Singers : Jayachandran and Vani Jaiyaram
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : Iravinil paniyinil
Iruvarum vizhiththiruppom
Oruvarin madiyinil
Oruvarai anaiththiruppom
Female : Namakkul ini enna ragasiyamo
Ulagil idhu enna athisayamo
Namakkul ini enna ragasiyamo
Ulagil idhu enna athisayamo
Male : Iravinil paniyinil
Iruvarum vizhiththiruppom
Oruvarin madiyinil
Oruvarai anaiththiruppom
Male : Namakkul ini enna ragasiyamo
Ulagil idhu enna athisayamo
Namakkul ini enna ragasiyamo
Ulagil idhu enna athisayamo
Female : Ilaigalin maraivinil
Kani ondru therinthaal
Kiligal viduvathillai
Male : Idhayaththin naduvinil
Oli ondru therinthaal
Ennam viduvathillai
Female : Ilaigalin maraivinil
Kani ondru therinthaal
Kiligal viduvathillai
Male : Idhayaththin naduvinil
Oli ondru therinthaal
Ennam viduvathillai
Female : Irandu pakkam minnidum kaasu
Male : Enna vetkkam pesadi pesu
Female : Mm….irandu pakkam minnidum kaasu
Male : Enna vetkkam pesadi pesu
Female : Thirandu varum kavithaiyai veesu
Uravukku velai kodu
Nal uravukku velai kodu
Female : Iravinil paniyinil
Iruvarum vizhiththiruppom
Both : Oruvarin madiyinil
Oruvarai anaiththiruppom
Female : Namakkul ini enna ragasiyamo
Male : Ulagil idhu enna athisayamo
Female : Namakkul ini enna ragasiyamo
Male : Ulagil idhu enna athisayamo
Female : Laal laala laal laala laallaa
Male : Laal laala laal laala laallaa
Male : Mudi thottu adi thottu
Perugiya koondhal mugaththai maraikkattumae
Female : Idai thottu udai thottu
Jadai thottu paarththu paadal ezhuthattumae
Male : Mudi thottu adi thottu
Perugiya koondhal mugaththai maraikkattumae
Female : Idai thottu udai thottu
Jadai thottu paarththu paadal ezhuthattumae
Male : Thaamaraiyin virunthukku azhaippu
Thaagam undu arunthida ninaippu
Thaamaraiyin virunthukku azhaippu
Thaagam undu arunthida ninaippu
Female : Pothum ingu ponguthu thudippu
Thirumanam aagattumae
Both : Namakkul thirumanam aagattumae
Both : Iravinil paniyinil
Iruvarum vizhiththiruppom
Oruvarin madiyinil
Oruvarai anaiththiruppom
Both : Namakkul ini enna ragasiyamo
Ulagil idhu enna athisayamo
Namakkul ini enna ragasiyamo
Ulagil idhu enna athisayamo
Both : ………………
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்
பெண் : நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
ஆண் : இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்
ஆண் : நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
பெண் : இலைகளின் மறைவினில்
கனி ஒன்று தெரிந்தால்
கிளிகள் விடுவதில்லை
ஆண் : இதயத்தின் நடுவினில்
ஒளி ஒன்று தெரிந்தால்
எண்ணம் விடுவதில்லை
பெண் : இலைகளின் மறைவினில்
கனி ஒன்று தெரிந்தால்
கிளிகள் விடுவதில்லை
ஆண் : இதயத்தின் நடுவினில்
ஒளி ஒன்று தெரிந்தால்
எண்ணம் விடுவதில்லை
பெண் : இரண்டு பக்கம் மின்னிடும் காசு
ஆண் : என்ன வெட்கம் பேசடி பேசு
பெண் : ம்ம்….இரண்டு பக்கம் மின்னிடும் காசு
ஆண் : என்ன வெட்கம் பேசடி பேசு
பெண் : திரண்டு வரும் கவிதையை வீசு
உறவுக்கு வேலை கொடு
நல் உறவுக்கு வேலை கொடு
பெண் : இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்
இருவர் : ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்
பெண் : நமக்குள் இனி என்ன ரகசியமோ
ஆண் : உலகில் இது என்ன அதிசயமோ
பெண் : நமக்குள் இனி என்ன ரகசியமோ
ஆண் : உலகில் இது என்ன அதிசயமோ
பெண் : லால் லால லால் லால லால்லா
ஆண் : லால் லால லால் லால லால்லா
ஆண் : முடி தொட்டு அடி தொட்டு
பெருகிய கூந்தல் முகத்தை மறைக்கட்டுமே
பெண் : இடை தொட்டு உடை தொட்டு
ஜடை தொட்டுப் பார்த்து பாடல் எழுதட்டுமே
ஆண் : முடி தொட்டு அடி தொட்டு
பெருகிய கூந்தல் முகத்தை மறைக்கட்டுமே
பெண் : இடை தொட்டு உடை தொட்டு
ஜடை தொட்டுப் பார்த்து பாடல் எழுதட்டுமே
ஆண் : தாமரையின் விருந்துக்கு அழைப்பு
தாகம் உண்டு அருந்திட நினைப்பு
தாமரையின் விருந்துக்கு அழைப்பு
தாகம் உண்டு அருந்திட நினைப்பு
பெண் : போதும் இங்கு பொங்குது துடிப்பு
திருமணம் ஆகட்டுமே
இருவர் : நமக்குள் திருமணம் ஆகட்டுமே
இருவர் : இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்
இருவர் : நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
இருவர் : ……………………..