Singers : Shoba Chandrasekar, K. Swarna and L.R. Anjali
Music by : V. Kumar
Lyrics by : Panju Arunachalam
Male : Sangam saranam katchaamiyae
Dharmam saranam katchaamiyae
Male : Agara mudhala ezhuththellaam aadhi
Bhagavaa mudhattrae ulagu
Chorus : Raghupathi ragava rajaram
Pathitha paavana seethaaram
Eshwara allah thaerae naam
Sabko sanmathi thae bhagavaan
Female : ………………
Female : Manamulla menmalar roja
Adhai mathippavar panditha raja
Manamulla manamenna lesa
Antha manathai arulvaai eesa…
Female : Ingu eththanai methaigal kandom
Naam evarthaan avar vazhi nindrom
Female : Thayiril uraivathu vennai
Manam thanakkul uraivathu unmai
Female : Uyirgalil vaippathu anbu
Dhinam unmaiyai sathamena nambu
Chorus : Ingu eththanai methaigal kandom
Naam evarthaan avar vazhi nindrom
Male : ………………
Chorus : ……………….
Female : Ellaam madhamum ondrae
Adhan ellaa vazhigalum nandrae
Vallamai enbathu perumai
Adhil vanmurai enbathu sirumai
Vanmurai enbathu sirumai
Chorus : Ingu eththanai methaigal kandom
Naam evarthaan avar vazhi nindrom
Female : Arivukku padippathu paadam
Idhil arasiyal kalappathu paavam
Katchigal purivathu kuzhappam
Ilam kaalaiyin sevaigal vazhakkam
Female : Urakkaththai maranthavan thalaivan
Nalla ozhukkaththil valarnthavan thalaivan
Kadanthathai marappavan thalaivan
Than kadamaiyai ninaippavan thalaivan
Than kadamaiyai ninaippavan thalaivan
Female : Ingu eththanai methaigal kandom
Naam evarthaan avar vazhi nindrom
Sathiya deivaththai kondrom
Naam thanithani vazhigalil sendrom
பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர், கே. ஸ்வர்ணா
மற்றும் எல். ஆர். அஞ்சலி
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
ஆண் : சங்கம் சரணம் கட்சாமியே
தர்மம் சரணம் கட்சாமியே
ஆண் : அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு
குழு : ரகுபதி ராகவ ராஜாராம்
பதித பாவன சீதா ராம்
ஈஸ்வர அல்லா தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்
பெண் : ………………….
பெண் : மணமுள்ள மென்மலர் ரோஜா
அதை மதிப்பவர் பண்டித ராஜா
மணமுள்ள மனமென்ன லேசா
அந்த மனதை அருள்வாய் ஈசா…
பெண் : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம்
நாம் எவர்தான் அவர் வழி நின்றோம்
பெண் : தயிரில் உறைவது வெண்ணை
மனம் தனக்குள் உறைவது உண்மை
பெண் : உயிர்களில் வைப்பது அன்பு
தினம் உண்மையை சதமென நம்பு
குழு : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம்
நாம் எவர்தான் அவர் வழி நின்றோம்
ஆண் : ………………………
குழு : …………………………
பெண் : எல்லாம் மதமும் ஒன்றே
அதன் எல்லா வழிகளும் நன்றே
வல்லமை என்பது பெருமை
அதில் வன்முறை என்பது சிறுமை
வன்முறை என்பது சிறுமை
குழு : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம்
நாம் எவர்தான் அவர் வழி நின்றோம்
பெண் : அறிவுக்கு படிப்பது பாடம்
இதில் அரசியல் கலப்பது பாவம்
கட்சிகள் புரிவது குழப்பம்
இளம் காளையின் சேவைகள் வழக்கம்
பெண் : உறக்கத்தை மறந்தவன் தலைவன்
நல்ல ஒழுக்கத்தில் வளர்ந்தவன் தலைவன்
கடந்ததை மறப்பவன் தலைவன்
தன் கடமையை நினைப்பவன் தலைவன்
தன் கடமையை நினைப்பவன் தலைவன்
பெண் : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம்
நாம் எவர்தான் அவர் வழி நின்றோம்
சத்திய தெய்வத்தை கொன்றோம்
நாம் தனித்தனி வழிகளில் சென்றோம்…….