Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Paasam prema paasam paasam prema paasam
Oru dheivam illaatha verunkoyil dheepam
Irunthaalum ponaalum evarkkenna laabam
Maraiyaathathu prema paasam paasam

Male : Paasam prema paasam paasam prema paasam

Male : Naan konda mogangal ellaamae maayam
Naalaagi ponaalum aaraatha kaayam
Yaarodu solveno naan pattapaadu
Kuyil vanthu seraamal puyal vantha koodu

Male : Kann moodinaal….aa…aa…aa….aa…
Kann moodumpothum idhu urangaatha paasam

Male : Paasam prema paasam paasam prema paasam

Male : Iranthaalum en paasam iravaamal vaazhum
Maru jenmam aanaalum maravaamal serum
Nee ennai thaalaattum thaayaaga vendum
Naan unthan madi meedhu seyaaga vendum

Male : Theyaamalae…ae…ae….ae…ae…ae….aa….aa…aa….
Theyaamal valarum idhu dheiveega paasam

Male : Paasam prema paasam paasam prema paasam
Oru dheivam illaatha verunkoyil dheepam
Irunthaalum ponaalum evarkkenna laabam
Maraiyaathathu prema paasam paasam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்
ஒரு தெய்வம் இல்லாத வெறுங்கோயில் தீபம்
இருந்தாலும் போனாலும் எவர்க்கென்ன லாபம்
மறையாதது பிரேம பாசம் பாசம்…

ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்

ஆண் : நான் கொண்ட மோகங்கள் எல்லாமே மாயம்
நாளாகி போனாலும் ஆறாத காயம்
யாரோடு சொல்வேனோ நான் பட்டப்பாடு
குயில் வந்து சேராமல் புயல் வந்த கூடு

ஆண் : கண் மூடினால்……ஆ….ஆ….ஆ….ஆ…..
கண் மூடும்போதும் இது உறங்காத பாசம்

ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்….

ஆண் : இறந்தாலும் என் பாசம் இறவாமல் வாழும்
மறு ஜென்மம் ஆனாலும் மறவாமல் சேரும்
நீ என்னை தாலாட்டும் தாயாக வேண்டும்
நான் உந்தன் மடி மீது சேயாக வேண்டும்

ஆண் : தேயாமலே..ஏ…ஏ…..ஏ…ஏ…ஏ…..ஆ….ஆ….ஆ…..
தேயாமல் வளரும் இது தெய்வீக பாசம்

ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்
ஒரு தெய்வம் இல்லாத வெறுங்கோயில் தீபம்
இருந்தாலும் போனாலும் எவர்க்கென்ன லாபம்
மறையாதது பிரேம பாசம் பாசம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here