Singer : K. S. Chithra

Music by : S. A. Rajkumar

Lyrics by : Kalidasan

Female : Aadi vanthaen aadi vanthaen
Anju kodaikaari
Paadi vanthaen paadi vanthaen
Paandiyanaar devi

Female : Thaedi vanthaen thaedi vanthaen
Thaen vadikkum poova
Naan irukkum kovilukku
Naalum adhu theva

Female : Naan paambu ena venbu ena
Maarugira saathi
Maari iva sannithiyil
Maaraathu needhi

Female : Oorariyum ulagariyum
Kettu paaru neeyae
Maaya velai aagathammaa
Naane oru maayai

Female : Thottiyaththil azhagu thillaiyil
Trichy nagar uraiyooril
Kaali endru kovil kondu
Kozhuvirukkum ammanum naanae

Female : Pannaariyil samayapuraththil
Punjai valar thanjaiyinil
Maari endru peyar padaiththu
Makkalai kaakkum annaiyum naanae

Female : Agilamum suzhalaathaa
Adiyae en pidiyinilae
Adhisayamum nigazhaathaa
Nenachchaa oru nodiyinilae

Female : Kaigalil sakkaram sangai
Konda govindarajanin thangai
Maarsadai meedhinil gangai
Konda vallalum vallidum nangai
Aadi vanthaen

Female : Aadi vanthaen aadi vanthaen
Anju kodaikaari
Thaedi vanthaen thaedi vanthaen
Thaen vadikkum poova
Naan irukkum kovilukku
Naalum adhu theva

Female : Bambasaththam muzhangum velaiyil
Pambaramaa aadikkittu
Paavaththukku neengi vantha
Bairavi naan paaradiyammaa

Female : Veppanjsela iduppil katra
Vanjiyarkku vaazhvu thanthu
Vaazha vaikka ennai vittaa
Vaiyaththilae yaaradiyammaa

Female : Karungallu silaithaannu
Elithaa neeyum ninaikkaathae
Koduppatha kodukkaama
Maraichchaa ingu nadakkaathae

Female : Poovaiyae poovaiyae kelu
Naan solluraen solluraen puththi
Bhoomiyil yaedhadi kooru
Intha sakthiyai minjira sakthi
Aadi vanthaen

Female : Aadi vanthaen aadi vanthaen
Anju kodaikaari
Thaedi vanthaen thaedi vanthaen
Thaen vadikkum poova
Naan irukkum kovilukku
Naalum adhu theva

Female : Naan paambu ena venbu ena
Maarugira saathi
Maari iva sannithiyil
Maaraathu needhi

Female : Oorariyum ulagariyum
Kettu paaru neeyae
Maaya velai aagathammaa
Naane oru maayai

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : காளிதாசன்

பெண் : ஆடி வந்தேன் ஆடி வந்தேன்
அஞ்சு கொடைக்காரி
பாடி வந்தேன் பாடி வந்தேன்
பாண்டியனார் தேவி

பெண் : தேடி வந்தேன் தேடி வந்தேன்
தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோவிலுக்கு
நாளும் அது தேவ

பெண் : நான் பாம்பு என வேம்பு என
மாறுகிற சாதி
மாரி இவ சன்னிதியில்
மாறாது நீதி

பெண் : ஊரறியும் உலகறியும்
கேட்டு பாரு நீயே
மாய வேலை ஆகாதம்மா
நானே ஒரு மாயை

பெண் : தொட்டியத்தில் அழகு தில்லையில்
திருச்சி நகர் உறையூரில்
காளி என்று கோவில் கொண்டு
கொழுவிருக்கும் அம்மனும் நானே

பெண் : பண்ணாரியில் சமயபுரத்தில்
புஞ்சை வளர் தஞ்சையினில்
மாரி என்று பெயர் படைத்து
மக்களை காக்கும் அன்னையும் நானே

பெண் : அகிலமும் சுழலாதா
அடியே என் பிடியினிலே
அதியசயம் நிகழாதா
நெனச்சா ஒரு நொடியினிலே

பெண் : கைகளில் சக்கரம் சங்கை
கொண்ட கோவிந்தராஜனின் தங்கை
மார்சடை மீதினில் கங்கை
கொண்ட வள்ளலும் வள்ளிடும் நங்கை
ஆடி வந்தேன்

பெண் : ஆடி வந்தேன் ஆடி வந்தேன்
அஞ்சு கொடைக்காரி
தேடி வந்தேன் தேடி வந்தேன்
தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோவிலுக்கு
நாளும் அது தேவ

பெண் : பம்பச்சத்தம் முழங்கும் வேளையில்
பம்பரமா ஆடிக்கிட்டு
பாவத்துக்கு நீங்கி வந்த
பைரவி நான் பாரடியம்மா

பெண் : வேப்பஞ்சேல இடுப்பில் கட்டுற
வஞ்சியற்க்கு வாழ்வு தந்து
வாழ வைக்க என்னை விட்டா
வையத்திலே யாரடியம்மா

பெண் : கருங்கல்லு சிலைதான்னு
எளிதா நீயும் நினைக்காதே
கொடுப்பத கொடுக்காம
மறைச்சா இங்கு நடக்காதே

பெண் : பூவையே பூவையே கேளு
நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி
பூமியில் ஏதடி கூறு
இந்த சக்தியை மிஞ்சிற சக்தி
ஆடி வந்தேன்

பெண் : ஆடி வந்தேன் ஆடி வந்தேன்
அஞ்சு கொடைக்காரி
தேடி வந்தேன் தேடி வந்தேன்
தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோவிலுக்கு
நாளும் அது தேவ

பெண் : நான் பாம்பு என வேம்பு என
மாறுகிற சாதி
மாரி இவ சன்னிதியில்
மாறாது நீதி

பெண் : ஊரறியும் உலகறியும்
கேட்டு பாரு நீயே
மாய வேலை ஆகாதம்மா
நானே ஒரு மாயை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here