Singer : T. M. Soundararajan
Music by : R. Govarthanam
Lyrics by : Kannadasan
Male : Irunthaal ezhunthu vaadi
Nee irunthaal ezhunthu vaadi
Adi thirisooli oongaari maakaali bhairavi
Irunthaal ezhunthu vaadi
Male : Irunthaal ezhunthu vaadi
Nee irunthaal ezhunthu vaadi
Adi thirisooli oongaari maakaali bhairavi
Irunthaal ezhunthu vaadi
Male : Varang kettkka varavillai ingae
Unnai varaverkka nirkkindraen un paarvai engae
Male : Irunthaal ezhunthu vaadi
Nee irunthaal ezhunthu vaadi
Adi thirisooli oongaari maakaali bhairavi
Irunthaal ezhunthu vaadi
Male : ……………..
Male : Anaiththukkum neeyaethaan poruppaa
Un adhikaaram sila perkku sirippaa
Inaththaalum kulaththaalum veruppaa
Adha ennaalum anaiyaatha neruppaa
Male : Irunthaal ezhunthu vaadi
Nee irunthaal ezhunthu vaadi
Adi thirisooli oongaari maakaali bhairavi
Irunthaal ezhunthu vaadi
Male : ……………..
Male : Kallaaga irukkindra thaayae
Idhai kaanamal kurudaanaai neeyae
Nallorai kaavaathu ponaal
Nee illaiyendrae naanum ninaippaen
Male : Irunthaal ezhunthu vaadi
Nee irunthaal ezhunthu vaadi
Adi thirisooli oongaari maakaali bhairavi
Irunthaal ezhunthu vaadi
Male : Sooli thirisooliyena ullavarai oru pennai
Sudugindra neruppum undo
Sudarvittu uyarvaanil ezhugindra theeyai
Nee jothiyaaga kaanpathundo
Male : Sadasadana padapapdana idamurasu pol vaanil
Sakkaram suzhandridaatho
Thagathagana thagathagana oli minnal avvaanil
Thaai vizhigal pol vaaraatho
Male : Madamadana madamadana mannilum vinnilum
Maariyae peithidaatho
Maakaali ambigaiyin sakthiyaal bhoomiyil
Maayangal thondridaatho
Male : Deviyae maakaali annaiyae
Thirisooli dharmaththin maharani
Ezhunthu vaa ezhunthu vaa ongaari….
Ezhunthu vaa ezhunthu vaa ongaari….
Ezhunthu vaa ezhunthu vaa ongaari….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : இருந்தால் எழுந்து வாடி
நீ இருந்தால் எழுந்து வாடி
அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி
இருந்தால் எழுந்து வாடி
ஆண் : இருந்தால் எழுந்து வாடி
நீ இருந்தால் எழுந்து வாடி
அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி
இருந்தால் எழுந்து வாடி
ஆண் : வரங்கேட்க வரவில்லை இங்கே
உன்னை வரவேற்க நிற்கின்றேன் உன் பார்வை எங்கே
ஆண் : இருந்தால் எழுந்து வாடி
நீ இருந்தால் எழுந்து வாடி
அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி
இருந்தால் எழுந்து வாடி
ஆண் : ………………………
ஆண் : அனைத்துக்கும் நீயேதான் பொறுப்பா
உன் அதிகாரம் சில பேர்க்குச் சிரிப்பா
இனத்தாலும் குலத்தாலும் வெறுப்பா
அது எந்நாளும் அணையாத நெருப்பா….
ஆண் : இருந்தால் எழுந்து வாடி
நீ இருந்தால் எழுந்து வாடி
அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி
இருந்தால் எழுந்து வாடி
ஆண் : …………………………
ஆண் : கல்லாக இருக்கின்ற தாயே
இதைக் காணாமல் குருடானாய் நீயே
நல்லோரைக் காவாது போனால்
நீ இல்லையென்றே நானும் நினைப்பேன்
ஆண் : இருந்தால் எழுந்து வாடி
நீ இருந்தால் எழுந்து வாடி
அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி
இருந்தால் எழுந்து வாடி
ஆண் : சூலி திரிசூலியென உள்ளவரை ஒரு பெண்ணை
சுடுகின்ற நெருப்பும் உண்டோ
சுடர் விட்டு உயர்வானில் எழுகின்ற தீயை
நீ ஜோதியாகக் காண்பதுண்டோ
ஆண் : சடசடன படபடன இடமுரசு போல் வானில்
சக்கரம் சுழன்றிடாதோ
தகதகன தகதகன ஒளி மின்னல் அவ்வானில்
தாய் விழிகள் போல் வாராதோ
ஆண் : மடமடன மடமடன மண்ணிலும் விண்ணிலும்
மாறியே பெய்திடாதோ
மாகாளி அம்பிகையின் சக்தியால் பூமியில்
மாயங்கள் தோன்றிடாதோ
ஆண் : தேவியே மாகாளி அன்னையே
திரிசூலி தர்மத்தின் மகாராணி
எழுந்து வா எழுந்து வா ஓங்காரி……
எழுந்து வா எழுந்து வா ஓங்காரி……
எழுந்து வா எழுந்து வா ஓங்காரி……