Singers : Kousalya and Hariharan

Music by : Chakri

Lyrics by : Not Known

Male : Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Female : Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
Male : Unnudan vaazhndhidum naatkal
Ullathai neengidavillai
Female : Innum oru jenmathin melae
Nambikkai vandhidavillai
Male : Undhan aruginilthaan
En uyirum ulavudhu
Female : Undhan madiyilthaan
Uyir thuraththa thodangudhu

Male : Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae

Male : Unnai mattum naan kaanum munnae
Ulagam ellaiyae
Kandavudan unnil thulaindhen
Yeno kaanavillaiyae

Female : Vaanavil vannangalaai
Ennullae vandhaayae
Male : Vandhu nizhalaikooda naan
Ezhu varnamaakkinen

Female : Ennai nee ketkaamal
Ullathai koithaayae
Male : Nenjai thirudi thirudithaan
Kaadhal thenai suvaikkiren
Female : Ennil sammadham varum munnae
Nee mundhida koodaadhu
Male : Varudi nerudi thinnaal
Thagattavillaiyadi nee

Female : Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae
Male : Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae

Male : Idi mazhaiyo erimalaiyo thaangiduvomae
Oru yougamo sila nodiyo vaazhndhiduvomae

Female : Pennena man melae
Vandhadhu unnaalae
Male : Undhan sumaiyai sumakkathaan
Iindha mannaai maarinen

Female : Unnaiyae en vaazhvil
Annaiyai kendenae
Male : Cherri pazhathai polathaan
Nenjil vaiththu paarkkiren
Female : Nee pakkam iruppadhanaal
Andha sorkkamum kasakkudhae
Male : Nizhalum unnai pirindhidalaam

Inaindhiruppen naan

Male : Enakku oru dhevathaiyai
Koduthadhu dheivamae
Female : Enakku oru dheivathaiyae
Koduthadhu kaadhalae

பாடகர்கள் : கௌசல்யா மற்றும் ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : சக்ரி

பாடல் ஆசிரியர் : ……………

ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
பெண் : எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
ஆண் : உன்னுடன் வாழ்ந்திடும் நாட்கள்
உள்ளத்தை நீங்கிடவில்லை
பெண் : இன்னும் ஒரு ஜென்மத்தின் மேலே
நம்பிக்கை வந்திடவில்லை
ஆண் : உந்தன் அருகினில்தான்
என் உயிரும் உலவுது
பெண் : உந்தன் மடியில்தான்
உயிர் துரத்த தொடங்குது

ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே

ஆண் : உன்னை மட்டும் நான் காணும் முன்னே
உலகம் இல்லையே
கண்டவுடன் உன்னில் தொலைந்தேன்
ஏனோ காணவில்லையே

பெண் : வானவில் வண்ணங்களாய்
என்னுள்ளே வந்தாயே
ஆண் : வந்து நிழலைக்கூட நான்
ஏழு வர்ணமாக்கினேன்

பெண் : என்னை நீ கேட்காமல்
உள்ளத்தை கொய்தாயே
ஆண் : நெஞ்சை திருடி திருடித்தான்
காதல் தேனை சுவைக்கிறேன்
பெண் : என்னில் சம்மதம் வரும் முன்னே
நீ முந்திட கூடாது
ஆண் : வருடி நெருடி தின்னால்
தெகட்டவில்லையடி நீ

பெண் : எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே
ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே

ஆண் : இடி மழையோ எரிமலையோ தாங்கிடுவோமே
ஒரு யுகமோ சில நொடியோ வாழ்ந்திடுவோமே

பெண் : பெண்ணான மண் மேலே
வந்தது உன்னாலே
ஆண் : உந்தன் சுமையை சுமக்கத்தான்
இந்த மண்ணாய் மாறினேன்

பெண் : உன்னையே என் வாழ்வில்
அன்னையாய் கண்டேனே
ஆண் : செர்ரி பழத்தை போலத்தான்
நெஞ்சில் வைத்து பார்க்கிறேன்
பெண் : நீ பக்கம் இருப்பதனால்
அந்த சொர்க்கமும் கசக்குதே
ஆண் : நிழலும் உன்னை பிரிந்திடலாம்
இணைந்திருப்பேன் நான்

ஆண் : எனக்கு ஒரு தெய்வத்தாயை
கொடுத்தது தெய்வமே
பெண் : எனக்கு ஒரு தெய்வத்தையே
கொடுத்தது காதலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here