Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Rajaththi rajaththi rojapoo rojapoo
Panneeril neeraada vanthaal
Female : Naalaaga naalaaga aalaaga aalaaga
Naanangal kondaadi nindraal

Male : Rajaththi rajaththi rojapoo rojapoo
Panneeril neeraada vanthaal
Female : Naalaaga naalaaga aalaaga aalaaga
Naanangal kondaadi nindraal

Male : Muththumozhi maanae mukkaniyin thaenae
Muththiraiyum naanae thanthaenae

Female : Kadhal kalai tharum nayam
Edhu edhu ena unai
Ketkkum paruvam kaniya
Male : Kaaman rathi perum layam
Idhu idhu ena manam
Kaalam muzhuthum payila

Female : Un poongaram konja
Male : En bodhaigal minja
Female : Un poongaram konja
Male : En bodhaigal minja

Female : Vannamalar maalai
Vanji magal tholai
Pinnugindra velai vaaraatho

Male : Rajaththi rajaththi rojapoo rojapoo
Panneeril neeraada vanthaal

Male : Vaanin mugil tharum mazhai
Vizhum nilam kulir perum
Kodai vemmai thaniya
Female : Vaazhai madal enum udal
Madhan vidum kanai suda
Aasai Nadhiyil nanaiya

Female : Kai naaduthu killa
Male : En naanangal thalla
Female : Kai naaduthu killa
Male : En naanangal thalla

Male : Thotta sugam paathi mattra sugam meedhi
Kattilidum thethi vaaraatho

Female : Rajaththi rajaththi rojapoo rojapoo
Panneeril neeraada vanthaal
Male : Naalaaga naalaaga aalaaga aalaaga
Naanangal kondaadi nindraal

Female : Rajaththi rajaththi roja poo roja poo
Panneeril neeraada vanthaal

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்
பெண் : நாளாக நாளாக ஆளாக ஆளாக
நாணங்கள் கொண்டாடி நின்றாள்

ஆண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்
பெண் : நாளாக நாளாக ஆளாக ஆளாக
நாணங்கள் கொண்டாடி நின்றாள்

ஆண் : முத்துமொழி மானே முக்கனியின் தேனே
முத்திரையும் நானே தந்தேனே…..

பெண் : காதல் கலை தரும் நயம்
எது எது என உனை
கேட்கும் பருவம் கனிய
ஆண் : காமன் ரதி பெறும் லயம்
இது இது என மனம்
காலம் முழுதும் பயில

பெண் : உன் பூங்கரம் கொஞ்ச
ஆண் : என் போதைகள் மிஞ்ச
பெண் : உன் பூங்கரம் கொஞ்ச
ஆண் : என் போதைகள் மிஞ்ச

பெண் : வண்ணமலர் மாலை
வஞ்சி மகள் தோளை
பின்னுகின்ற வேளை வாராதோ…….

ஆண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்

ஆண் : வானின் முகில் தரும் மழை
விழும் நிலம் குளிர் பெறும்
கோடை வெம்மை தணிய
பெண் : வாழை மடல் எனும் உடல்
மதன் விடும் கணை சுட
ஆசை நதியில் நனைய

பெண் : கை நாடுது கிள்ள…..
ஆண் : என் நாணங்கள் தள்ள
பெண் : கை நாடுது கிள்ள…..
ஆண் : என் நாணங்கள் தள்ள

ஆண் : தொட்ட சுகம் பாதி மற்ற சுகம் மீதி
கட்டிலிடும் தேதி வாராதோ…..

பெண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்
ஆண் : நாளாக நாளாக ஆளாக ஆளாக
நாணங்கள் கொண்டாடி நின்றாள்

பெண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here