Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Enthan poovanaththil indru vasantham
Malarae maralae thoongaathae
Enthan poovanaththil indru vasantham
Malarae maralae thoongaathae

Male : Ini en aasanam oru simmaasanam
Azhagae vaa amuthae ini kanneer illai
Dhinam panneer mazhai maganae vaa arugae

Male : Enthan poovanaththil indru vasantham
Malarae maralae thoongaathae

Male : Vaigaraai velaiyil vaasalil kolam
Vairqangalthaan adhil pulligal aagum
Vaanavil bhoomiyil vanthu irangum
Jannalin kambikku vannangal poosum

Male : Aahaa anbae nilavugal ulavidum nedunilai maadam
Kadhal theril devathai jaadhigal malaigal podum
Aasai rani ragasiya nadhigalil adhisaya odam
santhosha rajaangamae

Male : Ini en aasanam oru simmaasanam
Azhgae vaa amuthae ini kanneer illai
Dhinam panneer mazhai magane vaa arugae

Male : Enthan poovanaththil indru vasantham
Malarae malarae thoongaathae

Male : En magan kalvikku viruthugal vaanga
Kangalin orangal eerangalaaga
Mangala mangaiyin manamaganaaga
Indhira veedhiyil oorvalam poga

Male : Kadhal jodi mudhal iravaraiyin kadhavugal mooda
Peran vanthu kadhavugal thiranthen madiyinil aada
Peran sinthum anantha aruviyil nee nanainthaada
Thallaadum ullaasamae

Male : Ini en aasanam oru simmaasanam
Azhagae vaa amuthae ini kanneer illai
Dhinam panneer mazhai maganae vaa arugae

Male : Enthan poovanaththil indru vasantham
Malarae malarae thoongaathae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே
எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே

ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை
தினம் பன்னீர் மழை மகனே வா அருகே

ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே

ஆண் : வைகறை வேளையில் வாசலில் கோலம்
வைரங்கள்தான் அதில் புள்ளிகள் ஆகும்
வானவில் பூமியில் வந்து இறங்கும்
ஜன்னலின் கம்பிக்கு வண்ணங்கள் பூசும்

ஆண் : ஆஹா அன்பே நிலவுகள் உலவிடும் நெடுநிலை மாடம்
காதல் தேரில் தேவதை ஜாதிகள் மாலைகள் போடும்
ஆசை ராணி ரகசிய நதிகளில் அதிசய ஓடம்
சந்தோஷ ராஜாங்கமே……..

ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை
தினம் பன்னீர் மழை மகனே வா அருகே

ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே

ஆண் : என் மகன் கல்விக்கு விருதுகள் வாங்க
கண்களின் ஓரங்கள் ஈரங்களாக
மங்கல மங்கையின் மணமகனாக
இந்திரா வீதியில் ஊர்வலம் போக

ஆண் : காதல் ஜோடி முதல் இரவறையின் கதவுகள் மூட
பேரன் வந்து கதவுகள் திறந்தென் மடியினில் ஆட
பேரன் சிந்தும் ஆனந்த அருவியில் நீ நனைந்தாட
தள்ளாடும் உல்லாசமே

ஆண் : இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை
தினம் பன்னீர் மழை மகனே வா அருகே….

ஆண் : எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here