Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Mangalyam thavazhum magarasi vathanam
Malarnthaale pothum verethu ulagam
Mangalyam thavazhum magarasi vathanam
Malarnthaale pothum verethu ulagam
Neethaane engal thirukoyil vilakku
Nee illai endraal theriyaathu kizhakku

Male : Aanandam vilaiyadum veedu
Naangu andrilgal ondraana koodu ithu
Aanandam vilaiyadum veedu

Male : Ver pola naanum neer pola neeyum
Neerodi ponaal ver vaadi pogum
Ver pola naanum neer pola neeyum
Neerodi ponaal ver vaadi pogum
Nee vendum endru dheivangal kettaal
Unai ingu niruthi naan angu selven

Male : Aanandam vilaiyadum veedu
Naangu andrilgal ondraana koodu ithu
Aanandam vilaiyadum veedu

பாடகர் :  டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர்  : வாலி

ஆண் : மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு

ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு

ஆண் : வேர் போல நானும் நீர் போல நீயும்
நீரோடி போனால் வேர் வாடி போகும்
வேர் போல நானும் நீர் போல நீயும்
நீரோடி போனால் வேர் வாடி போகும்
நீ வேண்டும் என்று தெய்வங்கள் கேட்டால்
உனை இங்கு நிறுத்தி நான் அங்கு செல்வேன்

ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு இது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here