Singer : P. Bhanumathi
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Female : Oruthiyin kanneeril pirandhaval kannae nee
Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee
Oruthiyin kanneeril pirandhaval kannae nee
Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee
Kannanum unaipolae pillaithanamma
Pirappum valarppum veru veramma
Female : Thottil katti paadiduven
Tholil vaithu thaer izhuppen
Vayadhum azhagum valaradho
Female : En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Female : Urimaiyai kondaada thunaiyillai ennodu
Unai pettra un thaayoo iniyillai unnodu
Urimaiyai kondaada thunaiyillai ennodu
Unai pettra un thaayoo iniyillai unnodu
Iraivan manadhil enna irakkam paaramma
Enakkum unakkum kalam maaruma
Female : Katti unnai naan valarthu
Kanni varai paarkkanum
Undhan annai konda sondham
Pathumaadha bandhamae
Female : En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
பாடகி : பி. பானுமதி
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
பெண் : ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ
ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ
ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ
ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ
கண்ணனும் உனைப்போலே பிள்ளைதானம்மா
பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா
பெண் : தொட்டில் கட்டிப் பாடிடுவேன்
தோளில் வைத்துத் தேரிழுப்பேன்
வயதும் அழகும் வளராதோ……..
பெண் : என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
பெண் : உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு
உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு
உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு
உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு
இறைவன் மனதில் என்ன இரக்கம் பாரம்மா
எனக்கும் உனக்கும் காலம் மாறுமா
பெண் : கட்டி உனை நான் வளர்த்து
கன்னி வரைப் பார்க்கணும்
உந்தன் அன்னை கொண்ட சொந்தம்
பத்துமாத பந்தமே…………
பெண் : என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது