Singers : Vani Jairam, S. P. Sailaja, Uma Ramanan and B. S. Sasirekha
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Kalviyil saraswathi selvaththil laksmi
Karunaiyil paarvathy neeyammaa
Aayinum nalla naayagi
Antha nalaayini pol vaazhammaa
Female : Kalviyil saraswathi selvaththil laksmi
Female : Kallaanaalum pullaanaalum
Kanavanai kondaadu
Avan kaaladi nizhalil vaazhvathuthaanae
Kulamagal kula panpaadu
Female : Yaenendru kelvigal ketkaathae
Yaerittu mugaththai paarkkaathae
Kodu kizhiththaal thaandaathae
Kobaththai konjam thoondaathae…
Female : Kalviyil saraswathi selvaththil laksmi
Karunaiyil paarvathy neeyammaa
Aayinum nalla naayagi
Antha nalaayini pol vaazhammaa
Female : Kalviyil saraswathi selvaththil laksmi
Female : Perum pugazhu purushanai saera
Kaaranam manaviyammaa
Antha valluvan arivai vaiyagam arinthathu
Vaasuki udhaviyammaa
Female : Aanavam kondu pesaathae
Adangi povathu mariyaathai
Arivaal edhaiyum edai podu
Thavaraai nadanthaal thadai podu
Female : Kalviyil saraswathi selvaththil laksmi
Karunaiyil paarvathy neeyammaa
Aayinum veera thaayena annai
Indiragandhi pol vaazhammaa
Female : Kalviyil saraswathi selvaththil laksmi
Female : Veedaanaalum naadaanaalum
Vilanganum pennaalae
Aval thannai nabum thairiyaththodu
Vazhanum mannmelae
Female : Sodhanai vanthaal thaangividu
Saathanai seithu vendru vidu
Veeranin thaayena perai edu
Un kai uyarum kavalai vidu
Female : Vaasuki yaaru valluvan yaaru
Onnum puriyavillai
Intha paadam ellaam padikkira class-kku
Naan innum varavillai
Female : Appa solli tharavillai
Hostel pakkam varathilla
Ammavukkum pala velai
Ennai ninaikka time illai….
பாடகர்கள் : வாணி ஜெய்ராம், எஸ். பி. சைலஜா,
உமா ரமணன் மற்றும் பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கருணையில் பார்வதி நீயம்மா
ஆயினும் நல்ல நாயகி
அந்த நளாயினி போல் வாழம்மா………..
பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
பெண் : கல்லானாலும் புல்லானாலும்
கணவனை கொண்டாடு
அவன் காலடி நிழலில் வாழ்வதுதானே
குலமகள் குலப்பண்பாடு
பெண் : ஏனென்று கேள்விகள் கேட்காதே
ஏறிட்டு முகத்தைப் பார்க்காதே
கோடு கிழித்தால் தாண்டாதே
கோபத்தை கொஞ்சம் தூண்டாதே…….
பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கருணையில் பார்வதி நீயம்மா
ஆயினும் நல்ல நாயகி
அந்த வாசுகி போல் வாழம்மா…….
பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
பெண் : பேரும் புகழும் புருஷனை சேர
காரணம் மனவியம்மா
அந்த வள்ளுவன் அறிவை வையகம் அறிந்தது
வாசுகி உதவியம்மா
பெண் : ஆணவம் கொண்டு பேசாதே
அடங்கி போவது மரியாதை
அறிவால் எதையும் எடை போடு
தவறாய் நடந்தால் தடை போடு
பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கருணையில் பார்வதி நீயம்மா
ஆயினும் வீரத் தாயென அன்னை
இந்திராகாந்தி போல் வாழம்மா……….
பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
பெண் : வீடானாலும் நாடானாலும்
விளங்கணும் பெண்ணாலே –அவள்
தன்னை நம்பும் தைரியத்தோடு
வாழணும் மண்மேலே
பெண் : சோதனை வந்தால் தாங்கிவிடு
சாதனை செய்து வென்று விடு
வீரனின் தாயென பேரை எடு
உன் கை உயரும் கவலை விடு
பெண் : வாசுகி யாரு வள்ளுவன் யாரு
ஒண்ணும் புரியவில்லை
இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு
நான் இன்னும் வரவில்லை
பெண் : வாசுகி யாரு வள்ளுவன் யாரு
ஒண்ணும் புரியவில்லை
இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு
நான் இன்னும் வரவில்லை
பெண் : அப்பா சொல்லி தரவில்லை
ஹாஸ்டல் பக்கம் வரதில்ல
அம்மாவுக்கும் பல வேலை
என்னை நினைக்க டைம் இல்லை……