Singers : K. J. Yesudas and Saibaba

Music by : L. Vaidyanathan

Male : Odi vilaiyaadu pappaa
Nee ointhirukka laaaathu pappaa
Koodi vilaiyaadu pappaa
Oru kuzhanthaiyai vaiyaathae pappaa

Male : Odi vilaiyaadu pappaa
Nee ointhirukka laaaathu pappaa
Koodi vilaiyaadu pappaa
Oru kuzhanthaiyai vaiyaathae pappaa

Male : Kaalai ezhunthavudan padippu
Pinbu kanivu kodukkum nalla paattu
Maalai muzhuthum vilaiyaattu
Endru vazhkka paduththi kollu pappaa

Male : …………

Male : Chinnajiru kuruvi polae
Nee thirinthu paranthuvaa pappaa
Vanna paravaigalai kandu
Nee manathil magizhchi kollu pappaa

Male : Odi vilaiyaadu pappaa
Nee ointhirukka laaaathu pappaa
Koodi vilaiyaadu pappaa
Oru kuzhanthaiyai vaiyaathae pappaa

Male : …………

Male : Saadhigal illaiyadi pappaa
Kula thaazhchchi uyarchi sollal paavam
Needhi uyarnthamadhi kalvi
Anbu niraiya udaiyavarkal melor

Male : Ellaarum orr kulam
Ellaarum orr inam
Ellaarum india makkal

Male : Ellaarum orr nirai
Ellaarum orr vilai
Ellaarum innaattu mannar

Male : Odi vilaiyaadu pappaa
Nee ointhirukka laaaathu pappaa
Koodi vilaiyaadu pappaa
Oru kuzhanthaiyai vaiyaathae pappaa

Male : Paadhaganj seipavarai kandaal
Naam payangkolla laagaathu pappaa
Modhi midhiththuvidu pappaa
Avar mugaththil umizhnthuvidu pappaa

Male : Ini oru vidhi seivom
Adhai entha naalum kaappom
Thani oruvanukku unavillaiyenil
Jegaththinai azhiththiduvom

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா

ஆண் : ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா

ஆண் : காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

ஆண் : …………………..

ஆண் : சின்னஞ் சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு
நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

ஆண் : ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா

ஆண் : …………………..

ஆண் : சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்

ஆண் : எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்தியா மக்கள்

ஆண் : எல்லாரும் ஓர் நிறை
எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்

ஆண் : ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா

ஆண் : பாதகஞ் செய்பவரைக் கண்டால்
நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

ஆண் : இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here