Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Naan ondru ninaiththaen
Avan ondru ninaiththaan
Naan pogum vazhiyai
Avan vanthu mariththaan…
Avan vanthu mariththaan…

Male : Naan ondru ninaiththaen
Avan ondru ninaiththaan
Naan pogum vazhiyai
Avan vanthu mariththaan…
Avan vanthu mariththaan…

Male : Kaniyondru kettaen kaayondru koduththaan
Kannondru kettaen punnaaga padaiththaan
Kaniyondru kettaen kaayondru koduththaan
Kannondru kettaen punnaaga padaiththaan

Male : Ninaivondru ketaen neruppaaga valarththaan
Ninaivondru ketaen neruppaaga valarththaan
Nilavondru kettaen irul kaana azhaiththaan

Male : Naan ondru ninaiththaen…

Male : Thunaiyondru kettaen sugam kaana koduththaan
Sugam kaanumpothae vazhi maattri piriththaan
Thunaiyondru kettaen sugam kaana koduththaan
Sugam kaanumpothae vazhi maattri piriththaan

Male : Alai modhum manathai thaniyaaga viduththaan
Alai modhum manathai thaniyaaga viduththaan
Anbaana nenjukku abaraatham vithithaan

Male : Naan ondru ninaiththaen
Avan ondru ninaiththaan
Naan pogum vazhiyai
Avan vanthu mariththaan…
Avan vanthu mariththaan…

Male : Naan ondru ninaiththaen….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்……
அவன் வந்து மறித்தான்……

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்……
அவன் வந்து மறித்தான்……

ஆண் : கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான்
கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான்
கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான்
கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான்

ஆண் : நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான்
நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான்
நிலவொன்று கேட்டேன் இருள் காண அழைத்தான்

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்….

ஆண் : துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான்
சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான்
துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான்
சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான்

ஆண் : அலை மோதும் மனதை தனியாக விடுத்தான்
அலை மோதும் மனதை தனியாக விடுத்தான்
அன்பான நெஞ்சுக்கு அபராதம் விதித்தான்

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்……
அவன் வந்து மறித்தான்……

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here