Singers : Malaysia Vasudevan and P. Susheela
Music by : Vijay Anand
Lyrics by : Idhaya Chandran
Female : En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
Unnai paadugiraen arul vendugiraen
Unnai paadugiraen arul vendugiraen
Enakkor neethi tharuvaai
Female : En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
Female : Ullam thavikkirathae
En unarchchigal thudikkirathae
Kanavan pizhai poruththu
Un karunaiyai nilai niruththu
Female : Unaiyae ninaiththaen
En vaazhvinai oppadaiththaen
Dhinamum magizhnthaen
Un poojaikku paal padaiththaen
Female : Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo
Kaaval dheivam neeyae engae nee vaazhgiraayo
Vidiyaa villakkaa ezhuthaa kaaviyaa
Kathaiyaai kanavaai en vaazhvae poevidumo
Kadal mel alaiyaai en aasai thaeinthidumo
En poojaikku nee sollum theerppugalthaan edhuvo
Female : En kungumam kaaththidum devathaiyae
Unnai naan ingu thedugiraen
Male : Moondru kannanathu tholil kudiyirunthum
Irakkam pirakkavillaiyo
Naavukkarasanathu paattu kettavudan
Vishaththai edukkavillaiyo
Male : Vizhigalilae mazhaiyaruvi
Pozhiyuthu paar poonguruvi
Sarasarasarasaravena thaadai pala udaiththida
Palapalapalapalavena palam adhu migunthida
Tharai mela nelinthae varuvaai virainthae
Male : Nadanam purinthaen ezhuvaai nimirnthae
Manamae kaninthaal poo mugam malaraatho
Theerppai uraiththaal
Intha poongodi valaraatho varuvaai
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பாடலாசிரியர் : இதயசந்திரன்
பெண் : என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்
உன்னை பாடுகிறேன் அருள் வேண்டுகிறேன்
எனக்கோர் நீதி தருவாய்…..
பெண் : என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
பெண் : உள்ளம் தவிக்கிறதே
என் உணர்ச்சிகள் துடிக்கிறதே
கணவன் பிழைப் பொறுத்து
உன் கருணையை நிலை நிறுத்து
பெண் : உனையே நினைந்தேன்
என் வாழ்வினை ஒப்படைத்தேன்
தினமும் மகிழ்ந்தேன்
உன் பூஜைக்கு பால் படைத்தேன்
பெண் : காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ
காவல் தெய்வம் நீயே எங்கே நீ வாழ்கிறாயோ
விடியா விளக்கா எழுதா கவியா
கதையாய் கனவாய் என் வாழ்வே போய்விடுமோ
கடல் மேல் அலையாய் என் ஆசை தேய்ந்திடுமோ
என் பூஜைக்கு நீ சொல்லும் தீர்ப்புகள் தான் எதுவோ
பெண் : என் குங்குமம் காத்திடும் தேவதையே
உன்னை நான் இங்கு தேடுகிறேன்
ஆண் : மூன்று கண்ணனது தோளில் குடியிருந்தும்
இரக்கம் பிறக்கவில்லையோ
நாவுக்கரசனது பாட்டு கேட்டவுடன்
விஷத்தை எடுக்கவில்லையோ
ஆண் : விழிகளிலே மழையருவி
பொழியுது பார் பூங்குருவி
சரசரசரசரவென தடை பல உடைந்திட
பலபலபலபலவென பலம் அது மிகுந்திட
தரை மேல் நெளிந்தே வருவாய் விரைந்தே
ஆண் : நடனம் புரிந்தேன் எழுவாய் நிமிர்ந்தே
மனமே கனிந்தால் பூ முகம் மலராதோ
தீர்ப்பை உரைத்தால் இந்த
பூங்கொடி வளராதோ வருவாய்…..