Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : Kaaviri meen vizhi devathai pogiraal
Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano

Female : Kaaviri meen vizhi devathai pogiraal
Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano

Male : Pattu poovaadai ennai thedaatho
Paarvaigal poraadum neram
Female : Muththu thae vanthu nejil modhaatho
Kaayangal thaen sinthum kaalam

Male : Pennukkula aagaaya gangai kandaen
Pon vanna odaththai angae kandaen
Female : Pakkaththil nillungal
Paarvaiyenna sollungal

Male : Kaaviri meen vizhi devathai pogiraal
Female : Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano

Female : Mannan nee konjjum mangai naanendru
Megangal raagangal paadum
Male : Kannam thaen kinnam unnai naanalla
Kalangal nerangal yaedhu

Female : Enenna aanantham aasai nenjae
Nenukkul kadhal thaer odum anbae
Male : Muththangal sinthavaa kayil alli kollavaa

Female : Kaaviri meen vizhi devathai pogiraal
Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano

Male : Kaaviri meen vizhi devathai pogiraal
Paarvaiyo velli nilaa
Kanniyor kaaman kovilthaano

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ

பெண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்….
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ

ஆண் : பட்டு பூவாடை என்னைத் தேடாதோ
பார்வைகள் போராடும் நேரம்
பெண் : முத்து தேர் வந்து நெஞ்சில் மோதாதோ
காயங்கள் தேன் சிந்தும் காலம்

ஆண் : பெண்ணுக்குள் ஆகாய கங்கை கண்டேன்
பொன் வண்ண ஓடத்தை அங்கே கண்டேன்
பெண் : பக்கத்தில் நில்லுங்கள்
பார்வையென்ன சொல்லுங்கள்

ஆண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்….
பெண் : பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ

பெண் : மன்னன் நீ கொஞ்சும் மங்கை நானென்று
மோகங்கள் ராகங்கள் பாடும்
ஆண் : கன்னம் தேன் கிண்ணம் உன்னை நானள்ள
காலங்கள் நேரங்கள் ஏது

பெண் : என்னென்ன ஆனந்தம் ஆசை நெஞ்சே
நெஞ்சுக்குள் காதல் தேர் ஓடும் அன்பே
ஆண் : முத்தங்கள் சிந்தவா கையில் அள்ளிக் கொள்ளவா

பெண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ

ஆண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here