Singers : P. Susheela and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Malligai poo charam manjalin moganam
Minnida vaadi maattu pen neeyaaga
Engal veettu pen neeyaaga

Female : Malligai poo charam manjalin moganam
Minnida vaadi maattu pen neeyaaga
Engal veettu pen neeyaaga

Female : Maattu pen aavaeno
Ungal veettu pen aavaeno
Maattu pen aavaeno
Ungal veettu pen aavaeno

Female : Kulam vaazha thaan vaazhum
Thaayin ennam thannai
Iraivan thaan niraivettra koodaatho
Idhu pondra thaai veettil maattu pennaai vara
Naan seitha thavamellaam pothaatho
Naan seitha thavamellaam pothaatho

Female : Adi podi unai polae
Puvi meethu pennae illai
En pillai kalyaanam kondaada
Adi podi unai polae
Puvi meethu pennae illai
En pillai kalyaanam kondaada
Vaazhththinaal pothumo
Edhuvum palikkum intha annai sonnaalae

Female : Malligai poo charam manjalin moganam
Minnida vaadi maattu pen neeyaaga
Engal veettu pen neeyaaga

Female : Maattu pen neethaandi
Engal veettu pen neethaandi

Female : Thalai vaazhai ilaiyaada vaazhai panthalittu
Maakkolam pookkolam naan poda
Nilam paarththu nee vanthu naanam ponga ponga
Manavaalan kai saerththu utkaara
Manavaalan kai saerththu utkaara

Female : Ninaiththaalum nadakkaathu oor paarththa unmaiyithu
Yaar yaarukku maappillai yaar yaaro
Ninaiththaalum nadakkaathu oor paarththa unmaiyithu
Yaar yaarukku maappillai yaar yaaro

Female : Yaenadi intha yaekkamo
Female : Enakkul irukkum intha accham pogaathu

Female : Malligai poo charam manjalin moganam
Minnida naanoru maattu pen aavaeno
Ungal veettu pen aavaeno

Female : Malligai poo charam manjalin moganam
Minnida vaadi en maattu pen neethaandi
Engal veettu pen neethaandi

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட வாடி மாட்டுப் பெண் நீயாக
எங்கள் வீட்டுப் பெண் நீயாக

பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட வாடி மாட்டுப் பெண் நீயாக
எங்கள் வீட்டுப் பெண் நீயாக

பெண் : மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண்ணாவேனோ
மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண்ணாவேனோ….

பெண் : குலம் வாழ தான் வாழும்
தாயின் எண்ணம் தன்னை
இறைவன் தான் நிறைவேற்ற கூடாதோ
இது போன்ற தாய் வீட்டில் மாட்டுப் பெண்ணாய் வர
நான் செய்த தவமெல்லாம் போதாதோ
நான் செய்த தவமெல்லாம் போதாதோ

பெண் : அடி போடி உனைப் போலே
புவி மீது பெண்ணே இல்லை
என் பிள்ளை கல்யாணம் கொண்டாட
அடி போடி உனைப் போலே
புவி மீது பெண்ணே இல்லை
என் பிள்ளை கல்யாணம் கொண்டாட
வாழ்த்தினால் போதுமோ
எதுவும் பலிக்கும் இந்த அன்னை சொன்னாலே…..

பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட நானொரு மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண் ஆவேனோ

பெண் : மாட்டுப் பெண் நீதான்டி
எங்கள் வீட்டுப் பெண் நீதான்டி…

பெண் : தலை வாழை இலையாட வாழைப் பந்தலிட்டு
மாக்கோலம் பூக்கோலம் நான் போட
நிலம் பார்த்து நீ வந்து நாணம் பொங்க பொங்க
மணவாளன் கை சேர்த்து உட்கார
மணவாளன் கை சேர்த்து உட்கார…

பெண் : நினைத்தாலும் நடக்காது ஊர் பார்த்த உண்மையிது
யார் யார்க்கு மாப்பிள்ளை யார் யாரோ
நினைத்தாலும் நடக்காது ஊர் பார்த்த உண்மையிது
யார் யார்க்கு மாப்பிள்ளை யார் யாரோ

பெண் : ஏனடி இந்த ஏக்கமோ
பெண் : எனக்குள் இருக்கும் இந்த அச்சம் போகாது

பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட நானொரு மாட்டுப் பெண் ஆவேனோ
உங்கள் வீட்டுப் பெண் ஆவேனோ

பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம்
மின்னிட வாடி என் மாட்டுப் பெண் நீதான்டி
எங்கள் வீட்டுப் பெண் நீதான்டி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here