Singer : Sujatha

Music by : S. A. Rajkumar

Lyrics by : Ilayakamban

Female : Aa…aa…aa…aa…aa….
Nilavae vaan nilavae vaan nilavae
Vaarththai ondrai pesu
Kannan kaaladiyae radhai ival
Vaazhkai endru kooru

Female : Nilavae vaan nilavae vaan nilavae
Vaarththai ondrai pesu
Kannan kaaladiyae radhai ival
Vaazhkai endru kooru

Female : Penn ullam ennavendru
Ariyaathavano
Bedhai manam padum paattai
Puriyaathavano

Female : Antha kaattrum oru naal
Innisai paadanum
Kannaa en kannaa

Female : Nilavae vaan nilavae vaan nilavae
Vaarththai ondrai pesu

Chorus : Maargazhi pookkalil manthira vaasaththil
Paalagan varuvaan thaenoda
Aandaal nenjil thaenoda
Azhagar vanthaarae neeraada

Female : Vaanamazhai illai endraal
Vaigai nathi yaedhu
Vaigai nathi illaiyendraal
Cholai malar yaedhu

Female : Kangalai moodi kondaal
Velicham irukaathu
Thee naduvil neeye nindraal
Theervu kidaikkaathu

Female : Sooriyan udhippathai niruththikkondaal
Ulagil vidivedhu
Suvaasikkum kaatru vesida maruththaal
Uyirgal kidaiyaathu

Female : Udalai thali uyir ponaal
Enna seivathu

Female : Nilavae vaan nilavae vaan nilavae
Vaarththai ondrai pesu

Female : Unperai enthan moochchil
Ezhuthi vachchen paaru
Azhikkum nilai vanthaal
Enakku aayul irukkaathu

Female : Kadalukku oru sonthmendru
Karai irukku paaru
Kannimagal sontham kolla
Unnayandri yaaru

Female : Innoru thaayaai naanum maari
Unnai thaangiduven
Unnizhagaa vaazhinthida kodi
Jenmam vaangiduvaen

Female : Kannan vaazhntha kaalthadamaai
Mannil vaazhgiraen

Female : Nilavae vaan nilavae vaan nilavae
Vaarththai ondrai pesu
Kannan kaaladiyae radhai ival
Vaazhkkai endru kooru

Female : Penn ullam ennavendru
Ariyaathavano
Bedhai manam padum paattai
Puriyaathavano

Female : Antha kaattrum oru naal
Innisai paadanum
Kannaa en kannaa

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : இளையகம்பன்

பெண் : ஆ…ஆ…..ஆ….ஆ…..ஆ….
நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்றை பேசு
கண்ணன் காலடியே ராதை இவள்
வாழ்க்கை என்று கூறு

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே ராதை இவள்
வாழ்க்கை என்று கூறு

பெண் : பெண் உள்ளம் என்னவென்று
அறியாதவனோ
பேதை மனம் படும் பாட்டை
புரியாதவனோ

பெண் : அந்த காற்றும் ஒரு நாள்
இன்னிசை பாடனும்
கண்ணா என் கண்ணா

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்றை பேசு

குழு : மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்
பாலகன் வருவான் தேனோட
ஆண்டாள் நெஞ்சில் தேனோட
அழகர் வந்தாரே நீராட

பெண் : வானமழை இல்லை என்றால்
வைகை நதி ஏது
வைகை நதி இல்லையென்றால்
சோலை மலர் ஏது

பெண் : கண்களை மூடி கொண்டால்
வெளிச்சம் இருக்காது
தீ நடுவில் நீயே நின்றால்
தீர்வு கிடைக்காது

பெண் : சூரியன் உதிப்பதை நிறுத்திக்கொண்டால்
உலகில் விடிவேது
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்
உயிர்கள் கிடையாது

பெண் : உடலை தள்ளி உயிர் போனால்
என்ன செய்வது

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்றை பேசு

பெண் : உன்பேரை எந்தன் மூச்சில்
எழுதி வச்சேன் பாரு
அழிக்கும் நிலை வந்தால்
எனக்கு ஆயுள் இருக்காது

பெண் : கடலுக்கு ஒரு சொந்தமென்று
கரை இருக்கு பாரு
கன்னிமகள் சொந்தம் கொள்ள
உன்னயன்றி யாரு

பெண் : இன்னொரு தாயாய் நானும் மாறி
உன்னை தாங்கிடுவேன்
உன்னிழலாக வாழ்ந்திடகோடி
ஜென்மம் வாங்கிடுவேன்

பெண் : கண்ணன் வாழ்ந்த கால் தடமாய்
மண்ணில் வாழ்கிறேன்

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்றை பேசு
கண்ணன் காலடியே ராதை இவள்
வாழ்க்கை என்று கூறு

பெண் : பெண் உள்ளம் என்னவென்று
அறியாதவனோ
பேதை மனம் படும் பாட்டை
புரியாதவனோ

பெண் : அந்த காற்றும் ஒரு நாள்
இன்னிசை மாறனும்
கண்ணா என் கண்ணா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here