Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Amman alangaaram hmmmmmm
Anthi pagathorum hmmmmmm
Archanaikku yogam hmmmmmm
Arththajaama neram hmmmmmm
Male : Amman alangaaram hmmmmmm
Anthi pagathorum hmmmmmm
Archanaikku yogam hmmmmmm
Arththajaama neram hmmmmmm
Female : Koondhal thottu paadham kodi nilaa vannam
Koyil kollathaano naayaganin ullam
Koondhal thottu paadham kodi nilaa vannam
Koyil kollathaano naayaganin ullam
Male : Kaarththigai saaralil gramaththu vayalil
Nadhimagal paaigiraal
Aa…aa….kaarththigai saaralil gramaththu vayalil
Nadhimagal paaigiraal
Male : Antha nerththiyai paarkkaiyil
Nangaiyin poovudal theeyena kaaigindraal
Female : Kaainthaval meniyai kadhalan thazhuva
Paniyena kulirgindraal
Aa…Kaainthaval meniyai kadhalan thazhuva
Paniyena kulirgindraal
Female : Iru kannaththu thaamarai kai pada kai pada
Ponnena olirgindraal
Male : Aadai kondu thaenai mooduvathu enna
Female : Aasai kondu yaetho theduvathu enna
Male : Aahaa amman alangaaram aahaa haa
Anthi pagathorum yae hae hae
Archanaikku yogam aahha haa
Arththajaama neram hmmm
Female : Poonthalir oonjalil kaattrenum thalaivan
Adhisayam paarkkindraan
Intha poovaiyin vaayidhazh punnagai meettida
Shrutigal saerkkindraan
Male : Merthisai vaanaththil megaththin madiyil
Kadhiravan saaingindraan
Intha mangaiyin maarbinil mannavan saainthu
Maiyalil thoigindraan
Female : Vaanam konda neelam vanjivizhi kolla
Male : Naanam enna thevai naan ariya solla
Male : Amman alangaaram hmmmmmm
Anthi pagathorum hmmmmmm
Archanaikku yogam hmmmmmm
Arththajaama neram hmmmmmm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : அம்மன் அலங்காரம் ஹ்ம்மம்ம்ம்ம்
அந்திப் பகல்தோறும் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்த்தஜாம நேரம் ஹ்ம்மம்ம்ம்ம்……
ஆண் : அம்மன் அலங்காரம் ஹ்ம்மம்ம்ம்ம்
அந்திப் பகல்தோறும் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்த்தஜாம நேரம் ஹ்ம்மம்ம்ம்ம்……
பெண் : கூந்தல் தொட்டு பாதம் கோடி நிலா வண்ணம்
கோயில் கொள்ளதானோ நாயகனின் உள்ளம்……
கூந்தல் தொட்டு பாதம் கோடி நிலா வண்ணம்
கோயில் கொள்ளதானோ நாயகனின் உள்ளம்……
ஆண் : கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில்
நதிமகள் பாய்கின்றாள்
ஆ….ஆ….கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில்
நதிமகள் பாய்கின்றாள்
ஆண் : அந்த நேர்த்தியைப் பார்க்கையில்
நங்கையின் பூவுடல் தீயெனக் காய்கின்றாள்
பெண் : காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ
பனியென குளிர்கின்றாள்
ஆ….காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ
பனியென குளிர்கின்றாள்
பெண் : இரு கன்னத்து தாமரை கை பட கை பட
பொன்னென ஒளிர்கின்றாள்
ஆண் : ஆடை கொண்டு தேனை மூடுவது என்ன
பெண் : ஆசை கொண்டு ஏதோ தேடுவது என்ன
ஆண் : ஆஹா அம்மன் அலங்காரம் ஆஹா ஹா
அந்திப் பகல்தோறும் ஏ ஹே ஹே
அர்ச்சனைக்கு யோகம் ஆஹ்ஹ ஹா
அர்த்தஜாம நேரம் ஹ்ம்ம்ம்
பெண் : பூந்தளிர் ஊஞ்சலில் காற்றெனும் தலைவன்
அதிசயம் பார்க்கின்றான்
இந்த பூவையின் வாயிதழ் புன்னகை மீட்டிட
ஸ்ருதிகள் சேர்க்கின்றான்
ஆண் : மேற்த்திசை வானத்தில் மேகத்தின் மடியில்
கதிரவன் சாய்கின்றான்
இந்த மங்கையின் மார்பினில் மன்னவன் சாய்ந்து
மையலில் தோய்கின்றான்
பெண் : வானம் கொண்ட நீலம் வஞ்சிவிழி கொள்ள
ஆண் : நாணம் என்ன தேவை நான் அறியச் சொல்ல
ஆண் : அம்மன் அலங்காரம் ஹ்ம்மம்ம்ம்ம்
அந்திப் பகல்தோறும் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்த்தஜாம நேரம் ஹ்ம்மம்ம்ம்ம்……