Singers : Seerkazhi Govindarajan and P. Susheela
Music by : T. R. Pappa
Lyrics by : Kannadasan
Female : Azhagumayil kolamena
Pazhagum magal varuga
Aadi avrum deepamena
Deva magal vaazhga
Female : Azhagumayil kolamena
Pazhagum magal varuga
Aadi avrum deepamena
Deva magal vaazhga
Female : Ilaya magal pola varum
Pudhiya magal varuga
Inba manai aala varum
Anbu manam vaazhga
Female : Poongodi vilayaada
Engal boomiyil idam undu
Poongodi vilayaada
Engal boomiyil idam undu
Ponmani sarathodu
Vaazhthum punnagai mugam undu
Female : Thaaivazhi uravendru ninaithu
Vaazhiya nalam kondu
Thaangida kilai undu
Mayilai thazhuvida thunai undu
Male : Thanga thattil poosarathodu
Vettrilai kali paakku
Thanga thattil poosarathodu
Vettrilai kali paakku
Vaithu thaai pol unnai
Varuga endrazhaikkum
Ullathai kalippaakku
Kannae ullathai kalippaakku
Male : Kann avan endrae
Kanavan endraar
Kanni thamizhinilae
Kann avan endrae
Kanavan endraar
Kanni thamizhinilae
Andha mannavan nenjam
Mayangida vendum
Vaazhkkai uravinilae
Vaazhkkai uravinilae
Male : Nilathai paarthu
Nadanthathalaal
Nerae paarthadhillai
Nilathai paarthu
Nadanthathalaal
Nerae paarthadhillai
Oru ninaivum kanavum
Ezhai thangai nizhalai thottadhillai
Male : Kannai thandhen
Uyiraiyum thandhen
Pennai tharavillai
Kannai thandhen
Uyiraiyum thandhen
Pennai tharavillai
Ungal nalla manangalai
Enni thandhen veroru ninaivillai
Male : Manjal poosi
Maalai anaindhu
Maaligai varum pennai
Manjal poosi
Maalai anaindhu
Maaligai varum pennai
Than madiyil veithu
Kaathidu vendum
Neengal than annai
Ini neengal than annai
Female : Maami endraal aval
Thaanoru kaalathil
Marumagal thaan allavaa
Kulasaamiyin peyaraal
Sathiyam seidhen
Thaaikkoru magal allavaa
Female : Magalae magalae
Mana magalae
En vaasalil varavendum
En vaazhnaal muzhudhum
Kooda irundhu mangalam pera vendum
En vaazhnaal muzhudhum
Kooda irundhu mangalam pera vendum
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
பெண் : அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
பெண் : இளைய மகள் போல வரும் புதிய மகள் வருக
இன்ப மனை ஆள வரும் அன்பு மனம் வாழ்க
பெண் : பூங்கொடி விளையாட
எங்கள் பூமியில் இடம் உண்டு
பூங்கொடி விளையாட
எங்கள் பூமியில் இடம் உண்டு
பொன்மணிச் சரத்தோடு வாழ்த்தும்
புன்னகை முகம் உண்டு
பெண் : தாய்வழி உறவென்று நினைத்து
வாழிய நலம் கொண்டு
தாங்கிடக் கிளை உண்டு
மயிலைத் தழுவிடத் துணை உண்டு
ஆண் : தங்கத் தட்டில் பூச்சரத்தோடு
வெற்றிலை களிப் பாக்கு
தங்கத் தட்டில் பூச்சரத்தோடு
வெற்றிலை களிப் பாக்கு
வைத்து தாய் போல்
உன்னை வருக என்றழைக்கும்
உள்ளத்தைக் களிப்பாக்கு
கண்ணே! உள்ளத்தைக் களிப்பாக்கு…
ஆண் : கண் அவன் என்றே கணவன் என்றார்
கன்னித் தமிழினிலே
கண் அவன் என்றே கணவன் என்றார்
கன்னித் தமிழினிலே
அந்த மன்னவன்
நெஞ்சம் மயங்கிட வேண்டும்
வாழ்க்கை உறவினிலே
வாழ்க்கை உறவினிலே
ஆண் : நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால்
நேரே பார்த்ததில்லை
நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால்
நேரே பார்த்ததில்லை
ஒரு நினைவும் கனவும் ஏழைத் தங்கை
நிழலைத் தொட்டதில்லை
ஆண் : கண்ணைத் தந்தேன்
உயிரையும் தந்தேன்
பெண்ணைத் தரவில்லை
ண்ணைத் தந்தேன்
உயிரையும் தந்தேன்
பெண்ணைத் தரவில்லை
உங்கள் நல்ல மனங்களை
எண்ணித் தந்தேன் வேறொரு நினைவில்லை
ஆண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து
மாளிகை வரும் பெண்ணை
மஞ்சள் பூசி மாலை அணிந்து
மாளிகை வரும் பெண்ணை
தன் மடியில் வைத்துக் காத்திட வேண்டும்
நீங்கள்தான் அன்னை
இனி நீங்கள்தான் அன்னை
பெண் : மாமி என்றால் அவள்
தானொரு காலத்தில்
மருமகள் தான் அல்லவா
குலசாமியின் பெயரால் சத்தியம் செய்தேன்
தாய்க்கொரு மகளல்லவா
பெண் : மகளே மகளே மணமகளே
என் வாசலில் வரவேண்டும்
என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து
மங்களம் பெற வேண்டும்…
என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து
மங்களம் பெற வேண்டும்…