Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Mullai poovena naam pettra pillai
Muththu maanikkam eedondrum illai
Mullai poovena naam pettra pillai
Muththu maanikkam eedondrum illai
Idhu yaarendru nee sollu kannaa
Gandhiyaa bhuththanaa kannanthanaa…..
Gandhiyaa bhuththanaa kannanthanaa…..
Male : Ini thaalaattu nee paadumpothu
Ivan veeraathi veranena paadu
Ini thaalaattu nee paadumpothu
Ivan veeraathi veranena paadu
Idhu naadengum per sollum thangam
Ramana bheemana karnanthaanaa…..
Ramana bheemana karnanthaanaa…..
Male : Ini thaalaattu nee paadumpothu
Ivan veeraathi veranena paadu
Male : Nallorgal ellorkkum pollaamai vedham
Naalthorum solli tharuvaan
Nallorgal ellorkkum pollaamai vedham
Naalthorum solli tharuvaan
Ingu kallaarkkum kattraarkkum bhagavaanin geedhai
Kaiyaalae alli tharuvaan
Male : Ivan rajangam kondaada poraadum
Kannanin vishvaroobam verum
Vedhaanntham siththaantham pesaatha
En pillai karma veeram
Ramana bheemana karnanthaanaa…..
Ramana bheemana karnanthaanaa…..
Male : Melaana kolgaikku poraadi vaazhvaan
Veeraththai naadu vanangum
Ivan vilaiyaadum puli pola azhakaga nadappaan
Vaazh eendru vaan muzhangum
Female : Konjam yosiththu sollungal
Aasaiku orr pillai muththu polae
Ivan aadattum paadatum aanaalum
Kaanattum nalla naalae
Gandhiyaa bhuththanaa kannanthanaa…..
Gandhiyaa bhuththanaa kannanthanaa…..
Female : Mullai poovena naam petrapillai
Muththu maanikkam eedondrum illai
Male : Idhu naadengum per sollum thangam
Ramana bheemana karnanthaanaa…..
Female : Gandhiyaa bhuththanaa kannanthanaa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை
முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை
முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை
முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை
இது யாரென்று நீ சொல்லு கண்ணா
காந்தியா புத்தனா கண்ணன்தானா…..
காந்தியா புத்தனா கண்ணன்தானா…..
ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது
இவன் வீராதி வீரனென பாடு
இனி தாலாட்டு நீ பாடும்போது
இவன் வீராதி வீரனென பாடு
இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம்
ராமனா பீமனா கர்ணன்தானா…….
ராமனா பீமனா கர்ணன்தானா…….
ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது
இவன் வீராதி வீரனென பாடு
ஆண் : நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம்
நாள்தோறும் சொல்லித் தருவான்
நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம்
நாள்தோறும் சொல்லித் தருவான்
இங்கு கல்லார்க்கும் கற்றார்க்கும் பகவானின் கீதை
கையாலே அள்ளித் தருவான்
ஆண் : இவன் ராஜாங்கம் கொண்டாட போராடும்
கண்ணனின் விஸ்வரூபம் வெறும்
வேதாந்தம் சித்தாந்தம் பேசாத
என் பிள்ளை கர்ம வீரன்……..
ராமனா பீமனா கர்ணன்தானா…….
ராமனா பீமனா கர்ணன்தானா…….
ஆண் : மேலான கொள்கைக்கு போராடி வாழ்வான்
வீரத்தை நாடு வணங்கும்
இவன் விளையாடும் புலி போல அழகாக நடப்பான்
வாழ் என்று வான் முழங்கும்
பெண் : கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள்
ஆசைக்கு ஓர் பிள்ளை முத்து போலே
இவன் ஆடட்டும் பாடட்டும் ஆனாலும்
காணட்டும் நல்ல நாளே…..
காந்தியா புத்தனா கண்ணன்தானா…..
காந்தியா புத்தனா கண்ணன்தானா…..
பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை
முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை
ஆண் : இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம்
ராமனா பீமனா கர்ணன்தானா…….
பெண் : காந்தியா புத்தனா கண்ணன்தானா…..