Singer : P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Female : Kadal vaazhum meenai kudi neeril pottaal
Kaattrillaamal maandu pogum adhuthaanae unmai
Tharam kettu vaazhvil gunam ketta pennai
Thaaramaaga kondu vanthaal adhil edhu menmai

Female : Aangara aanmai noyaaliyaanaal
Aadu kooda paayaatho adhuthaanae bhoomi
Yaar yaaro vanthaar yaar yaaro ponaar
Bedhai pola naan vaazha padaiththaanae saami

Female : Kadal vaazhum meenai kudi neeril pottaal
Kaattrillaamal maandu pogum adhuthaanae unmai

Female : Mazhaikkaalam paadhi veyil kaalam paadhi
Maanamindri ponaalo elaamae needhi
Azhaikkaamal ponaal aniyaaya dheivam
Aadugindrean naan ingu uyirthaanae meedhi

Female : Kadal vaazhum meenai kudi neeril pottaal
Kaattrillaamal maandu pogum adhuthaanae unmai
Tharam kettu vaazhvil gunam ketta pennai
Thaaramaaga kondu vanthaal adhil edhu menmai

Female : Kadal vaazhum meenai kudi neeril pottaal
Kaattrillaamal maandu pogum adhuthaanae unmai

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் கண்ணதாசன்

பெண் : கடல் வாழும் மீனை குடி நீரில் போட்டால்
காற்றில்லாமல் மாண்டு போகும் அதுதானே உண்மை
தரம் கேட்டு வாழ்வில் குணம் கெட்ட பெண்ணை
தாரமாகக் கொண்டு வந்தால் அதில் எது மேன்மை

பெண் : ஆங்கார ஆண்மை நோயாளியானால்
ஆடு கூடப் பாயாதோ அதுதானே பூமி
யார் யாரோ வந்தார் யார் யாரோ போனார்
பேதை போல நான் வாழப் படைத்தானே சாமி

பெண் : கடல் வாழும் மீனை குடி நீரில் போட்டால்
காற்றில்லாமல் மாண்டு போகும் அதுதானே உண்மை

பெண் : மழைக்காலம் பாதி வெயில் காலம் பாதி
மானமின்றி போனாலோ எல்லாமே நீதி
அழைக்காமல் போனால் அநியாய தெய்வம்
ஆடுகின்றேன் நான் இங்கு உயிர்தானே மீதி

பெண் : கடல் வாழும் மீனை குடி நீரில் போட்டால்
காற்றில்லாமல் மாண்டு போகும் அதுதானே உண்மை
தரம் கேட்டு வாழ்வில் குணம் கெட்ட பெண்ணை
தாரமாகக் கொண்டு வந்தால் அதில் எது மேன்மை

பெண் : கடல் வாழும் மீனை குடி நீரில் போட்டால்
காற்றில்லாமல் மாண்டு போகும் அதுதானே உண்மை

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here