெண் : மெல்லத் தான்
மெல்லத் தான் மயங்கி
நடந்தாள் மாது
பெண் : சொல்லத்தான்
சொல்லத்தான் தயங்கி
வரைந்தாள் தூது
இப்பொழுதே
ஆண் : மெல்லப் போ
பெண் : மெல்ல தான்
ஆண் : ஹம்ம்
சொல்லிப் போ
பெண் : ஆஹான்
சொல்லி தான்
பெண் : ………………….
ஆண் : { செம்மாங்கனி
புன்னகை நல்லோவியம்
செவ்விதழ்தேன்மாதுளை
பொன்மொழி சொல்லோவியம் } (2)
ஆண் : சிந்து நடை
போடும் பாற்குடம்
சின்ன விழிப் பார்வை
பூச்சரம்
ஆண் : என்ன மேனியோ
இன்னும் பாடவோ
தமிழ் தேடவோ
ஆண் : மெல்லப் போ
பெண் : மெல்ல தான்
ஆண் : பொன் எழில்
தாமரைப் பூவினாள்
பெண் : மன்னவன்
கண்விழி பொய்கையில்
மேவினாள் முத்து தமிழ்
பாடும் பூங்குயில்
ஆண் : முத்தம் ஒன்று
வேண்டும் ஆண் குயில்
பெண் : அந்தப் பாடலில்
அன்பு ஊடலில் மங்கை
நாணினாள்
ஆண் : மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
ஆண் : மெல்லப் போ
பெண் : மெல்ல தான்
ஆண் : ஹம்ம்
சொல்லிப் போ
பெண் : ஆஹான்
சொல்லி தான்